செவ்வாய், 10 அக்டோபர், 2023

Love love love

 புல்மீல்ஸ் வித் ஜோதிடம்...


ஜோதிடத்தில்.... காதல்....


1/5/9 ஆத்மார்த்தமான / உண்மைான / தெய்வீகமான காதல்... 

இது ஒருவர் மீது நம்பிக்கை வைத்து உண்யைாக முழுமையாக தன்னை அர்ப்பணித்து செய்யும் காதல்... இதில் காமத்தின் அளவு குறைவு... ஆனால் அன்பின் அளவு அதிகம்... அவ்வளவு எளிதில் யாரையும் நம்பாது... ஒருமுறை நம்பினால் கடைசி வரை தான் ஏமாற்றப்பட்டாலும் கூட அவரையே நினைத்து உருகி காதல் செய்யும்....


3/7/11 கண்டதும் காதல் / காமத்திற்கான காதல் / காத்து வாக்குல ரெண்டு காதல்... இது பார்த்தவுடனே பரவசம் ஏற்பட்டு உடனே ஏற்படும் காதல் அன்பு குறைவு.... காமம் அதிகம்...  அதாவது அழகு இச்சை இது அதிகமாக அதிகமாக யாருடனும் காதல் கொள்வார்கள்... உண்மை தன்மை குறைவு... எளிதாக மற்றவர்கள் இவர்களை நம்பி ஏமாந்து போவார்கள்... அதாவது நம்பவைத்து காதல் செய்வார்கள்... அதாவது லக்னத்தின் 3/7/11 எதிர்பாலுக்கு அதாவது ஏழாம் இடத்திற்கு 1/5/9 ஆக வரும்... இவருக்கு கண்டதும் காதல் எதிர்பாலருக்கு  அன்பின் பால் காதல் ஏற்படும்...


2/6/10 கடமைக்கு காதல்... இதில் அன்பும் குறைவு இச்சையும் குறைவு.... எனக்கும் ஆள் இருக்குன்னு சொல்லனும்னு  காதல் செய்வார்கள்... இவர்களுக்கு இது ஒரு கடமையாக இருக்குமே தவிர... உணர்வுகள் குறைவு...


4/8/12 முற்றும் துறந்த காதல் // பாலிஸ்டா சொன்னா திருமணம் கடந்த காதல் / கொச்சையா சொன்னா கள்ளக்காதல்... இது வெளியே சொல்லமுடியாத அதே நேரம் புதுசா டேஸடா வேணும் என்கிற எண்ணத்தில் வரும் மோக காதல் இது... புரியமாதிரி சொல்லனும்னா எல்லா பதார்த்தங்களும் இனிப்பாக இருந்தாலும் உருவங்கள் மாறும்போது வேறு ஒரு புது பதார்த்தத்தை உண்கிறோம் என்கிற எண்ணம் வருகிறது அல்லவா... அது போல இது நம்மை புத்துணர்ச்சி ஆக்கி கொள்ள நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் ஒரு மாறுபட்ட காதல்... 


மேற் சொன்ன விசயம் எதற்கு என்றால்... உங்கள் ஜாதகத்தில் உறவு கிரகங்கள் (உறவுகிரகஙகள் எது என்று ஏற்கனவே பதிவுகளில் உள்ளது) எந்த பாவத்தில் இருந்து காதல் வருகிறது என்று பாருங்கள் அது தான் உங்கள் தற்போதய காதல் நிலை... 


பொதுவாக இதில் 1/5/9 நிலையும் 3/7/11 என்கிற நிலையும் ஒத்து போகும்... ஒருவருக்கு 1/5/9 என்றால் எதிர்பாலுக்கு 3/7/11 ஆக வரும்... இதில் ஈர்ப்பு அதிகம்... இதில் 3/7/11 ல் இருப்பவர் தன் காதலை முதலில் வெளிபடுத்துவார்... 


அதுவே 1/5/9ல் இருப்பவர் சொல்லாமலே காதல் செய்வார்... மானசீக காதல்... ஒரு தலை காதல்...  கொஞ்சம் டைம் வேணும் யோசிச்சு சொல்றேன் என்பார் (அதுக்குள்ள 3/7/11 ல் இருப்பவர் இதயம் படத்துல வர்ற மாதிரி இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே என் இதயமேன்னு பாட்டு பாடுவார்).... 


இப்ப யோசிச்சு பாருங்க இருவருக்கும் ஜாதகத்தில் 1/5/9ல் இருந்து காதல் வந்தால் எப்படி சொல்லுவாங்க... ரெண்டு பேரும தயங்கி தயங்கி கடைசி வரை சொல்லவே மாட்டாங்க இந்த படத்துல காட்ற மாதிரி.... சொன்னாலும் ரொம்ப காலம் கடந்து தான் சொல்லிக்குவாங்க...


இதுவே 3/7/11ல் இருந்து இருவருக்கும் காதல் வந்தால் அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்பது போல் இருவரும் காதலை சொல்வார்கள் அதாவது ஒருவர் சொல்ல உடனே இன்னொருவர் ஓகே பன்னுவாங்க... மிக குறுகிய காலத்தில் நடக்கும்.... (அப்பறம் ஆள் ஆளுக்கு இச்சு தா இச்சு தா உன் கண்ணங்களை பிச்சுதான்னு ரெண்டும் பாடிகிட்டு திரிவாங்க)


அதுவே 2/6/10 என்றால் எதிர்பாலருக்கு 4/8/12 ஆக வரும் இது ஈர்ப்பு குறைவு... கிவ் அண்ட் டேக் பாலிசி அதாவது நீ ஒன்னு குடு நான் ஒன்னு தரேன் என்பது போல் ஏதாவது தேவைக்கான காதல் ஆக வரும்.... அதை தான் கடமைக்கான காதல் என்றோம்... 


இப்போது ஜாதகத்தில் 1/5/9 ல் இருந்து காதல் வந்து எதிர்பால் ஜாதகருக்கு 3/7/11 ல் இருந்து காதல் வந்தால் மேக்சிமம் காதல் சக்சஸ் ஆகும்.... இதனால் தான் 5/7தொடர்பு ஒற்றை படையில் எங்கு இருந்தாலும் காதல் திருமணம் என்றார்கள் அல்லது உறவில் திருமணம் என்றார்கள்... 


அதுவே 1/5/9 அல்லது 3/7/11ல் இருந்து ஒருவருக்கும் எதிர்பாலருக்கு அவர் ஜாதகத்தில் 2/6/10 ல் அல்லது 4/8/12ல் இருந்து காதல் வந்தால் ஆப்ரேசன் சக்சஸ் பேசண்ட் டெத் கதைதான்... எல்லாேமே ஓகே ஆகும் கடைசியில் காதல் மேக்சிமம் தோல்வியில் முடியும்...


அதுவே 2/6/10ல் இருந்து ஒருவருக்கும் எதிர்பாலருக்கு 4/8/12ல் இருந்து காதல் வந்தால் ஈர்ப்பு குறைவு என்றாலும் பிசினஸ் டீல் போல வசதி இருக்கு வேலை இருக்குன்னு காதல்  சக்சஸ் ஆய்டும்... 


இதுல ஸ்பெசல் என்னான்னா ஒருவருக்கு 3/7/11ல் இருந்தும் எதிர்பாலருக்கு 4/8/12ல் இருந்து காதல் வந்தால் சொல்லவே வேண்டாம்... ஒரே பாட்டும் கூத்தும் தான்... டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாரும் இல்ல விளையடா வாடா வில்லாலளன்னு கிளம்பிடுவாங்க... அதாவது இவங்க தான் லிவ்ங் டூ கெதர் லைப் வாழ்கிற ஆட்கள்... திருமணம் இல்லாமல் பிடிக்கும் வரை ஓன்றாக வாழ்பவர்கள்...


இன்னும் குறிப்பாக சொல்லனும்னா உறவு கிரகங்கள் உயிர் ராசியில இருந்து காதல் வந்தால் உண்மையாக இருக்கும்... ஈர்ப்பு காதல் காமம் இருக்கும்... பொருள் ராசியில் இருந்து வந்தால் ஈர்ப்பு காதல் காமம் குறைவு... இதனுடன் மேற் சொன்ன பாவங்கள் தொடர்பு உறுதியாக மேற்சொன்னவை நடக்கும்....


இப்ப உங்களுக்கு ஒரு டவுட் வரும் ஒரு கிரகத்துக்கு ரெண்டு ஆதிபத்தியம் இருக்கே ஒன்னு 1/3/5/7/9/11ம் பாவமாக வநதால் இன்னொன்னு 2/4/6/ 8 /10/12 வருமே அப்ப எதை எடுத்து கொள்வது என்று தானே... ரொம்ப சிம்பிள் சம்பந்தபட்ட கிரகம் மேற்சொன்ன எந்த பாவத்தில் இருக்குன்னு பாருங்க அதை எடுங்க... இல்லன்னா எந்த வீட்டை ஹோல்டிங் செய்திருக்கிறதோ அதை எடுங்க...


இப்ப ரெண்டு டவுட் வரும் உங்களுக்கு ஹோல்டிங் செய்வது என்றால் என்ன? உயிர் ராசி பொருள் ராசி என்றால் என்ன?

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...