வியாழன், 30 மே, 2019

Government & private school

Government schools & Private Schools



தனியார் பள்ளி முதலாளிகள் கோரிக்கை மனு.! கிழித்து வீசிய கல்வி அமைச்சர்..! அரசு பள்ளிகளுக்கு பொற்காலம்..!

தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபின்பு நடக்கும் ஆட்சி, மோடி அதிமுக ஆட்சி என்று அனைவர் மத்தியிலும் பேசப்படுகிறது.

ஆட்சியில் நடக்கும் தவறுகளை, தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாத நிலையில் ஒரு முதல் அமைச்சர். இந்த முதல் அமைச்சரை எம்எல்ஏக்கள் மிரட்டிச் செல்லும் அவலம் என எல்லாம் நடந்து வந்தபோதிலும் கூட. அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடி வருகிறது.

அதுவும் அந்த ஒரே ஒரு துறையால் மட்டும்தான். அதுதான் பள்ளிக் கல்வித்துறை, இதன் அமைச்சர் செங்கோட்டையன். இந்தத் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் இவர்களின் நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளுக்கு மவுசு கூடிவருகிறது.

பிளஸ்-2 ரிசல்ட்டின் போது முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் முறைகளை மாற்றினார்கள். இதுதான் தனியார் பள்ளிகளுக்கு விழுந்த முதல் அடி, இரண்டாவதாக 11ம் வகுப்புக்கும் அரசு பொதுத் தேர்வு என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துவிட்டது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இதனால் தனியார் பள்ளி முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைச்சரைச் சரிக்கட்ட சென்னைக்கு பயணமாகினர். அமைச்சரையும் சந்தித்தனர். அப்போது உங்களது இந்த அறிவிப்புகளால் எங்கள் பிழைப்புக்கு பாதிப்பு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான எதிர் கால நலத் திட்டம், இந்தத் திட்டங்களில் இருந்து யாருக்காகவும் அரசு பின்வாங்காது என்று கறாராகத் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பு பாடங்களை நடத்துவது கிடையாதாம். 9ம் வகுப்பிலேயே, 10ம் வகுப்பு பாடங்களை நடத்துமாம். அப்படி இரண்டு வருடமாக 10ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் போது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

அதுபோல பிளஸ் 1, வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்துவதுதான் வழக்கமாம். இதுவும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

அரசுப் பள்ளிகளில் நீட்,உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு சற்றும் குறையாத அளவு அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே இலட்சிமாக அமைச்சர் செங்கோட்டையன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதனால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள், விரைவில் தலையில் துண்டு போடும் நிலை உருவாகும் எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த அரசு, ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு பொற்காலத்தை உருவாக்கி வருகின்றது.

#பள்ளிக்கல்வித்துறை

Nesamani trending

Contracter nesamani trending tweet, watsup , Facebook

யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.

நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.

தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.

எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.

யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.

#pray_for_nesamani

நேசமணி யார் அவரின் பின்புலம் என்ன அவரின் வாழ்க்கைபற்றிய ஒரு கண்ணோட்டம் ..
2000 வருடத்தில் வந்த ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கதாபாத்திரமே நேசமணி வடிவேலு அண்ணன் மகன் ரமேஸ்கண்ணா அவர்கள் கையிலிருந்து தவறுதலாக சுத்தியலை வடிவேல் மண்டையில் விழுமாறு காட்சி அமைக்கபட்டிருக்கும் ...
19 வருடங்களுக்கு பிறகு இப்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப நேசமனியின் வாழ்க்கை தொடர்பு ஏற்பட்டுள்ளது
 இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்க்கு தேவையான அனைத்து முகமும் வடவேலுவின் முகத்த வைத்து செய்யபடுகின்றன

திரையில் வராவிட்டாலும் மக்களின் என்னத்திரையில் தினந்தோறும் வந்து போகும் ஹீரோ நம்ம வடிவேலுதான்

செவ்வாய், 28 மே, 2019

School Reopen June 3-06-2019

பள்ளிக்கல்வித்துறை 
அறிவிப்பு!!


பள்ளிகள் திறந்தால் இந்த ஒழுக்க நெறிமுறைகளை  பின்பற்றி தான் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

2.பைக் ., செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

3.லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது.

4.அரைக்ககை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது.

5.தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும் போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

6.கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.

7.டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது.

8.மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.

9.கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.

10.பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11.விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும்.

என்ற 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது...!

எல்லோருக்கும் தெரிந்து அமைச்சர் என்ற வகையில் பணிகளை மேற்கொள்ளும்  ஒரு துறை என்றால் அது பள்ளி கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. செங்கோட்டையன் ஆக தான் இருக்கும்...

ஞாயிறு, 19 மே, 2019

Genetic Treatment

நமது முன்னோர்களின் வழி தோன்றலாக இப்புவியில் பிறக்கின்ற நாம் அவர்களின் எண்ண பதிவுகளை பெற்றிருக்கும் நாம் இப்புவியில் வாழ்கின் வாழ்க்கை நமது பாரம்பரிய முற்பதிவுகளே அதை ஜோதிட ரீதியாக பார்க்கும் போது அது பாரம்பரிய மரபணு ஜோதிடமாக அழைக்கபடுகிறது.

மரபு வழி சார்ந்த வியாதிகளை கண்டறிந்து மருத்துவம் அளிக்க இந்த முறை பயன்படுகிறது .இதன் தாத்பரியம்
மூன்று தலைமுறையின்
குறைகளை சுட்டிகாட்டுகிறது

விதி (லக்னம்). மதி (இராசி). கதி(லக்னாதிபதி) இம்மூன்றின் நட்சத்திரமே நமது மரபணுவை மாற்றி அமைக்கும் .
இதன் காரகத்துவத்தை இயக்கிவிட்டால்போதும்..

அசுவிணி                   =சூரியன்
பரணி                          =சந்திரன்
கிருத்திகை                =செவ்வாய்
ரோஹிணி                 =புதன்
மிருகஷிரிடம்            = குரு
திருவாதிரை .           = சுக்கிரன்
புனர்பூஷம்.                =சனி
பூஷம்.                          = ராகு
ஆயில்யம்.                 =சூரியன்
மகம் .                           =சந்திரன்
பூரம்                             = செவ்வாய்
உத்திரம்                     =புதன்
ஹஸ்தம்                     =குரு
சித்திரை.                   =சுக்கிரன்
சுவாதி                        =சனி
விசாகம்                     = ராகு
அனுஷம்                   = சூரியன்
கேட்டை                     = சந்திரன்
மூலம்                         = செவ்வாய்
பூராடம்.                     = புதன்
உத்ராடம்                   = குரு
திருவோணம்          = சுக்கிரன்
அவிட்டம்.                  = சனி
சதயம் .                      = ராகு
பூரட்டாதி                    =சூரியன்
உத்தரட்டாதி             =சந்திரன்
ரேவதி                         =செவ்வாய்

விதி.மதி.கதிகளின் காரகத்துவ தத்துவங்களை உணர்ந்து செயல்பட்டால்யோகமாக மாறும்
சூரியன் சாபமானால் போனஜென்ம பதிவுகளின்படி தந்தையின் சாபம்.அரசின் சாபம் அரசன் சொத்தை அபகரித்தல்
தந்நையை கவனிக்காமல் விட்டுவிடுவது.இதனால் இப்பிறவியில் தந்தை வயதில் உள்ள பெரியவர்களை மாமனாரை அரசுவேலை அமைந்தால் நேர்மையாக கடுமையாக உழையுங்கள்.
தந்தை மேல் அக்கரை காட்டுங்கள்..

தொடர்புக்கு
.....உங்கள் ஹல் மஹா.......
9840290714
6383824552

திங்கள், 13 மே, 2019

Government coast guard

இந்திய அரசின் கடலோரகாவல்படையில் ஆட்கள் தேர்வு
 இந்திய அரசின் பாதுகாப்புதுறையின் ஒரு அங்கமானகடலோர காவல்படை கமாண்டோ பிரிவிற்கு ஆட்கள் கடலோரம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கும் குரூப் A பிரிவிற்கு ஆட்கள் தேர்வு


வயது வரம்பு     =  General & Technical 01-07-1995 முதல் 30-07-1999 வரை பிறந்தவர்கள் விண்ணபிக்கலாம்
கமர்ஷியல்பைலட் 01-07-1995 முதல் 30-06-2001 வரை விண்ணபிக்கலாம்

படிப்பு-  பட்டய படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிி பெற்றிருுக்க வேண்டும்
10+2+3 முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கணிதம் இயற்பியல் பிரிவில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
24-05-2019 அன்று முதலீ 04-06-2019 அன்று வரை சமர்ப்பிக்கலாம்
முகவரி  www.joinindiancoastguard.gov.in
நுண்ணறிவு.உளவியல்.மருத்துவ தேர்வு.நேர்காணல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கபடலாம்
     

செவ்வாய், 7 மே, 2019

OFB-Recuritment!!

Ordinance factory Recruitment details!!!

இந்திய அரசின் பாதுக்காப்புதுறையில் 2019 ஆண்டிற்கான Ch/M  பதவிக்கான திறந்தவெளி தேர்வு விரைவில் நடைபெறுகிறது

Three years Diploma ,degree முடித்த 27 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் வருகிற 10 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
அந்த லிங்க் இதோ

www.i-Register.org/ioforeg/index.php





திங்கள், 6 மே, 2019

தாய் தந்தை சந்திரன் சூரியன்


தந்தையையும் தாயையும் 

அட்ஷய திருதியை தங்கம் வாங்கலாமா ??வேண்டாமா??


அக்ஷய திரிதியை அன்று
சூரியனும் சந்திரனும் உச்சம் பெறும்
மிகச் சிறப்பான நாள் !!

எனவே அன்று தந்தையையும் தாயையும் வணங்கி அவர்களின் ஆசி பெறுதல் மிக்க நலம் ..!

இன்று

வெண்மை நிற பொருள் ஆன

உப்பு
சக்கரை
பால் போன்ற பொருட்களையும்.,

பருப்பு ,
மற்றும்  எழுதுகோல் ( Pen)  வாங்கினால் தான் சுபிட்ஷம். வந்து சேரும்.

பின்குறிப்பு :-
===========

12 வருடங்களுக்கு ஒரு முறை குரு கடகத்தில் இருக்கும் பொழுது அக்ஷய திருதியை அன்று

சந்திரன் ( குரு + சூரியன் + சந்திரண்)

ஆகிய மூன்று கிரகங்களும் உச்சம் பெறும் பொழுது

தங்கம் வாங்கினால்

தங்கம் உண்மையாக சேரும் பலமடங்கு ஆனால் அது மீண்டும் 2027 ஆம் ஆண்டு தான் இந்த சேர்க்கை நடைபெறும்

நாளை தங்கம் வாங்குவது மற்ற தினங்களில் தங்கம் வாங்குவது போன்றதே

குறிப்பு :-
=======

நாளை தங்கம் வாங்கினால் தங்கம் சேரும் என்று சொல்பவர்கள் ,
நகைக்கடை அதிபர்கள் ,

சென்ற முறை வாங்கியவர்கள் யாராவது
இந்த ஆண்டு வாங்கினார்கள் என்றால்
அது உண்மை

பதிவை எழுதியவர் :-

https://www.facebook.com/balajihaasan

சனி, 4 மே, 2019

Jobs 2019!!!

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 19 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Production)- 01
பணி: Manager (Mechanical) - 01
பணி: Dy. Manager (Mechanical) - 02
பணி: Dy. Manager (Electrical) - 01
பணி: Dy. Manager (MM) - 01
பணி: Dy.Manager (Marketing) - 01
பணி: Engineer  (Electrical) - 03
பணி: Officer (HR)  - 03
பணி: Account Officer (Finance & Accounts) - 03
பணி: Officer (Sales & Marketing) - 03

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள், பண்டக மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், சந்தையியல் மேலாண்மை, மனிவள மேலாண்மை, தொழிலாளர் மேலாண்மை போன்ற பிரிவுகளில் எம்பிஏ முடித்து 2 மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி) படிப்புடன் 2 பணி அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் மாறும்படும். 42 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Cement Corporation of India limited, Reged.Office: Core-V, Scope Complex, 7-Lodhi Road, New Delhi - 110 003.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cciltd.in/UserFiles/files/Advertisement%20No_%20022019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2019

புதன், 1 மே, 2019

Join Igcar jobs

அணுஆராய்ச்சி நிலையத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெளோ பதவிக்கு வேலை -

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி கழகத்தில் வேலை
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 30

சம்பளம்: 31,000

கல்வித்தகுதி: B.E./B.Tech./B.Sc. Engg./B.Sc. [Tech.]/M.Sc.,/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.igcar.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.05.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.igcar.gov.in/recruitment/Advt03_2019.pdf



Cpcb - jobs 2019

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு!

டெல்லியில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில், இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) என்ற பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

பணி:
Junior Research Fellow (JRF) - இளநிலை ஆராய்ச்சியாளர்

மொத்தம் = 26 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 23.04.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2019 - காலை 09.30 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: CPCB தலைமை அலுவலகம், டெல்லி

பணியமர்த்தப்படும் இடம்: டெல்லி

வயது வரம்பு: 28 வருடங்கள்
குறிப்பு: எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு கூடுதலாக 5 வருடங்கள் வயது தளர்வும் உண்டு.

ஊதியம்:
மாத ஊக்கத்தொகை - ரூ.25,000 + HRA உள்ளிட்டவை.

கல்வித்தகுதி:
முதுகலை பட்டப்படிப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளான கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அனாலிடிக்கல் கெமிஸ்ட்ரி, பையாலஜி / ஜூவாலஜி / லைஃப் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் (Chemistry, Organic Chemistry, Analytical Chemistry, Biology, Zoology / Life Science, Environmental Science) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று நெட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் என்விரான்மெண்டல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி / கம்யூட்டர் சயின்ஸ் (Civil, Telecommunication Environmental, Chemical, Computer Science / IT) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று கேட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், சுற்றுச்சூழல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (Civil, Environmental, Chemical, Information Technology)இந்த பணிக்கு தகுதியானவர்கள்.

நேர்முகத் தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
சுய கையெழுத்திட்ட நகல்களான, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை, முன் அனுபவம் பற்றிய சான்றிதழ்கள்
மற்றும் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் போன்றவை.

குறிப்பு:
நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் எஸ்.சி / எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு TA / DA சலுகைகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTkzXzE1NTYwMTU3NjNfbWVkaWFwaG90bzE5ODI2LnBkZg== - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
CPCB,
Parivesh Bhawan,
East Arjn Nagar,
Delhi - 110032.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTkzXzE1NTYwMTU3NjNfbWVkaWFwaG90bzI2MDUxLnBkZg== - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...