வியாழன், 30 மே, 2019

Nesamani trending

Contracter nesamani trending tweet, watsup , Facebook

யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.

நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.

தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.

எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.

யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.

#pray_for_nesamani

நேசமணி யார் அவரின் பின்புலம் என்ன அவரின் வாழ்க்கைபற்றிய ஒரு கண்ணோட்டம் ..
2000 வருடத்தில் வந்த ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கதாபாத்திரமே நேசமணி வடிவேலு அண்ணன் மகன் ரமேஸ்கண்ணா அவர்கள் கையிலிருந்து தவறுதலாக சுத்தியலை வடிவேல் மண்டையில் விழுமாறு காட்சி அமைக்கபட்டிருக்கும் ...
19 வருடங்களுக்கு பிறகு இப்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப நேசமனியின் வாழ்க்கை தொடர்பு ஏற்பட்டுள்ளது
 இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்க்கு தேவையான அனைத்து முகமும் வடவேலுவின் முகத்த வைத்து செய்யபடுகின்றன

திரையில் வராவிட்டாலும் மக்களின் என்னத்திரையில் தினந்தோறும் வந்து போகும் ஹீரோ நம்ம வடிவேலுதான்

செவ்வாய், 28 மே, 2019

School Reopen June 3-06-2019

பள்ளிக்கல்வித்துறை 
அறிவிப்பு!!


பள்ளிகள் திறந்தால் இந்த ஒழுக்க நெறிமுறைகளை  பின்பற்றி தான் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

2.பைக் ., செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

3.லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது.

4.அரைக்ககை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது.

5.தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும் போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

6.கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.

7.டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது.

8.மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.

9.கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.

10.பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11.விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும்.

என்ற 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது...!

எல்லோருக்கும் தெரிந்து அமைச்சர் என்ற வகையில் பணிகளை மேற்கொள்ளும்  ஒரு துறை என்றால் அது பள்ளி கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. செங்கோட்டையன் ஆக தான் இருக்கும்...

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...