Electric Bill Reduced
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.
அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் உள்ள 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் ரூ.150 அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20 சேர்த்து மொத்தமாக ரூ.170 வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதுவே, ஒருவர் 510 யூனிட்டுகள் உபயோகித்தால், முதல் 100 யுனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5க்கு பதிலாக ரூ.3.50ஆக அதிகரிக்கும். அப்படிப்பார்த்தால் 101-200 யூனிட்டுகளுக்கு ரூ.350 என்று கணக்கில் கொள்ளப்படும். 201-500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.4.60 என்ற வீதத்தில் ரூ.1,380, 500-510 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.6.60 என்ற வீதத்தில் ரூ.66, நிலையான கட்டணம் ரூ.20 என்று மொத்தமாக ரூ.1,846 கட்டணமாக வசூலிக்கப்படும். அதிகமாக 310 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் முதலில் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால் வரும் கட்டணத்தை விட ரூ.1,676 அதிகமாக வந்துவிடும்.

இந்த அணுகுமுறையால் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. மேலும், மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் நடக்கும் குழப்பங்களாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக ஒரு மாதத்தின் 10ஆம் தேதியில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டால், அதன்பிறகு வரும் மாதங்களிலும் அதே தேதியில் தான் மின்சாரப் பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல மாதங்களில் ஒரு வாரம் வரை தாமதமாகத் தான் மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இதனால், தாமதிக்கப்பட்ட நாட்களுக்கான பயன்பாட்டையும் சேர்த்து அதிக தொகை வந்துவிடும்.
அத்துடன், இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் மின் உபயோகம் அதிகரிக்கும். இதனால், தமிழக அரசின் டெலஸ்கோபிக் டாரிஃப் முறைப்படி நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த நேரிடும். உதாரணமாக, ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள் பயன்படுத்தும் ஒருவர் இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகளை பயன்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்வோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தினால் அவர் செலுத்தும் கட்டணம் குறைவாக இருக்கும். அதுவே, இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகள் என்று வரும் போது டெலஸ்கோபிக் டாரிஃப் முறைப்படி கட்டணம் அதிகரிக்கும்

எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் மின்கட்டணத்தை மாதம் தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்ததூம் தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது. அதன்படி, தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சொல்வது போன்று மாதாந்திர கணக்கீடு அமல்படுத்தப்படும் போது, குறைவான கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்