சற்று நிற்க..
வருகிற 6,4,2021 தமிழக
சட்டசபை தேர்தலன்று
அன்றைய கோசார நிலவரம் இது
என்று நினைக்கிறேன்.!
அன்றைய நாளில் சனி பகவானின்
ஆதிக்கத்தை நீங்களே பாருங்களேன்.!
உடல்காரகன் என்கிற சந்திரனுடன்
சேர்க்கை பெற்ற சனி பகவான்,
அதே சந்திரனின்
நட்சத்திரமான திருவோண
நட்சத்திர காலில் அமர்ந்த சனி,
அன்றைய நாளில் சந்திரன் பயணம்
செய்யும் திருவோண நட்சத்திரத்தில்
அமர்ந்த சந்திரனை
தன்னுடைய கட்டுப்பாட்டில்
கொண்டுவந்த சனி,
உயிர்காரகன் என்கிற
ஆத்ம காரகன் சூரியனை தன்னுடைய
3,ம் பார்வையில் நசுக்கிய சனி,
போதாகுறைக்கு
ராகு பகவானுக்கு வீடு கொடுத்த
சுக்கிரனையும் நசுக்கிய சனி,
மகர ராசிக்கு
ராஜயோகதிபதிகளான சுக்கிரன் புதன்
மற்றும் சூரியனையும் சேர்ந்து
தன்னுடைய 3,ம் பார்வையில் அடக்கி
தன்னுடைய முழுமையான
ஆதிக்கத்தை வெளிப்படுத்த துவங்கி
விடுகிறார் சனி பகவான்.!
அதேபோல்
செயல்காரகன் என்கிற அதிகாரி செவ்வாயும் ராகு பகவானுடன் சேர்க்கை
என்பதையும் நீங்கள் கவனிக்க
வேண்டும்.!
அதாவது ,உயிர் சூரியன் உடல்
சந்திரன் செயல் செவ்வாய்
புத்தி புதன்..இப்படி உடல் பொருள் ஆவி
என அனைத்தையும் தன்னுடைய
கட்டுப்பாடில் சனி பகவான் எடுத்துக்
கொள்கிறார்.!
இப்படிப்பட்ட கோசார கிரக
சூழ்நிலை என்பது..
தற்போதைய ஆளுங்கட்சிக்கு சாதகமாக
இல்லை.!
ஆளுங்கட்சியினர் மிக கடுமையாக
தேர்தல் பணியாற்றவேண்டும்.!
அதேபோல் அன்றைய நாளில்
குரு பகவானின் பார்வை பலம் என்பது
எந்த கிரகத்தின் மீதும் இல்லை
என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.!
இதன் பலன் என்னவென்றால்
தன்னுடைய கூட்டணி கட்சியான
மத்தியபாராதீய ஜனதா.கட்சி எப்படியும்
தங்களை வெற்றி பெறவைத்து
விடுவார்கள் என்கிற நம்பிக்கையில்
ஆளுங்கட்சியினர்கள் இருப்பார்கள்
என்று அர்த்தம்.!
இதுவும் தவறு.!
அதாவது நீங்கள்
பிரதமரை முன்னிலைபடுத்தி விட்டு
நீங்கள் தேர்தல் வேலையில்
சுனக்கம் காட்டினால் அதற்கு பிரதமர்
எப்படி பொறுப்பு ஏற்கமுடியும்.?
இன்னும் மூன்று மடங்கு கடுமையான
உழைப்பு ஆளும் கட்சியினர்களுக்கு
கண்டிப்பாக தேவை.!
மற்றபடி ஆளும்..அதிமுக..தொடர்ந்து
மூன்றாவது முறையாக ஆட்சியை
தக்கவைக்க வாழ்த்துகிறேன்.!
அதேபோல் இம்முறை கடுமையான
இக்கட்டான சூழ்நிலையில்
கட்டாய வெற்றி பெற போராடும்
திமுக.வினர்களும் வெற்றி பெற
வாழ்த்துகிறேன்.!
நன்றி