மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு
#சீரடி அருகே உள்ள #சனி_சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.
சனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.
எத்தனை காலம் என்று யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
காலம் காலமாக பல பக்தர்கள் ஒன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் வந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். #வானம்தான்_எனக்குக்_கூரை என்று கூறிவிட்டார்.
இன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.
சிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.
சனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா? முடியாதல்லவா? ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள்,
ஆனால் #எந்த_வீட்டிற்கும்_கதவுகள்_இல்லை_பூட்டுக்களும்_இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள்.
(யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.
அதுதான் ஆச்சரியமான விஷயம்.
வாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள்...