வியாழன், 26 மார்ச், 2020

Sri Kala hasthi Dosam //Yogam

காலசர்ப்ப யோகம்
____________________

நவகிரகங்களில் அதிக வலிமை உடையவர்கள் ராகு ,கேதுக்களே ஆவார்கள்.
நவகிரகங்களில் ஒளிமிகுந்த, கண்ணால் காணக்கூடிய சூரிய ,சந்திரர்களையே கிரகணம் பண்ணக்கூடிய வலிமை இந்த ராகு கேதுக்களுக்கு உண்டு.

இந்த ராகு-கேதுக்கள் தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனையும் தன்னைப் பார்த்த கிரகங்களின் பலனையும் கவர்ந்து  அவர்களின் பலனை எல்லாம் தன்னுடைய தசையில் இவர்களே தருவார்கள்.

இந்த அரவங்கள், தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போலவே செயல்படுவார்கள்...  இந்த காலசர்ப்ப யோகத்தின் ஹீரோக்கள் இந்த ராகு-கேதுக்களேதான்.

ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும்  (லக்னம் உள்பட) ராகு கேதுக்குள் அகப்பட்டு கொண்டால் அது காலசர்ப்ப யோகம் ஆகும். நீ யோகத்தில் பிறந்தவர்களுக்கு 32 வயதுக்கு பிறகே யோகம் உண்டாகும்.

இந்த யோகத்தில் அனைத்து கிரகங்களும் ராகுவை நோக்கிச் சென்றிருந்தால் 32வயதுக்கு மேற்பட்ட
பிறகே யோகத்தையும், அந்தஸ்தையும், அதிர்ஷ்டத்தையும் தருகிறது. புகழைத் தருகிறது, ஆயுளை தருகிறது .

என்னை பொருத்தவரை ஒரு ஜாதகத்தில் கால சர்ப்ப யோகம் இருப்பதை நல்லதாகவே கருதுகிறேன். என்ன காரணம் என்றால் இளமையில் கஷ்டப்பட்டு 32 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கையை அடைய இந்த யோகம் காரணமாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு முதலில் நல்ல படிப்பினைகள் வேண்டும். அதற்கப்புறம் செல்வத்தை தர வேண்டும் அப்போதுதான் அந்த செல்வத்தை வைத்து காப்பாற்றுவான்.

பணத்தின் அருமை என்னவென்று தெரியாத ஒருத்தனுக்கு கஷ்டம்னா என்னவென்றால்  என்னவென்று தெரியாத ஒருத்தனுக்கு, சின்னவயதில், இளம் வயதில் ,செல்வத்தை கொடுத்தால் அதை அவன் வைத்து காப்பாற்றத் தெரியாது. ஊதாரித்தனமாக செலவழித்து விடுவான். இந்த யோகம் உள்ளவர்கள் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்துவிடுவார்கள். இவர்களின் இளமை காலம் மிகுந்த சோதனையும்  வறுமையும் மிகுந்தது..

இவர் களின் பிற்பகுதி வாழ்க்கையில் அரசர்களைப் போல வாழ்கிறார்கள் அரசாங்கத்திலும் சாதிக்கிறார்கள்.. செல்வ சீமானாக வாழ்கிறார்கள்
என்றால் அது கொஞ்சமும் மிகையில்லை..

1979 ம்வருடம் ஏப்ரல் மாதம் 29 ந்தேதி காலை 10 மணிக்கு பிறந்த எனக்கு காலசர்ப்ப யோகம் உள்ள ஜாதகம் ஆகும். எனக்கு நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றாலும் ராகு கேதுக்குள் அடைபட்டு விட்ட காரணத்தினால் எனக்கு எல்லா நல்லவைகளும் 32 வயதுக்கு பிறகுதான் நடந்தது.

எனக்கு லக்னத்திற்கு இரண்டு எட்டில் ராகு கேதுக்கள் இல்லை. ஒன்று, ஏழில் ராகு கேதுக்கள் இல்லை. சுக்கிரனுடன் ராகு கேதுக்கள் இல்லை. சந்திரனுக்கு 2 ,8 லோ,, ஒன்று எழிலோ ராகு கேதுக்கள் இல்லை..
செவ்வாய் தோஷம் இல்லை. சுக்கிரன் ரொம்பவும் பாதிப்படையவும் இல்லை..2,7,8 ல் பாவிகள் இல்லை.பாவிகள் பார்க்கவும் இல்லை
ஆனாலும் திருமணம் லேட்டாக காரணம் எனது ஜாதகத்தில் உள்ள காலசர்ப்பதோஷம் என்றால் அது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை.

எனக்கு 33 வயதுக்கு பிறகு திருமணம் நடைபெற்று , 35 வயதில் பையன் பிறந்தான்.. இந்த கால சர்ப்ப தோஷத்தில் நான்கு கிரகங்கள் ஆட்சி பெற்றிருந்தாலும், நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் ராகு கேதுக்குள்
அடைபட்டு விட்டால், அகப்பட்டுக் கொண்டால் அந்த ஆட்சி பெற்ற கிரகமும் உச்சம் பெற்ற கிரகங்கள் கூட பலமிழந்து விடும். 32 வயதுக்குப் பிறகே  இது நிவர்த்தி ஆகும்..

சிலர் சொல்லலாம். கால சர்ப்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகத்தில் 32 வயதுக்குப் பிறகு மறுபடியும் மோசமான தசாபுக்திகள் வந்தால் , ஆறுக்கும் எட்டுக்கும் உரிய தசைகள் தொடர்ந்து வந்தால் காலசர்ப்ப யோகம் வேலை செய்யுமா என்று நீங்கள் குறுக்கு கேள்வி  கேட்பீர்களே ஆனால்??

செய்யாது என்று தான் சொல்வேன். ஒரு யோகமான ஜாதகத்தில் நல்ல தசை கள் வாழ்க்கையில் வரவேண்டும் என்ற விதிப்படி இந்த கால சர்ப்ப யோகம் அதுவும் குறிப்பாக கிரகங்கள் ராகுவை நோக்கி சென்றிருக்கும் போது கண்டிப்பாக நல்ல தசைகள் நிச்சயம் வரும். அப்படி வரவில்லை என்றால் அது அவன் கர்மவினை. அதற்கு நாம ஒன்றும் செய்ய முடியாது.

உங்களின் வாதப்படியே "சந்திர அதி யோகம் "இருந்து  யோகத்தை தரக்கூடிய தசைகள் வராவிட்டால் அந்த சந்திர அதி யோகத்தால் என்ன பயன்?? தர்மகர்மாதிபதி யோகம் இருந்து தர்மகர்மாதிபதிகளின் தசை நடைமுறையில் வரவே வராது என்றால் அந்த யோகம் இருந்து என்ன பயன்?
உங்கள் ஜாதகத்தில் குரு நல்ல ஆதிபத்தியம் வாங்கி ஹம்ச யோகத்தில் மிக அருமையாக உள்ளநிலையில் குருதசையே வரவில்லை என்றால் "ஹம்சயோகம்" இருந்து என்ன பயன்??
இது காலசர்ப்ப தோசத்திற்கும் பொருந்தும்..

என்னுடைய அனுபவத்தில் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் அமைவது நல்லதே..
இளமையில் கஷ்டப்பட்டு படிப்பினைகளைப் பெற்று அனுபவங்களை பெற்று முதுமையில் கடுமையாக உழைத்து முன்னேறி விடுவான்.

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...