செவ்வாய், 11 ஜனவரி, 2022

கிரகம்

 ஒரு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை *ஆருடம்* கொண்டு சொல்லலாம்


இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை *லக்கினம்* கொண்டு சொல்லலாம்


ஒரு நாளில் நடக்கும் சம்பவத்தை *கோட்சார சந்திரன்* கொண்டு சொல்லலாம்


ஒரு மாதத்தில் நடக்கும் சம்பவங்களை *சூரியனைக்* கொண்டு சொல்லலாம்


ஒரு வருடத்தில் நடக்கும் சம்பவங்களை *குருவை* கொண்டு சொல்லலாம்


ஒன்றரை வருடத்தில் நடக்கும் சம்பவங்களை *ராகு கேதுவை* வைத்து சொல்லலாம்


இரண்டரை வருடத்தில் நடக்கும் சம்பவங்களை *சனியை* கொண்டு சொல்லலாம்


இவை எப்பொழுது என்ன செய்யும் என்பதை *கோச்சார கிரகமும் ஜனன கிரகமும்* எப்போது இணையும் என்பதை வைத்து சொல்லலாம்


அது உறுதியாக நடக்குமா என்பதை *தசா புத்தியை* இணைத்து சொல்லலாம்


🙏🙏🙏🙏🙏🙏

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

## GHAJHA LAKSHMI ###

 ### GHAJHA LAKSHMI ###



### கஜ லட்சுமி ### யோகம் 


சுக்ரன் விந்து ஸ்ரோனிதம் காரகம்,,,,ஆகும்,,


சுக்கிரனை உயிர் சக்தி,,Vital force ஜீவ காந்தம் என்பர்,,,,


வயதான பின்னர் ஒருவர் இறக்கிறார் எனில் இன்னாருக்கு உயிர் பிரிந்தது என்பர்,, 


அந்த உயிர் தான் விந்து ,,, இறந்த பின் விந்து வெளியேறிவிடும்,,,உடலில்,,நிற்காது,,,


நம் உடலில் முக்கியமான உடல் உறுப்புகளில் கண்கள் அதி முக்கியம் வாய்ந்தவை,,,


வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் மற்றும் பொதுவாக கண்களை சுக்ரன் அதிகம் ஆதிக்கம் செய்கிறது,,


சுக்ரன்=ஜீவகாந்தம் 


காந்த கண் அழகி என்போம்,,


சுக்ரன் நல்ல நிலையில் இருப்போருக்கு கண்களின் மேல் சதைகள் பொங்கி இருக்கும்,,


கன்னங்கள் நன்றாக உப்பி இருக்கும்,,


ஜாதகத்தில் சுக்ரன் நல்ல நிலையில் இருக்கிறது என்பதை,,,,


முகத்தில் கண்கள் கன்னங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்,,,


ஒருசிலரின் கண்பார்வைகள் பிறரை காந்தம் போல் ஈர்க்கும்,,,


,இந்த தூண்டல் சுக்கிரனின் வேலையே,,


அழகிய மீன் போன்ற கண்கள் என்று வர்ணனை செய்வோம்,, மீன்,,


 மீனத்தில் சுக்ரன் உச்சம் ஆகிறார்,,,


கயல் விழி என்போம்,, கயல் என்றால் மீன் விழி,,,


கண் பார்வை திறனில் முதல்வகுப்பு 6/6,,,,,


இதை military police medical டெஸ்டில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்,,,,,,


 இங்கு6 என்பது சுக்ரன் எண்,,,,


 தென்னை மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்று தாத்தா பாட்டி சொல்வது உண்டு,,,(இதை பரிகாரமாக ஜோதிடத்தில் பிரயோகம் செய்வதும் உண்டு)


 தென்னை தேங்காய் குரு ,


,3கண்கள் கொண்டது தேங்காய்,,(குருவின் எண்3) 


நீர் ராசி மீன குரு வீட்டில் சுக்ரன் உச்சம்,,


தேங்காய் நிறம் வெள்ளை,, தேங்காய் பால் நிறம் வெள்ளை,,(சுக்ரன்),,,


களத்திர காரகன் சுக்ரன் அதாவது நம் வாழ்க்கை துணை குறிப்பவர்,,, 


கல்யாண முகூர்த்தத்தில் மஞ்சள் நிற தாலி கயிறை தேங்காய் மேலே வைத்து இருப்பார்கள்,, 


அதை தான் எடுத்து கட்டுவோம்,,,,


தேங்காய் குரு அதற்கு மேல் மஞ்சள் தாலி கயிறு குரு,, தேங்காய்குள் சுக்ரன் 


ஜோதிடத்தில் குரு+சுக்ரன் இணைவு இருப்பின் கஜ லட்சுமி யோகம் என பொருள்


கஜ என்றால் யானை (குரு)


லட்சுமி என்றால் சுக்ரன்,,,


சாதாரண தேங்காய் பாலில் இருக்கும் liquid fat விந்து உற்பத்தி செய்யும்,,,,


 அந்த தேங்காய் பாலில் கொண்டை கடலை (குரு)யை அவித்து உண்டால் தாது புஸ்டி ,,,,ஆகிவிடும்,,(மருந்து குறிப்பு)


குரு+சுக்ரன்=தடிமனான தரமான ஆரோக்கியமான விந்து மற்றும் ஆரோக்கியமான ஸ்ரோனிதம் உற்பத்தி,,, (நாடி ஜோதிட கூற்று)


கோட்சார குரு சுய ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்யும் போது திருமணம் நடைபெறும் ,,,,என்ற ஜோதிட விதியும் உண்டு,,,


இந்த கால இடைவெளியில் தேங்காய் மேலே வைத்த தாலி கயிறு நம் முன் பெரும்பாலும் வந்து விடும்,,,,,


காமத்துக்கு தேவையான விந்து ஸ்ரோனிதம் ஆரோக்கியமான சூழல் உருவாக்கும் காலம் தான் கோட்சார குரு சுய ஜாதக சுக்கிரனை பார்வை செயும் காலம்,,ஆகும்,,,,


குரு பலம் வந்தால் தன்னாலே விந்து உயிர் அணுக்கள் கூடி விடும் ,, பெண்ணும் கிடைத்து விடும்,,,


கஜ லட்சுமியை வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைக்க நலம்,,, 


கஜலட்சுமியை வீட்டில் குடியேற்றுகிறோமோ இல்லையோ ,


,,,உடலில் குடியேற்றி விட வேண்டும்,,,,,


,(தேங்காய் கொண்டைகடலை உண்ண நலம்)


புது மாப்பிள்ளைய பாத்ததும் கல்யாண கலை வந்துருச்சு என்போம்,,அல்லவா,,,இதுக்கு கோட்சார குரு சுய ஜாதக சுக்ரன் தொடர்பே காரணம்,,,


கல்யாணம் முடிச்சவன பார்த்தாலும் ஆளு இன்னும் அப்படியே புது மாப்ள மாதிரி இருக்கிற,,என்போம்,,,,,


வயதானவர்களுக்கு  கோட்சார குரு சுய ஜாதக சுக்கிரனை பார்க்கும் போது ஆரோக்கியமாக இருப்பர்,,,,


உயிர் தன்மை அதிகம் கொண்டு இருப்பர் ,,அவ்வளவே,,,


இவரை பாத்து புது மாப்ள மாதிரி இருக்குற என்று கேட்க முடியாது புரிந்து கொள்ள வேண்டும்,,,காலன் என்ற சனியை நினைவில் வைத்து கொண்டு புரிந்து கொள்ளனும்,,


கஜ லட்சுமி யோகம் குரு சுக்ரன் இணைவு இருப்பவர்களுக்கு உண்டு,,,


தேங்காய் பாலில் கொண்டை கடலை இட்டு அவித்து உண்டால் எப்பவும் ஆரோக்கிய மாக புது மாப்பிள்ளை போலவே இருக்கலாம் ,,,,,


கஜ லட்சுமி புகைப்படம் அதாவது யானையும் லட்சுமியும் இணைந்த புகைப்படத்தை,,,,,


 குரு சுக்ரன் இணைவு பெற்றவர்கள்


 மற்றும் குரு சுக்ரன் பார்வை தொடர்பு பெற்றவர்கள்,, 


குரு சுக்ரன் பரிவர்த்தனை பெற்றவர்கள்


 பணம் வைக்கும் பெட்டியில் வைத்து கொள்ளலாம்,,,,பூஜை அறையில் வைத்து கொள்ளலாம்,,,,,


மற்றவர்களை விட இவர்கள் வைத்து கொள்வது நல்லது,,


 because குரு+சுக்ரன் இணைவு சிலருக்கு மட்டும் பிரிவினை தருகிறது,,,,,


ஆகையால் கஜலட்சுமி யோகம் பெற்றவர்கள்,, கஜலட்சுமியை  பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது அவசியம் என்று பதிகிறேன் ,,,,


இதை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம்,,,


தன லட்சுமி எந்திரம் மகா லட்சுமி எந்திரம் என்று எல்லாரும் ஆயிரம் கணக்கில் வாங்க தானே செய்கிறோம்,,,


எந்திரம் வேலை செய்யுதோ இல்லையோ 


லட்சுமி என்ற 4எழுத்து perfect ஆக வேலை செய்யும்,,,


கஜ லட்சுமியை வீட்டிலும் குடியேற்றுவோம் 


உடலிலும் குடியேற்றுவோம்,,,


தேங்காய் உடைத்ததும் வேகமாக பால் எடுத்து உண்ண கெட்ட கொழுப்பு இராது,,


அது நல்ல கொழுப்பே,,, 


அதனால் தான் கோவிலில் தேங்காய் விடலை இட்ட்டதும் வேகமாக பொறுக்குவோம்,,


,எல்லாமே liquid fat,, நல்ல fat,,


 தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு சமம் என்ற கூற்றும் உண்டு,,


 immune system நன்றாக வேலை செய்யும்,,


,முன்பு இடியாப்பம் செய்து அதற்கு தேங்காய் பால் ஊற்றி சாப்பிடுவோம்,,,


 இப்போ noodles தான் சாப்பிடுறோம்,,,


 நம் ஒருவரின் சோம்பேறி தனம் தான் உலகில் பலருக்கும் profit கொடுத்து கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்,,,,,


தேங்காய் பாலில் கொண்டைக்கடலை இட்டு அவித்து உண்ண விந்து உற்பத்தி அதிகம் ஆகும்,,, அதாவது ஜீவ காந்த சக்தி ,,,அதிகம் ஆகும்,,,


நாம் நினைத்ததை அடைய ஒரு ஈர்ப்பு விசை positive எண்ண அலைகள் மனதில் இருக்க வேண்டும் அல்லவா,,, அதே போல நம் உடலில் விந்து ஸ்ரோனிதம் நிலைபெற்று இருக்கவே வேண்டும்,,,


விந்து விட்டவன் நொந்து கெடுவான் என்பது பழமொழி,,,


விந்து என்பது நம் செல்வம்,,


விந்து என்பது நம் ஜீவன்,,,


ஜீவனே சிவன் ,,,,


ஓம் நம சிவாய 


ஓம் கஜ லட்சுமி போற்றி ,,,,,,


சதிஷ் குமார்

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...