மீள் பதிவு:-
#ராகு_காலம் / எமகண்டம்
சும்மா பேரகேட்டவுடனே பதறுதில்ல?
பொதுவாகவே மககள் மனதில் ஏன் சில ஜோதிடர்களே கூட இநத ராகுகாலம் எமகண்டம் இவற்றில் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என ஒதுக்கிவைக்கிறார்கள்.... ஏன் என கேட்டாள் ஓரே பதில் ஆகாது / நடக்காது / முடியாது / பிரச்சனை இதுதான் பதில்....
நான் பல இடத்தில் அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு விசயம் விதி என்ற ஒன்று இருந்தால் விதி விலக்குகண்டிப்பாக இருக்கும்....
நமது முன்னோர்கள் ராகுகாலம் எம கண்டம் ஆகாது என சொல்லவில்லை... சில விசயங்களுக்கு மட்டும் ஒதுக்கி வைக்க சொன்னார்கள்....
வகைபடுத்தி சொல்லவில்லை காரணம் அன்றைய சாமனியனுக்கு இதை சொன்னால் புரிந்துகொள்ளும் தன்மை இல்லை.... அதனால் மொததமாக இந்த இரண்டு காலங்களை ஒதுக்க சொன்னார்கள்....
இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை படித்து புரிந்து கொள்ளும் தன்மை ஏறாக்குறைய அனைவரிடமும் உள்ளது....
நீங்க அனேகமாக கேள்விபட்டிருப்பீங்க யாராவது வீட்டில் பையன் ரொம்ப குறுப்பு செஞ்சா ராகுகாலத்தில் பொறந்து இருப்பானனும்....
ரொம்ப அடிவடி பையனா இருந்தா எமகண்டத்தில் பொறந்திருப்பான்னும் சொல்லுவாஙக.... இநத விசயம் தான் என்னை இங்கு ஆராய தூண்டியது....
தயவு செய்து ராகுகாலம் எம கண்டத்தில் ிறந்த குழந்தைகளை யாரும் ஒதுக்கவேண்டாம்.... எந்த சூழ்நிலையையும் வெல்லும் திறமை வாய்ந்தவர்களன இவர்கள....
அதுவும் எமகண்டம் கடைசி 24 நிமிடம் அதிலும் கடைசி நான்கு நிமிடத்தில் பிறந்தவன் உலகை வெல்லும் ஆற்றல் உடயவன்... காரணம் கேட்டால் அது சொல்ல முடியாது அது சீக்ரெட் இதனுடன் கிழமை அதிபதி முக்கியம்.... உங்களுக்காக ஒரு கிழமைமட்டும் சொல்கிறேன்.... வியாழக்கிழமை எமகண்டம் மிக சிறப்பு இதில் சில நட்சத்திரங்கள வந்துவிட்டால் அவனை வெல்வது கடினம்.... (நீங்களாக இந்த நேரத்தை கையாண்டு ஆப்ரேசன் செய்து குழந்தை எடுக்கவேண்டாம்... ஜோதிடரை அணுகவும்....ஏன் என்றால் இதில் பல சூட்சமங்களை இங்கு நான எழுதவில்லை)
சரி இப்ப விசயம் என்ன்னா
ராகு காலம் எமகண்டம் கெட்டதுன்னு சொல்லராங்களே ஏன்?
ரொம்ப சிம்பிளா சில விசயம் சொல்றேன் அத பொதுமக்கள் மற்றும் ஆரம்பநிலை ஜோதிடர்கள் புரிந்து கொண்டால் ராகுகாலம் எமகண்டம் இதை எங்கு ஒதுக்கனும் எங்கு சேர்கனும்னு உங்களுக்கு ஒரு ஜடியா கிடைக்கும்.....
♪விசாவே கிடைக்கல என்ன செஞ்சாலும் தடையுன்னு நினைக்கிறீங்களா? உடனே ராகு காலத்தில் விசாவுக்கு அப்ளை பன்னுங்க கிடைத்துவிடும்...
♪என்னன்னமோ செஞ்சுட்டோம் குழந்தை இன்னும் இல்ல அப்படிங்கீறீங்களா? ராகுகாலம் அல்லது எமகண்டத்தில் கணவன் மனைவி ஒன்னா சேருங்க அப்பறம் சொல்லுங்க....
♪என்னபன்னாலும் டிரான்ஸ்பர் கிடைக்கிலயா? ராகுகாலத்தில் அபளைபன்னுங்க
♪பெய்ல் கிடைக்கிலயா? ராகுகாலம்
இருக்கு....
♪போட்டியில் ஜெய்கனுமா? எமகண்டம் தான் சரியான நேரம்...
இப்படி பல விசயம்.... இதில் எப்படி நடக்கும்னு கேக்கரீங்களா?
காரகத்தை கிரகங்கள் சப்போர்ட் தேவை.... இதனுடய காரகத்தை அந்த நேரம் இயக்கும்...இதற்கு நேர் எதிர் விசயங்களை முடக்கும..... அதனால் தான் இத புரியமா ஏதேனும் தவறு செயு்து சாமானியன் கஸ்டபடுவான் அவனுக்கு காரகம் தெரியாது என்பதால் மொத்தமாக நமது முன்னோர்கள் ஒதுக்க சொன்னார்கள்....
பகலில் ராகு காலம் பார்த்தவர்கள் கூட இரவில் பார்க்கவேண்டாம் என முன்னோர்கள் சொன்ன காரணமும் இதற்கு தான்.... அன்றைய கால்த்தில் மனிதனுடய ஒரே சந்தோசம் மனைவியுடன் கூடுவது.... இதில் ராகு காலம் தேவையில்லை காரணம் போக காரகன் மற்றும் குழந்தை பிறப்பின் விதையே இவர்தான்.....
அதனால் தான் திருமணம் செய்ய ராகுகாலம் பார்த்தார்கள்....
சாநதி முகூர்த்தததிற்கு ராகு காலம் பார்ப்பதில்லை....
#பாக்கியராஜ் சார் பாணியில் சொல்லனும்னா ராகு காலத்தில் வைககப்டும் சாந்தி முகூர்த்தத்திற்கு முருங்கைகாய் தேவையில்லை....
குறிப்பு: இது ராகு காலம் எமகண்டம என்ன செய்யும் என தெரியதவர்களுக்கு ஆக எழுதப்பட்ட பதிவு..... இது ஆரம்ப படிப்பு இதை எல்லாம் ஒரு பதிவுன்னு பதிவா போடுறானே இவன் என விசயம் தெரிநத மூத்த ஆசான்கள் என்னை திட்ட வேண்டாம்.....