💢 இறக்க கூடாத நட்சத்திரங்கள்
💢அதனால் ஏற்படும் சோகம்
பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி.
கீழ்கண்ட 13 நட்சத்திரத்தில் ஒருவருக்கு இறப்பு ஏற்படக்கூடாது
🌑அவிட்டம்
🌑சதயம்
🌑பூரட்டாதி
🌑உத்திரட்டாதி
🌑ரேவதி
மேற்கண்ட ஐந்து நட்சத்தில் ஒருவர் இறந்தால் ஆறு மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
🌑ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தால் 4 மாதம் வீட்டை பூட்ட வேண்டும்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
🌑கார்த்திகை,
🌑உத்திரத்தில்
இறந்தால் 3 மாதம் வீட்டை பூட்ட வேண்டும்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
🌑மிருகசீரிடம்,
🌑சித்திரை,
🌑புனர்பூசம்,
🌑உத்திராடம்
🌑விசாகம்
நட்சத்திரத்தில் இறந்தால் 2 மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
இந்த நட்சத்திரத்தில் இறந்தால் என்ன நிகழும்?
மேலே குறிப்பிட்ட 13 நட்சத்திரத்தில் இறந்தவருடைய ஆன்மா மேலே குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை இறந்த இடத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும்.
மிகவும் பலகீனமானவரின்(குடும்ப உறுப்பினர்,பிடித்தவர்கள்) உடலில் புகுந்து தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும்.
இயற்கை மரணம் அடைந்தவருடைய ஆன்மாவை காட்டிலும் விபத்து போன்ற கோர மரணம் அடைந்தவருடைய ஆன்மா மிகுந்த வலிமை உடையதாக இருக்கும்.
தகுந்த பரிகாரம் செய்யாதவர்கள் வீட்டில்துர்மரணம்,விபத்து,கருகலைதல், நோய் ,மனக்குழப்பம்,தொழில் நட்டம் போன்ற துயரங்கள் ஏற்படும்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
பரிகாரம்
வீட்டில் இறந்த அறையில் வீட்டு அடைப்பு காலம் முடியும் வரை மாலையில் இருந்து விடியும் வரை எரியும் வகையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கை பின்பு உபயோகப்படுத்த கூடாது.அப்புறப்படுத்த வேண்டும்.
விளக்குக்கு அருகில் அவருக்கு பிடித்த உணவும், நீரையும் வைத்து அதை இறந்த ஆன்மா ஏற்றுகொள்ள வேண்டிக் கொண்டு அந்த அறையை பூட்டி விட வேண்டும்.விடியும் வரை திறக்க கூடாது.
வீட்டு ஹாலில் இறந்தால் இறந்த இடத்தில் மேலே சொன்னவற்றை செய்து தலைவாசலை மூடி விடியும் வரை கதவை திறக்க கூடாது.
பலர் இதற்கு பயந்து கொண்டு வீட்டையே அடைப்பு காலம் வரை பூட்டிச் செல்கின்றனர்.
ஜாதகப்படி துர்ஆவி எளிதில் பிடிப்பவர்களுக்கும் சுபத்துவம் இல்லா ராகு தசா நடப்பவரையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும்.
விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து விபத்து நடப்பது மேலே சொன்ன நட்சத்திரத்தில் ஒருவர் அந்த இடத்தில் பலி ஆனதுதான் காரணம்.
கலிகாலத்தில் இதை அறியாமல் தனக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் மருத்துவமனைக்கு சென்றும் நோய் தீராமல் வீண்விரையங்களை செய்து வருகின்றனர்.
அடைப்பு காலத்தில் இச்சிறிய பரிகாரத்தை செய்யாமல் விட்டதால் சிரமப்படுவோர் தகுந்த தடுப்பு பரிகாரம் உரியவரிடம் (அருளாளர்கள்)
செய்து இன்னலை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் யாரேனும் இறந்து இருந்தால அவர்கள் வீட்டாரை இந்த பரிகாரம் செய்ய சொல்லி அவர்களுக்கு வரும் துன்பங்கள் குறைய உதவவே இந்த பதிவு.
நன்றி.