tasmac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tasmac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜூலை, 2021

TASMAC விரைவில் மூட முடிவு coming soo order

 

Tasmac shop closed  order coming soon ...


சென்னை: குடிமகன்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு பெரிய ஷாக் வந்தாலும் வரும் என்கிறார்கள்.. காரணம் அதிகாரிகள் அதிரடியில் இறங்க போகிறார்களாம்..!



இந்த 2வது அலை நமக்கு அதிகமாகவே பயத்தை தந்துவிட்டது.. உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து லாக்டவுன் போடவும், ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

இருந்தாலும் ஒருசில மாவட்டங்களில் தொற்று வீரியத்துடன் பரவி வருகிறது.. இப்போது தளர்வுகள் அமலில் இருந்தாலும், நீடித்து வரும் லாக்டவுனால் ஓரளவு பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது.. டாஸ்மாக்கை ஏன் திறக்கறீங்க?, மூடியது மூடினபடியே இருக்கட்டுமே என்று டாக்டர் ராமதாஸ் வழக்கம்போல் கொந்தளித்துள்ளார்.. பாஜகவோ, ஆளும் புதுச்சேரியை விட்டுவிட்டு, இங்கு மட்டும் கொடியுயர்த்தி போராட்டங்களை நடத்தியது.

Tasmac closed coming  soon order

மதுக்கடைகளை திறப்பதால், மீண்டும் தொற்று வந்துவிடுமே? பஸ்களில் 50 சதவீத இடைவெளியிட்டு உட்கார வசதி இருந்தும், சில மாவட்டங்களில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால், டாஸ்மாக்குகளில் முண்டியடித்து கொண்டு சரக்குகளை குடிமகன்கள் வாங்குவதால் நிச்சயம் தொற்று பாதிப்பு ஏற்படும் என்ற ஆதங்க, அக்கறை குரல்களும் எழுந்து எழுகின்றன. ஆனால், முன்பே வாடிக்கையாளர்களுக்கு மது விற்பனை செய்யும் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டிருந்தது..

உறுதி

எனவே அனைத்து மதுபானக் கடைகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது... வெளிவந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை தடுக்க மதுக்கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

விரைவில் அதிரடி

இதனால் மாவட்ட வாரியான ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.. எந்தெந்த கடைகளில் புகார்கள் உண்மையாக இருக்கிறதோ, அந்த கடைகளை இழுத்து மூடவும் அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இதுதான், குடிமகன்கள் தலையில் இடியாய் இறங்கி வருகிறது....

குடிமகன்கள்



மது வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிய வேண்டும், போதிய இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது.. ஆனால், இதை எதுவுமே குடிமகன்கள் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமல்ல, மதுபானம் சில இடங்களில் கூடுதல் விற்பனைக்கு விற்கிறார்களாம்.. அந்த டாஸ்மாக்கும் கிளீன் செய்யப்படாமல் அசுத்தமாக இருக்கிறதாம்.. இவ்வளவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகாராக பறந்துள்ளது

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...