திங்கள், 5 ஜூலை, 2021

Rs.1,000 allowance for family heads

 

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000  


உதவித் தொகை




யாருக்கெல்லாம் கிடைக்கும்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டத்தின் அறிவிப்பு வெளியான பிறகு, புதிய வதந்தி பரவத்தொடங்கியது. ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவரின் பெயரில் ஆண் பெயர் இருந்தால், இந்த உதவித் தொகை கிடைக்காது என்ற வதந்தி பரவியது. மக்கள் இதை உண்மை என்று நம்பி, பல ரேஷன் அட்டை பயனர்கள் தங்களின் ரேஷன் அட்டையில் இருக்கும் ஆண் குடும்பத் தலைவர் பெயரை ஆண்லைன் மூலமாக குடும்பத் தலைவி பெயர்களுக்கு மாற்றம் செய்து வருகின்றனர்.

வெளியான புரளியால் மக்கள் குழப்பம்.. உணவுப் பொருள் விநியோக துறை சொன்ன உண்மை என்ன? குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உதவித் தொகை திட்டத்தின் அறிவிப்பிற்குப் பின்னர், இது போன்ற விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏராளமாகக் குவிந்துள்ளது என்று உணவுப் பொருள் விநியோக துறை தெரிவித்துள்ளது. இன்னும், சிலர் புதிய ரேஷன் அட்டையை வாங்கவும் விண்ணப்பித்துள்ளனர் என்று உணவுப் பொருள் விநியோக துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 5 வகையான ரேஷன் அட்டைகள் இப்படி குழப்பங்களைத் தவிர்க்க, யாருக்கெல்லாம் இந்த உதவித் தொகை கிடைக்கும் என்பதை தற்போது உணவுப் பொருள் விநியோக துறை விளக்கியுள்ளது.தமிழ்நாட்டில் மொத்தமாக 5 வகையான ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உபயோகத்தில் இருக்கும் ரேஷன் அட்டை ஸ்மார்ட் காடுகளில் இருக்கும் புகைப்படத்துக்குக் கீழே PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என ரேஷன் அட்டைகளின் குறியீடுகள் காணப்படும்.

 எந்த-எந்த அட்டைகளுக்கு என்ன-என்ன சலுகைகள் கிடைக்கும்? இதில் PHH என்ற குறியீட்டைக் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு மட்டும் தான் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்க அனுமதி கிடைக்கிறது. இரண்டாவதாக இருக்கும் PHH- AAY என்ற குறியீட்டைக் கொண்ட அட்டைகளுக்கு, ரேஷன் கடைகளில் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

 இந்த ரேஷன் அட்டை பயனர்களுக்கு அரிசி கிடையாது; ஆனால் சர்க்கரை உண்டா? மூன்றாவதாக NPHH என்ற குறியீட்டைக் கொண்ட அட்டைகளுக்கு அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு. NPHH-S என்ற குறியீடு கொண்ட அட்டைகளுக்கு ரேஷன் கடைகளில் அரிசியைத் தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்க அனுமதி உண்டு.

 இந்த ரேஷன் அட்டை பயனர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது இறுதியாக, NPHH-NC என்ற குறியீட்டைக் கொண்ட அட்டைகளுக்கு ரேஷன் கடைகளில் எந்தப் பொருட்களும் வழங்கப்படமாட்டாது. இந்த அட்டைகளைப் பயனர்கள், அடையாள அட்டையாகவும் முகவரிச் சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
உங்கள் ரேஷன் அட்டையில் இந்த குறியீடுகள் இருந்தால் ரூ.1000 நிச்சயமாக கிடைக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அறிவிப்பின் படி, PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுள் கொண்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டுமே குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று உணவுப் பொருள் விநியோக துறை தெரிவித்துள்ளது.

தேவையில்லாமல் ஆன்லைனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் NPHH-S மற்றும் NPHH-NC ஆகிய 2 வகை அட்டை பயனர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது என்பதையும் உணவுப் பொருள் விநியோக துறை தெளிவாக்கியுள்ளது. இதனால், தேவையில்லாமல் யாரும் ரேஷன் அட்டைகளில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...