சனி, 27 ஏப்ரல், 2019

தேசிய குழந்தைகள் நல ஆணையம்

ஜான்ஷன் &ஜான்ஷன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பேபிஷாம்பு பொருட்களில் புற்றுநோய் உருவாக்ககூடிய ஆஸ்பெஷ்டாஸ்  எனகிற நச்சு பொருட்கள் இருப்பதால் அவற்றை தடை செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு கடைகளில் இருப்பு வைத்திருக்கும்  பொருட்களை சேகரித்து அழிக்க முடிவு
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவு

Rajasthan: 
ராஜஸ்தானில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவின் இரண்டு பேட்சில் நடத்தப்பட்ட மாதிரிகள் சோதனையில் புற்றுநோயை உருவாக்கும் பார்மால்டிஹைடெட்டின் இருப்பது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதை கண்டறிந்தனர்.
பிப்ரவரிக்கு பின் அரசாங்கம் அதில் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற எதுவும் இல்லை என்று சொன்ன பின் ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் 24 ஷாம்பு பாட்டில்கள் இரண்டு பேட்ச்களில் இருந்து தோராயமாக எடுத்து சோதனை செய்து இந்த முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்டிஹைட்டை பிரஸர்வேடிவ்வாக பயன்படுத்துகிறது. ஆனால், ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்மால்டிஹைடை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது. ஆனால் ஆய்வில் ஃபார்மால்டிஹைட் உள்ளது என்பது தெரியவந்துள்ளது என்று ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டாளர் ராஜா ராம் சர்மா தெரிவித்துள்ளார்.


“ஆய்வில் ஃபார்மால்டிஹைட் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை சொல்ல முடியாது. ஆனால் நிறுவனம் இதை சவாலாக கருதியுள்ளதால் கூடுதல் மாதிரிகளை மத்திய மருந்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்று சர்மா தெரிவித்தார்.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தீங்கு விளைவிக்கும் பொருள்களைக் கொண்டிருக்கும் -ஃபார்மால்டிஹைடுக்கான அபாயம் உள்ளது' என்ற வந்துள்ள முடிவை முற்றிலும் மறுப்பதாக” தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...