Government schools & Private Schools
தனியார் பள்ளி முதலாளிகள் கோரிக்கை மனு.! கிழித்து வீசிய கல்வி அமைச்சர்..! அரசு பள்ளிகளுக்கு பொற்காலம்..!
தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபின்பு நடக்கும் ஆட்சி, மோடி அதிமுக ஆட்சி என்று அனைவர் மத்தியிலும் பேசப்படுகிறது.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை, தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாத நிலையில் ஒரு முதல் அமைச்சர். இந்த முதல் அமைச்சரை எம்எல்ஏக்கள் மிரட்டிச் செல்லும் அவலம் என எல்லாம் நடந்து வந்தபோதிலும் கூட. அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடி வருகிறது.
அதுவும் அந்த ஒரே ஒரு துறையால் மட்டும்தான். அதுதான் பள்ளிக் கல்வித்துறை, இதன் அமைச்சர் செங்கோட்டையன். இந்தத் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் இவர்களின் நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளுக்கு மவுசு கூடிவருகிறது.
பிளஸ்-2 ரிசல்ட்டின் போது முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் முறைகளை மாற்றினார்கள். இதுதான் தனியார் பள்ளிகளுக்கு விழுந்த முதல் அடி, இரண்டாவதாக 11ம் வகுப்புக்கும் அரசு பொதுத் தேர்வு என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துவிட்டது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இதனால் தனியார் பள்ளி முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைச்சரைச் சரிக்கட்ட சென்னைக்கு பயணமாகினர். அமைச்சரையும் சந்தித்தனர். அப்போது உங்களது இந்த அறிவிப்புகளால் எங்கள் பிழைப்புக்கு பாதிப்பு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான எதிர் கால நலத் திட்டம், இந்தத் திட்டங்களில் இருந்து யாருக்காகவும் அரசு பின்வாங்காது என்று கறாராகத் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பு பாடங்களை நடத்துவது கிடையாதாம். 9ம் வகுப்பிலேயே, 10ம் வகுப்பு பாடங்களை நடத்துமாம். அப்படி இரண்டு வருடமாக 10ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் போது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.
அதுபோல பிளஸ் 1, வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்துவதுதான் வழக்கமாம். இதுவும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
அரசுப் பள்ளிகளில் நீட்,உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு சற்றும் குறையாத அளவு அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே இலட்சிமாக அமைச்சர் செங்கோட்டையன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள், விரைவில் தலையில் துண்டு போடும் நிலை உருவாகும் எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த அரசு, ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு பொற்காலத்தை உருவாக்கி வருகின்றது.
#பள்ளிக்கல்வித்துறை