முளைப்பாரியின் மகிமை
விவசாயிகள் ஆடி மாத மாரியம்மன் திருவிழா, திருமணம் , குடமுழக்கு, புதுமனை புகுவிழா விழாக்களில் முளைப்பாரி வைத்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள், நவ
கிரக தோஷங்கள், கண் திருஷ்டி, நோய் குணமாக, குழந்தை பேறு அடைய, திருமண தடை நீங்க, விவசாயம் செழிக்க, மழை பெய்ய என இந்த முளைப்பாரி சடங்குகள் அடையும் நன்மைகள் ஏராளம் ,
இதில் நோய் குணமாக சதய நட்சத்திர வடிவமாக இருக்கும் இந்த முளைப்பாரி சடங்கும், நவ கிரக தோஷம் குறைய
சூரியன் - கோதுமை
சந்திரன் - நெல்
செவ்வாய் - துவரை
புதன்- பச்சை பயிறு
குரு- கொண்டை கடலை
சுக்கிரன் - மொச்சை
சனி - எள்
ராகு - உளுந்து
கேது- கொள்ளு
இந்த தானிங்களை சம அளவில் எடுத்து முளைப்பாரி வைத்து தினமும் நீர்வீட்டு பூஜை செய்து நன்றாக வளர்ந்த பின் ஒரு வியாழன் அன்று சுக்கிரன் ஓரையில் நீர் நிலைகளில் விட நவகிரக தோஷம் நீங்கும், கண் திருஷ்டி நீங்கும்,