சித்திரை கனி பார்த்தல்
👉 புத்தாண்டின் அதிகாலையில் எழுந்ததும் கனிகள், பணம், நகைகள் போன்றவற்றை கண்ணாடியில் பார்க்கும் ஒரு சாஸ்திரம் ஆகும்.
👉 புத்தாண்டு அன்று எழுந்ததும் முதன்முதலாக இவற்றை காணும் போது, அந்த புத்தாண்டு மிகவும் இனிமையாகவும், செழிப்பான ஆண்டாகவும் இருக்கும்
கனி காணுதல் தட்டில் என்னென்ன வைக்க வேண்டும்?
👉புத்தாண்டின் முதல் நாள் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் உள்ள கடவுள்களின் போட்டோக்களை துடைத்துவிட்டு, மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்பு இரவு தூங்குவதற்கு முன் ஒரு கண்ணாடியை எடுத்து, அதை துடைத்துவிட்டு, அதன் ஓரங்களில் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய தாம்பூலத் தட்டை எடுத்து, அதில் மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை என ஒற்றை படை எண்ணில் பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். பின்பு சிறு சிறு கிண்ணங்களை எடுத்து, ஒவ்வொன்றிலும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கல் உப்பு ஆகியவற்றை தலைதட்டாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, வளையல் ஆகியவற்றையும் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறு கிண்ணத்தில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்தக் கொள்ளுங்கள்.
👉வீட்டில் அன்னப்பூரணி சிலை இருந்தால், அரிசியின் மேல் அந்த சிலையை வையுங்கள். மேலும் வீட்டில் உள்ள நகைகளையும் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்து, அதில் நீரை நிரப்பி, அதில் சிறிது பூக்களைத் தூவி, பச்சை கற்பூரத்தை சிறிது தூவி, மேலே மாவிலை மற்றும் தேங்காயை வைத்து கலசத்தை தயாரித்து, அவற்றையும் தட்டிற்கு அருகே வைக்க வேண்டும். பின் இந்த பொருட்கள் அனைத்தும் கண்ணாடியில் தெரியும்படி கண்ணாடியை எதிரே வைக்க வேண்டும்.
👉 இவை அனைத்தையும் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு தூங்குவதற்கு முன்னரே தயார் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும்.
👉புத்தாண்டு அன்று வீட்டின் மூத்த பெண் அதிகாலையில் எழுந்ததும், முதலில் அந்த கண்ணாடியின் வழியே இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். பின் குளித்துவிட்டு வந்து, வீட்டில் உள்ளோர் ஒவ்வொருவரையும் அழைத்து வந்து, இவற்றை காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இதை பார்த்த பின், ஒரு பிரசாதத்தை செய்து, கடவுளுக்கு படைத்து, ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும். இந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் உட்கொள்ள வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வருகிற சோபகிருது புத்தாண்டின் முதல் நாளில் செய்து, தமிழ் புத்தாண்டை சிறப்பாக தொடங்குங்கள்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஸ்ரீகுரு ஜோதிட நிலையம்
ALP ஜோதிடர்
AVADI MAHALINGAM J
9840290714 / 6383824552
ஜோதிட ஆலோசனை மற்றும் ஜோதிட பற்றி அறிய
தொடர்பு கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்