54ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் - BSNL ன் பரிதாபங்கள்
இந்திய தொலை தொடர்பு துறையின் முக்கிய நிறுவனமான BSNL ன் 54 ஆயிரம் தொழிலாளர்களை கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பும் திட்டமானது விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது
கடந்த பிப்ரவரி முதல் சம்பள பட்டுவாடா செய்யாமல் இழுத்தடித்த நிர்வாகம் மத்திய அரசின் அறிவுரை படி தற்போது வழங்கபட்டுள்ளது .
இந்திய தொலைதொடர்பில் கால் பதிக்க ஆரம்பித்த ஜியோவை கண்டு பயந்த ஏர்டெல் .வோடபோன் நிறுவனங்கள் வர்த்கத்தில் சரிவை சந்தித்து அதே போல பொது துறை நிறுவனமான BSNL மாபெரும் சரிவை சந்தித்து கடந்த 2017-18 நிதியாண்டில் 31.287 கோடி இழப்பை சந்தித்துள்ளது
அதுமட்டுமல்லாமல் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளது இந்நிலை தொலைதொடர்பு வரலாற்றில் முதன்முறை என சொல்லபடுகிறது
இந்நிலையில் தொலைதொடர்பு செயலாளர் அருணா சுந்தர்ராஜன் உயர்மட்ட அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். அதில் இந்நிறுவனத்தை மீண்டு வர பல ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக தெரிகிறது
அந்த அடிப்படையில் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாமா
அல்லது BSNL நிறுவனத்தை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை கவர திட்டங்கள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது
தேர்தல் முடியும் வரை மத்திய அரசு பாதுக்காப்பில் தொலை தொடர்பு நிறுவனம் இயங்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக