இப்போது அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று எப்போது திருமணம் நடக்கும்
சுக்கிரன் மற்றும் சந்திரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்
கெடாமல்
ராகு கேதுவுடன் மற்றும்
சனியுடன் சேராமல் இருக்க வேண்டும்
பொதுவாக குருபகவான் ஜனன ஜாதகத்தில்
இருக்கும் சந்திரன் அல்லது சுக்கிரன்
இருக்கும் வீட்டை
கடக்கும்பொழுது 1, 7, 5,,, 9ஆகிய இடங்களில் கடக்கும் பொழுது ஒரு ஜாதகருக்கு திருமணத்திற்கான காலம் அமையும்
அதையே குருபலம் என்கிறோம்
சரி இப்படி பல முறை கடந்து வந்து இருந்திருக்கும் அப்போதெல்லாம் திருமணம் நடந்திருக்க வேண்டும் ஆனால் நடக்கவில்லையே என்றால்
அந்த சந்திரன்
அல்லது சுக்கிரன் ஜாதகத்திலே அல்லது கோட்சாரத்தில் அல்லது கோட்சாரத்தில் பாவ கிரகங்களான சனி ராகு ராகு கேது போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமணம் தடை ஏற்பட்டு இருக்கும்
மற்றபடி சுபர் தொடர்பு பெற்று இருக்கும் பொழுது நிச்சயம் திருமணம் அந்த பாவங்களில் வரும்பொழுது நடைபெற்று இருக்கும்
திருமணம் அமையும் காலம் இவை என்றாலும்
ஜனன ஜாதகத்தில் 2, 7, 9 மற்றும் 11ஆம் இடங்கள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும்
இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருக்கும் பொழுது சரியான நேரத்தில் திருமணம் அமையாது அல்லது பெற்றோரால் அமைத்து வைக்கும் திருமணம் நடைபெறாது,
ஒரு ஜாதகத்தில் காதல் திருமணம் நடைபெற
5-ஆம் அதிபதி
இவற்றுக்கு புதனின் தொடர்பு பெற்று இருப்பது அவசியம் புதன் கேது இணைவு எங்கிருந்தாலும் காதல் மலரும் பாவ தொடர்பில் 5 7 11 ம் இடங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் பொழுது காதல் திருமணம் அமையும்.
மேற்சொன்ன 27 11 போன்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களில் ஒருவருக்கு திருமணம் அமையும் என்றாலும் திருமணம் எப்பொழுது அமையும் என்பதற்கு ஒரு சிறிய கணக்கு உங்களது சந்திரன் நிற்கும்
பாகை
சந்திரனுக்கு ஏழாம் அதிபதியின் பாகை மற்றும் சுக்கிரன் இருக்கும் பாகையும் மூன்றையும் ஒன்றாகக் கூட்டி 360 ல் கழித்தால் எந்த பாகையில் வருகிறதோ அந்த ராசியில் குரு வரும் காலம் ஜாதகருக்கு திருமணம் அமையும் என்பதை உறுதியாக சொல்லலாம். நிறைவாக
ஆணின் ஜாதகத்தில்
சுக்கிரன்,
சந்திரன், சனி,
புதன் உடன் சேர்ந்து இருக்கலாம் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சனி ராகு கேது போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடாது
இப்படி நல்ல நிலையில் இருக்கும் போது மகிழ்ச்சியாக திருமணம் வாழ்க்கை அமையும் ❤️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக