புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிராக பலவேறு போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றுவருகிறது ..
2004 க்கு பிறகு பணியில் இணைந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய திட்டமான தொழிலாளர்கள் பங்களிப்பு திட்டமான பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு கொன்டு வந்தது அதனடிப்படையில் தொழிலாளர்கள் பத்து சதவீதமும் அரசு பத்து சதவீதம் அளித்து அந்த பணமானது பங்கு மார்கெட்டில் முதலீடு செய்யபட்டு ஓய்வு பெறும்போது வருகிறபணத்தை வாங்கி செல்லவேண்டும் என்கிற நாசகார திட்டத்தை நிறைவேற்றி நடைமுறையில் உள்ளது.......
அத்திட்டத்தை களையும் பொருட்டு பலவேறு போராட்டங்கள் ...
கடந்தமாதம் நடைபெற்ற NJCA அமைப்பானது மார்ச் 13 ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா வேலைநிறுத்த அறைகூவல் ஆர்பாட்டம் நட்த்துவதாக தீர்மானம் இயற்றி மத்திய அரசிடம் அளித்தது ..
மத்திய அரசிடம் இருந்து நேற்று மாலை (05-03-2019 ) அன்று சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அளிக்கபட்டுள்ளது..
அதில் மார்ச் 13 அன்று விடுமுறை எடுத்தாலோ அல்லது போராட்டத்தில் பங்கு கொன்டாலோ உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது ...