அருண் பாண்டியன் நலமாக உள்ளார்=நடிகை கீர்த்தி பாண்டியன் தகவல்
சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அருண் பாண்டியன் தற்சமயம் மெல்ல மெல்ல மீண்ட பிறகு இதயத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்
இந்நிகழ்வை பற்றி நடிகையும் அவருடைய மகளுமாகிய நடிகை கீர்த்தி பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
தனது தந்தையும் நடிகருமான அருண் பாண்டியன் நலமாக உள்ளதாக நடிகை கீர்த்தி பாண்டியன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் நடித்த அன்பிற்கினியாள் படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தந்தையுடனான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன், மேலும் கூறியதாவது:
அப்பா நலமாக, திடமாக உள்ளார். தனக்குப் பிடித்த விவசாயத்தில் மீண்டும் ஈடுபடுகிறார். அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்