ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

Vigari year 2019 //Good news

விகாரி வருட பலன்கள்

பார விகாரி தனிற் பாரண நீருங் குறையும் மாரி இல்லை வேளாண்மை மத்திபமாம்சோரர்ஜ பயமஅதிகமுண்டாம்
பழையோர்கள் சம்பாதியவுடைமை விற்று உண்பர்தேர்.

விளக்கம்

தண்ணீர் தட்டுப்பாடு விளைச்சல் குறைவு கள்வர் பயம் முன்னோர் சேர்த்து வைத்ததை விற்றுஉண்பர் என்பதாம்.

விகாரி ஆண்டு ஆரம்பம் ஆகும் கிரகநிலை கீழே கொடுக்கப்பட்டு
ள்ளது.

விளம்பி வருடத்தின் உடைய கடைசி 4 மாதங்களும் விகாரி வருடத்தின் முதல் நான்கு மாதங்களும் இதில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகள் இந்த 8 மாத நிகழ்வுகளுக்கு கவனம் தேவை .
விளம்பி வருடத்தில் விளம்புவது விகாரி வருடத்தில் விகாரம் ஆகிவிடும் .
வாக்கு ஸ்தானாதி
பதியாகிய சூரிய பகவான் வலுத்து அமர்ந்தாலும் குரு பார்வை பெற்றாலும் முயற்சி ஸ்தானத்திற்கு அதிபதி புதன் நீச்சமாகி இருப்பதால்
தேர்தல் குறித்து ஜோதிட ரீதியாக போடும் கணக்குகள் எல்லாம் பொய்ப்பதற்கு வாய்ப்பு உண்டு
கருத்து கணிப்புகள் தப்புவதற்கு வாய்ப்பு உண்டு

ஜோதிடம் பார்ப்பது வெளியே தெரிந்தால் கேவலம் என்று நினைத்துக்கொண்டு ஜோதிடர்களிடம் போய் ஜோதிடம் பார்த்தால் சோதிடர்களும் வெளியே சொல்லவில்லை என்றால் சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகக்கூடும்.

தன் வீட்டை பார்வை செய்யும் புதபகவான் செவ்வாய் பகவான்
சனி பகவான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் இளைஞர்களே.

நாட்டு பற்று உடையவர்களை தேசப்பற்று உடையவர்களை இளைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள்
வேடதாரிகளை புறம் தள்ளப்படுவார்கள்
நாட்டு பற்று உள்ளவர்களுக்கு கோப்பு போலி வேடதாரிகளுக்கு ஆப்பு

கடகம் முதல்கும்பம் வரை சக்தி வீதிதனில் அப்பிரதட்சணமாக ஆறு கிரகங்கள் இருப்பதால் அதிக பெண்கள் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு உண்டு
இந்த தேர்தலில் பெண்களின் செல்வாக்கு அதிகரிக்கும்
கூலிக்கு மாரடிக்கும் கூட்டமெல்லாம் கொள்கையைப் பற்றி பேச முடியாது
இளைஞர்களால் திறமையான அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்
அரசியல்வாதிகள் பயந்து பயந்து ஓட்டு கேட்பார்கள்

யாரையும் யாரும் குறை சொல்லமுடியாத அளவில் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கப்படும்

சில இடங்களில் வேட்பாளரிடம் கையெழுத்து வாங்கியே ஓட்டளிக்கும் சூழ்நிலை உருவாகும்
இந்த தேர்தலில் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது
விகாரி வருடத்தில் தண்ணீருக்கான திட்டமிடும் காலம் இது

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
பங்குச்சந்தையில் புதிய உத்வேகம் ஏற்படும்

தான்தோன்றித்தனமான திருமணங்களால் இளைஞர்கள் தடுமாறும் கால கட்டம்

ஊடகங்களுக்கு புது சட்டம் வரும்

இந்த ஆண்டு நிறை குறைகள் இருந்தாலும் புதிய மலர்ச்சி உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு

இதுவரை சீரழிவு நிலையிலிருந்த தமிழ் ....இனிசிறுவர்களும் தமிழை கற்பார்கள் பேச்சளவில் இல்லாமல் செயலளவில் தமிழ் உயிர் பெறும்
குரு சனி கேது சேர்க்கை சித்தர்களின் சாபம் என்பதை குறிக்கிறது

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

NEW Train Timing - 2018

புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது.


புதிய ரயில் அட்டவணை:  ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம்!
புதிய ரயில் அட்டவணை : நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதே போல் ரயில்கள் புறப்படும்ம் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது.இருப்பினும் புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்டு 14 வரை பழைய அட்டவணை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய கால அட்டவணை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் அட்டவணைப்படி, பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல் புதிய ரயில் அட்டவணையைப் புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் இந்த அட்டவணை புத்தக வடிவில் ரயில் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ரயில் அட்டவணையில் மாற்றப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள்:

1. சென்னை எழும்பூர் – செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.20 மணிக்கு பதிலாக, 8.40 மணிக்கு புறப்படும்.
2. சென்னை எழும்பூர் – திருச்சி சோழன் விரைவு ரயில் காலை 8.30 மணிக்கு பதிலாக 8.00 மணிக்கு புறப்படும்.
3. திருச்சி-நாகூர் விரைவு பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும்.
4. தாம்பரம் – செங்கோட்டை இடையே புதிய முன்பதிவில்லாத அந்தியோதயா விரைவு ரயில் தினசரி காலை 7 மணிக்கு இயக்கப்படும்.
5.நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில், தாம்பரம்-நெல்லை அந்தியோதியா ரயில், பாண்டியன் விரைவு ரயில், சிலம்பு விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
6. செங்கல்பட்டு – கச்சிகுடா விரைவு ரயில் மாலை 5.00 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும்.
7. கவுகாத்தி மற்றும் திப்ரூகர் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...