புயலுக்கு பெயர் வைக்கும் நாடுகள்
வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது
தெரியுமா..?
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா உருவாக்கியது.
1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டத் தொடங்கியது. கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. இந்த 8 நாடுகளில் கடற்பரப்பில் உருவாகும் புயலுக்கு பெயர் சுழற்சி முறையில் பெயர்கள் வைக்கப்படுகிறது.
கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை உண்டாக்கிய ’கஜா’ புயலின் பெயர் இலங்கை பரிந்துரைத்தது. இதன்பின்னர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ’பேத்தாய்’ புயலின் பெயர் தாய்லாந்து நாடு கொடுத்தது.
தற்போது, வங்கக்கடலில் உருவாக உள்ள ’ஃபானி’ புயலின் பெயர் வங்காளதேசம் பரிந்துரைத்தது. இதற்கு அடுத்ததாக உருவாக உள்ள பெயருக்கு இந்தியா பரிந்துரைத்த ’வாயு’ என்று சூட்டப்படும். அதன் பின்னர், மாலத்தீவு பரிந்துரைத்த ’ஹிகா’ என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக