சனி, 27 ஏப்ரல், 2019

www.cgepa.blogspot.com

$$$தங்கமங்கை  ##கோமதிமாரிமுத்து

உடைக்கு ஏற்றாற்போல் செருப்பு தேடும் பெண்களுக்கு மத்தியில் கிழிந்த காலணிகளுடன் ஓடி உலகம் திரும்பி பார்க்க வைத்தவள்...



இது சாதாரண வெற்றியல்ல...

"எனது ஏழ்மை நிலை காரணமாக ஓட ஒரு நல்ல ஷூ கூட இல்லாமல் பிஞ்சு போன ஷூவை அணிந்து கொண்டு ஓடியே ஜெயித்தேன்",  என்ற கோமதியின்  பேட்டிக்கு பிறகு தங்கம் வென்ற கோமதியின் வீடியோவை கூர்ந்து கவனித்தேன். மனசு ரொம்ப வலித்தது. அது பிஞ்சு போன ஷூ மட்டுமல்லாது, இடது கால் ஷூ வேறு வலது கால் ஷூ வேறு. மாற்று ஷூக்களை மாட்டிட்டு போயி ஜெயிச்சிருக்கு அந்த பொண்ணு. என்ன கொடுமை...

தோகா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. தடைகளை தகர்த்தெரிந்து முன்னேறி வெற்றிக் கோட்டை லாவகமாக தொடுகிறார்.




நல்ல ஷூ கூட போட முடியாம வலது காலுக்கும் இடது காலுக்கும் வெவ்வேறு  கலரில் என பிய்ந்துபோன ஷூ வை போட்டு கொண்டு ஓடி ஜெயித்து இருக்கிறார் கோமதி  பிய்ந்த ஷூ போட்டு ஒரு விராங்கனனயை ஆசிய விளைடாட்டு போட்டிக்கு அனுப்பிவைத்த இந்திய அரசும் தமிழக அரசும் வெட்கபட வேண்டும்.
விளையாட்டு ஆணையம் எல்லாம் எதற்கு ? வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் இது.

இந்தியா உலக அளவுல அப்புடி வல்லரசா உயர்ந்திருக்கு இப்படி விஞ்ஞானத்துல வளர்ந்திருக்குன்னு சொல்லுற அரசியல்வாதிகளுக்கு ஒரு தனிமனிதனின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில்தான் இருக்குறோம்ன்னு சொல்லுற ஒரு செருப்படியா இருக்கட்டும்.

நம்ப அரசியல்வாதிகளோட அரசோட ஆட்சி நடத்தும் லட்சணம் உலக அளவில் மணம் வீசட்டும்.

நாட்டுல அரசியல்வாதிங்க எவ்வளவோ கொள்ளை அடிக்குறீங்க இதுல நீங்க இதேப்போல ஏழைகளுக்கு செலவளிக்குற  காசு ஒரு கொசுறு. இன்னும் இதைப்போல கஷ்டப்படுற உதவி கிடைக்காதவங்க எத்தனை லட்சம் பேரோ கனவு நிறைவேறாமல் கூலி வேலைக்கு போனவங்க இருக்குறாங்க அவங்களுக்கு என்று விடிவு காலம் வருமோ.

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...