தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டுக் கடனிற்கான அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரி:
ஒவ்வொரு நிதியாண்டிலும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்திற்கு தகுந்தவாறு ITR தாக்கல் செய்ய வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இறுதியாக கடந்த ஜூலை 31ஆம் தேதி வரையிலும் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தற்போது வரையிலும் செலுத்தி வரும் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி மட்டுமே நேரடியாக வருமான வரி விலக்கு பெற முடியுமா என கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது
இந்நிலையில், இது குறித்து விசாரணை செய்யப்பட்டது. அதில், மேற்கூறப்பட்டது மாதிரியான எந்த ஒரு உத்தரவும் தற்போது வரையிலும் வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது வரை செலுத்தி வரும் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெறலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக