ஞாயிறு, 19 டிசம்பர், 2021

AuraFruitDiet #AuraMenu *Day 9⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 9⃣ Vedha - Aura Fruit Diet:*


🎶 


🍒  *காலை:*

*7.30 மணிக்கு:* 

 ஆரா ஜூஸ்

 

*8.30 மணிக்கு:* 

*ஆரா நட் மில்க்*

5 பாதாம், 

5முந்திரி, 

2 அக்ரூட்,

 5 பிஸ்தா, 

2 ஏலக்காய், 

3 பேரீட்சை,

இவை அனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துப் பின் அரைமூடித் தேங்காய் பால் ஊற்றி அரைத்துக் குடிக்கவும்.

 

 


🍒  *மதியம்:* ஆரா பார்லி சாலட்

பார்லி அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து சாதம் போல் வடிக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்து இத்துடன் 

1 கேரட்,

சிறிய துண்டு கோஸ், 

சிறிது வெள்ளரிக்காய் ஊறவைத்த பச்சைப்பயறு 1 கைப்பிடி 

1 கைப்பிடி மாதுளை

 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது உப்பு சிறிது, 

மிளகுத் தூள்,

 1 Spoon செக்கு தேங்காய் எண்ணெய், 

அரை எலுமிச்சைப் பிழிந்து அனைத்தையும் கிளரி சாப்பிடவும்.

 


🍒  *இரவு:*

2 நேந்திர வாழைப்பழத்தைத் தோலோடு இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து  எடுத்துத் துண்டுகளாக வெட்டி தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை போட்டுச் சாப்பிடவும்.


*Note:*

நேந்திரம் கிடைக்கவில்லை என்றால், வேறு பழங்கள் சாப்பிடலாம்.

(அவற்றை வேக வைக்க தேவையில்லை.)

நேந்திரம்பழம் மட்டுமே வேகவைத்து சாப்பிட வேண்டும்




*நன்றி*

🧘‍♂ 

திங்கள், 13 டிசம்பர், 2021

AuraFruitDiet #AuraMenu * Day 8⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

* Day 8⃣ Vedha - Aura Fruit Diet:*

 


🍒  *காலை:*

*7.30 மணிக்கு

*ஆரா ஜூஸ்*

ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை,

ஒரு விதைநீக்கிய நெல்லிக்காய்

1 இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி,

பாதி எலுமிச்சம் பழம் தோலோடு, 


அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து 

வடிகட்டி எடுத்து இளநீரில் கலந்து குடிக்கவும்.

தண்ணீர் கலந்தும் குடிக்கலாம்.  தண்ணீரில் கலக்கும் போது நாட்டு சர்க்கரை கலந்து பருகவும்.

 

 8.30.மணிக்கு 

ஆரா Skin lighting juice *  

1 கீத்து மஞ்சள் பூசனிகாயை தோல் சீவி துண்டுகலாக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் பாதி Lemon பிழிந்து, கொஞ்சம் (10) புதினா இலை சேர்த்து இந்துப்பு உப்பு சேர்த்து 1 டம்லர் நீர் ஊற்றி அரைத்து  எடுத்து வடிகட்டாமல் குடிக்கவும்.

 

🍒  *மதியம்:*

ஆரா க்ரீன் சாலட்

1 துண்டு சுரக்காய் (அல்லது) வெள்ளை பூசனிக்காய், 1 துண்டு வெள்ளரிக்காய், 1 சிரிய குடை மிளகாய், 1 நெல்லிகாய் அல்லது மாங்காய், 1 கைப்பிடி கொத்த மல்லி இலை காம்புடன், 1பச்சை மிளகாய், 5 புதினா இலை துண்டுகளாக நருக்கி Lemon பிழிந்து மிளகு உப்பு சேர்த்து சாப்பிடவும்.

 

ஆரா வெஜ் ஜூஸ்

1கேரட்,1 சிரிய பீட்ரூட், 1 தக்காளி, 1 இன்ஞ் அலவு இஞ்சி தோல் சீவி, 10 புதினா இலை சேர்த்து மிக்ஸியில் போட்டு 1 டம்லர் நீர்  ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்து பின் Lemon பிழிந்து உப்பு சேர்த்து  குடிக்கவும். (அலுவலகம் செல்வோர் தயாரித்து எடுத்து செல்லலாம்)

 

 

🍒  *இரவு:*

*ஆரா க்ரீன் ஸ்மூத்தி*

1 ஆப்பிள்,  1துண்டு வெள்ளரி, சிரிது கொத்தமல்லி இலை, 1 சிரு துண்டு இஞ்சி,  3 Spoon சப்ஜா விதையுடன் மிக்ஸியில் தேங்காய் நீர்/இளநீர் ஊற்றி திக்காக அரைத்து பருகவும்.

 

*நன்றி*


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...