#மரண பயம் எப்பொழுது ஏற்படும், ,
#அமானுஷ்யங்கள்
#பயத்தைப் போக்கும் வாழ்வியல் நடைமுறைகள் ..
👉ஒவ்வொரு மனிதருக்கும், வளமான வாழ்வு நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே விருப்பம் ..
👉விபத்து கண்டம், மேலிருந்து கீழே விழுதல் ,,எதிரிகளால் தொல்லை, ,கடன் தொல்லையால் அவதி, ,
👉தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படக்கூடிய நோயினால் வரும் பெரிய பாதிப்புகள் இவைகளால் ஒரு மனிதருக்கு வாழ்க்கை வெறுமையாகவும் பய உணர்ச்சியும் ஏற்படுகிறது ..
👉ஒருவருக்கு கை கால் முறிவு விபத்து கண்ட முதலானவை ஏற்படும்பொழுது அவர் மட்டுமல்லாது அவரை சுற்றியுள்ள குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள்..
ஜோதிடரீதியாக, ,
☀6,, 8 தொடர்புடைய தசா புக்தி காலங்கள் ..
☀மறைவு ஸ்தானங்களில் நின்று ராகு தசை அல்லது கேது தசை நடைபெறும் பொழுதும், ,#kirthika#
☀சுப கிரகமாக இருந்தாலும் குரு அவயோகியாக வந்து ராகு சாரம் பெற்று தசா நடக்கும் பொழுதும், ,
☀சுபர் தொடர்பு இல்லாத சனி தசா ராகு-கேது தொடர்பு ஏற்பட்டு நடக்கும் பொழுதும்
☀செவ்வாய் உச்சம் அல்லது நீச்சம் அடைந்து எவ்வித தொடர்பும் இன்றி இருக்கும்பொழுது விபத்துகளினால் பய உணர்வு ஏற்படுதல்,
☀குறிப்பாக எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் சுபர் தொடர்பு அல்லாமல் வலுவிழந்த நிலையில் பாபகர்த்தாரி யோகத்தில் நின்று தசா நடத்தும் பொழுதும் ஒருவருக்கு மரண பயம் என சொல்லக்கூடிய மேலே கூறிய நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது, ,
☀லக்னம் லக்னாதிபதி வலுவிழந்து பாபகர்த்தாரி யோகத்தில் நின்று தசா நடத்தினாலும், ,ஜாதகர் எழுந்திருக்க முடியாத நிலையில், ,நோய்வாய்ப்படுதல் போன்றவை நிகழும், ,#kirthika#
☀தசா நாதனும் புத்தி நாதனும் 6,,8 ஆக அமைந்து ,,லக்ன அவயோகராக வரும்பொழுது மேலிருந்து கீழே விழுதல் ,உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்படுகிறது..
#வாழ்வியல் நடைமுறையில் சில பரிகாரங்கள் ..
👉லக்னம் லக்னாதிபதி வலு, ,அதன் அதிதேவதை களை முறை யாக வணங்குதல், ,
👉பொதுவாக 6,,8 தசாபுக்தி நடக்கும் பொழுது (அதன் அதிபதி தொடர்பு பெற்ற தசா நடக்கும் பொழுதும்) கூடுமானவரை புதிய முதலீடுகளை தவிர்த்து, வீண் வம்பு சண்டை வழக்குகளிலிருந்து தற்காத்துக் கொள்வதே சாலச்சிறந்தது ..
👉ராகு கேது தொடர்புடைய தசாபுக்தி காலங்களில் அமானுஷ்யமான எண்ணங்கள் சிந்தனைகள் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் பொழுது, ,முடிந்தவரை கால பைரவ வழிபாடு, ,தெரு நாய்களுக்கு அசைவ உணவுகள் வாங்கித் தருதல், ,அம்பாள் வழிபாடு போன்றவை நன்மை தரும், ,
👉அனைத்திற்கும் மேலாக ஒருவருடைய மரணபயம் ஏற்படும்பொழுது, ,அது ஆயுள் தொடர்புடைய கண்டங்களை உருவாக்கும் பொழுதும், ரத்த தொடர்பு இல்லாதவர்கள் உடைய, பெரியவர்களின் வயதில் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுதல் என்பது, ஒருவருடைய மரண பயத்தை போக்கும் என கூறலாம், ,,
👉மார்க்கண்டேயரின் பெற்றவர்கள், ,எந்த பெரியவர்களை பார்க்கும் பொழுதும் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் பொழுது உன்னுடைய ஆயுள் பலம் கூடும் என கூறியதால், ,மார்க்கண்டேயர் பெற்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் இறைவனை நேரில் நின்று மரண பயத்தை போக்கி காத்தருளியது..
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
ALP JOTHIDAR MAHALINGAM J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக