நரசிம்ம மூல மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரசிம்ம மூல மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

Narasimmar jayanthi viratham-powrnami

நரசிம்ம ஜெயந்தி 

விரத முறை 




  •   சென்னை :  *⚜️25/05/2021⚜️*

*உண்மையான பக்தருக்கு ஓடி வந்து உதவிடுவார் நரசிம்மர்*

*பக்தன் அழைத்ததும் அவனின் துயர் துடைக்க ஓடோடி வந்தவர் நரசிம்மர். மகா விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானவராக பார்க்கபடும் நரசிம்மர் அவதரித்த நாளில் நாம் எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்...*

இந்து சமயத்தில் பல தெய்வங்களை கொண்டிருந்தாலும், அடிப்படை தாற்பரியமாக அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.


அப்படி இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் நரசிம்ம அவதாரம். 


மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் நரசிம்ம அவதாரம் தான்.


நரசிம்ம ஜெயந்தி 2021 எப்போது?


2021ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்.

சாகா வரம் கிடைக்காது என்பதை அறிந்த அரக்கன் இரணியன் சிவபெருமானிடம் கேட்ட வினோத வரத்தை கேட்டார்.


பகல் பொழுதில் மரணம் ஏற்படக் கூடாது,

இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது

மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது

மிருகத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது

ஆகாயத்திலும் மரணம் நிகழக்கூடாது

பூமியிலும் மரணம் நிகழக்கூடாது

எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது.


என எந்தெந்த வழியில் மரணம் நிகழுமோ அதை எல்லாம் தடுக்கும் வகையில் வரத்தைப் பெற்ற இந்த இரணியன் மக்களையும், தேவர்களையும் கொடுமைப் படுத்தி வந்தான்.(பக்தி Whatsapp Telegram9442705560) இரணியனை அழிப்பதற்காக அவதரித்தவர் சிங்க முகமும், மனித உடலும், பெரிய நகங்களுடன், நாராயணனை நம்பி அழைத்த பிரகாலதனை காக்க அவதரித்தார் நரசிம்மர்.


வைஷ்ணவர்களின் முதன்மை கடவுளாக நரசிம்மரை வழிபட்டு வருகின்றனர்.


 தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்தில் வருவார், எந்த இடத்திலிருந்து வருவார் என்று தெரியாது. இருப்பினும் அழைத்த குரலுக்கும், நம்பிக்கையோடு அழைத்தால் வருவார் என்பது நிச்சயம்.


*🔯பிரதோஷம் கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் :*


 மதுரை யோக நரசிம்மர் கோயிலின் சிறப்புகள்


*🔯நரசிம்மர் ஜெயந்தி விரதம்:*


25/5/21காலை இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழுவதும் நரசிம்மரின் நினைவுடன் ஆராதித்து வழிபட்டு, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 வரை பூஜை, புனஸ்காரம் செய்து வழிபட்டு விரதத்தை முடிப்பது நல்லது.


 ஏனெனில் இந்த அந்திமாலை பொழுதில் தான் நரசிம்மர் அவதரித்தார் என்கிறது புராணங்கள்.


நரசிம்மருக்கு சர்க்கரை பொங்கலும், பானகம் மற்றும் அவரை குளுமையாக்கும் வகையில் சில குளுமையான பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக சிறந்தது.


பெருமாளுக்கு உகந்த மலர்கள், நைவேத்தியம், வஸ்திரத்தை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.


700 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் - அதிசய நந்தி கோயில்


*நரசிம்மர் மூல மந்திரம்*


உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,

ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,

பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்


நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களையும், துளசி பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்குவது நல்லது.

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...