12 வீடு தரும் உயர்வு தாழ்வுகள்
12 ஆம் வீடு
1 சூரியன்(சிவன்)
2 சந்திரன்(பார்வதி)
சிவனும் பார்வதியும் கூடும் இடம் 12 அதாவது கணவன் மனைவி கூடும் படுக்கை அயன சயன கட்டில் பாவம்,,12 ஆம் வீடு ஆகும்,,
12 ஆம் வீடு கட்டில் சுகம் மூலம் விரயம் ஆகும் விந்து ஸ்ரோனிதம் குறிக்கும்,, விரய ஸ்தானம் என்ற பெயரும் உண்டு,,,
கால புருசனுக்கு 12இல் மீனத்தில் குரு ஆட்சி சுக்ரன் உச்சம்,,, குரு என்றால் பொன் நகை , சுக்ரன் என்றால்,, விந்து,, ஸ்ரோனிதம்,வெள்ளி நகை, பணம், பொருள், குறிக்கும்,,,
நாம் உடலில் இருக்கும் ஜீவ காந்தம் (விந்து,) நாம் தொழில் செய்து சேர்த்தி வைத்த பணம், நகை,, இவை எல்லாம் நமது வாழ்க்கைக்கு எபோதவது விரய செலவு வரும்போது அடகும் வைபோம்,, சில நேரம் விற்கும் சூழல், உருவாகும்,, சுக்ரன் என்றால் பெண், விதவை பெண், குறிக்கும்,, உற்றார் உறவினர் உதவி இல்லாத விதவைக்கு பண தேவை என்றால் அவளும் சில நேரம் உடலை விற்று பணம் புரட்டி வாழ்க்கை நடத்தும் பெண்கள் அவலம் சொல்ல முடியாத துயரம்,,
பணத்திற்காக sperm donate செய்கிற ஆண்களும் உண்டுதான், இவை எல்லாமே விரயம் என்று பொருள் படும்,
12ஆம் வீடு நம் மோட்சம் குறிக்கும் பாவம்,,, மற்றும் தலை மறைவு வாழ்க்கை குறிக்கும், கொலை செய்து தலைமறைவு, கொள்ளை அடித்து தலை மறைவு, வெளிநாடு வாழ்கை,,, சிறைவாசம்,, இவை யாவும் குறிக்கும்,,
சூரியன் சந்திரன் இவர்களுக்கு கிரகணம் ஏற்படுத்த கூடியவர்கள் ராகு கேது தான்,,12 ஆம் பாவம் 1 சூரியன்,2 சந்திரன் அதாவது கணவன் மனைவி சேரும் இடத்தில் கிரகணம் ஏற்படுத்த கூடிய நிழல் கிரகம் இருந்தால் அந்த கட்டில் அயன சயன பாவ பலன் கிடைக்குமா,?? கிடைக்காது
கால புருசனுக்கு 12 மீனம் இது நீர் ராசி, கடலை குறிக்கும்,,தூர மாநிலம், கடல் தாண்டி தூர தேசம் செல்லுதல், இதைக் குறிக்கும்,, இந்த ஜாதகர் வெளிநாடு செல்வாரா மாட்டாரா என்ற கேள்வி கேட்கும் போது ஜோதிதார் முதலில் 12 ஆம் வீடுதான் முதல் ஆய்வு,,செய்வார்,,
மற்றும் சிறை தண்டனை குறிக்கும், வெளிநாடுகளில் பணயகைதி நிலையை குறிக்கும்,,, எங்காவது ஒரு இடத்தில் மாட்டி கொண்டு முழிக்கும் நிலையை குறிக்கும்,, இன்னும் சொல்ல போனால் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு படி கூடஇல்லாத கிணற்றுக்குள் விழுந்து மேலே வர முடியாத நிலையை குறிக்கும், மற்றும் இந்த 12 ஆம் வீடு
சிறைக்கு சமமான தனிமை ,, மன அழுத்தம்,,, எல்லாரும் இருந்தும் அனாதை போல பரதேசி போல வாழ்வது, கேட்பதற்கு நாதி இல்லாத நிலை குறிக்கும்,, நிம்மதியான உறக்கம் இருக்குமா இருக்காதா, நல்ல பஞ்சு மெத்தையில் தூங்குவாரா கட்டாந்தரை படுக்கை தூக்கமா என்று எல்லாம் குறிக்கும் பாவம் இந்த 12 ஆம் வீடு இப்படி பட்ட வீட்டில் கிரகம் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது,, அப்படியே இருந்தாலும் சர்ப்பம் ராகு சர்ப்பம் கேது இந்த இரண்ட தவிர வேறு கிரகம் நிற்கலாம் எப்படியாவது வாழ்க்கையை ஓட்டி விடலாம்,,
12இல் ராகு கேது இருப்பின் வாழும் வாழ்க்கையே நரக வாழ்க்கை தான்,, இதில் கேது இருப்பின் மோட்சம் என்கிறார்கள், ஆம் தற்போதே நரக வாழ்க்கை அனுபவித்து விட்டால் மோட்சம் தானே,,, ராகு இருப்பின் மறு பிறப்பு உண்டு என்று சொல்ல படுகிறது,, அதை வேறொரு பதிவில் பார்போம்
12 இல் ராகு கேது இருப்பின் மண வாழ்க்கையை துண்டாடுகிரார்கள்,,12இல் ராகு கேது இருப்பின் அந்த ஜாதகருக்கு தாம்பத்யம் மறுக்க படுகிறது,, ஒன்று வெளிநாட்டில் மனைவியை பிரிந்து இருப்பார்,,அல்லது சிறையில் இருப்பார், அல்லது சிறைக்கு சமமான தனிமை,, அனுபவிப்பர்,,, கணவர் இருந்தும் இல்லாத மாதிரி,, இருக்கும், மனைவி இருந்தும் இல்லாத மாதிரி இருக்கும், சிலருக்கு பிள்ளை பேரு கூட கேது ராகு தட்டி பரிகிரார்கள்,, ஆம் படுக்கை சுகமே இல்லாத நிலை உருவாக்கி விட்டால் பிள்ளை பேரு எப்படி கிட்டும், சிலருக்கு பிள்ளை பேரு கிடைக்கும்,, சிலருக்கு விவாகரத்து,, சிலருக்கு விதவை, இது போன்று நிரந்தர பிரிவு கொடுத்து விடுகிறார்கள்,, இதை ஓரளவு சமாளிக்க சுப பிரிவு தான் நல்ல பரிகாரம், மனைவி ,பிள்ளை, குடும்பத்தை விட்டு தூரமாக இருப்பது அவ்வபோது வந்து குடும்ப வாழ்க்கை நடத்தலாம், இது நிரந்தர பிரிவை அதாவது, விவாகரத்து விதவை என்று கொடுக்காது,,12இல் ராகு இயற்கையாகவே பணம் சம்பாத்யம் நோக்கில் குடும்பம் மீது பற்று இல்லாமல் பணத்தை அபரிமிதமாக சம்பாத்தியம் செய்வார்,,பெரும்பாலும் பணக்காரரகளுகு 12இல் ராகு இருக்கும்,, அதே போல 12இல் கேது இருந்தாலும் போதும் என்ற அளவிற்கு பணம் வசதி, இருக்கும்,, பிரச்சினையிழ் இருந்து தப்பிக்க சுப பிரிவு தான் பரிகாரம்,, எந்த கோவில் போனாலும் சரியாகாது,, வேலை நிமித்த சுப பிரிவே தான் பரிகாரம்,
தூங்கும் பாயில் பாம்பு இருந்தால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்,, பயந்து கொண்டேதான் இருக்க முடியும்,, ஆகவே 12 எனும் பாவத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து தூங்கும் படுக்கை அறை எனும் 12இல் ராகு கேது இருப்பின் தாம்பத்யம் சுக படாது,, பிரிவுகள், சண்டைகள், விவாகரத்து, விதவை, சிறை, என்று பிரச்சினை மேல் பிரச்சினை கொடுத்து கொண்டிருக்கும்,, எப்போது வரை என்றால் நாம் குடும்பத்தை விட்டு தூரமாக பிரிந்து இருக்கும் வரை,, தூரமாக செல்ல செல்ல தோசம் குறையும், எனக்கும் மனைவி இருக்கிறாள் கணவன் இருக்கிறான் குழந்தை இருக்கிறது எனக்கென்று சொல்லிக்கொள்ள குடும்பம் இருக்கிறது என்று சொல்லி ஓரளவு காலம் தள்ள முடியும்,,
12இல் ராகு கேது இருந்தும் நான் நல்ல படியாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன் என்று சொன்னால் அது அவர்கள் பாக்கியமே,,அவர்கள் முன்னோர்கள் புண்ணியம் செயல்கள் காப்பாற்றுகிறது எனலாம்,,,,,
மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கலுக்கும் தாம்பத்யம் தட்டி பறிக்கப்படுகிறது,, குறிப்பாக சிம்மம் மகம் கால புருசனுக்கு 5 ஆம் வீடு,,, ஆகும், சிம்ம ராசிக்கு 12 ஆம் பாவம் கடக ராசி,, கடகம் சந்திரன் அதிபதி,, சந்திரனின் பரம எதிரி சுக்ரன் ஆவார்,, கடக பாவத்திற்கு பாதகம் அதிபதி சுக்ரன்,, அதாவது கடக லக்ன ராசிக்கு பாதக அதிபதி சுக்ரன் ஆவார்,,,, சிம்மரசிகு அயன சயன பாவம் கடகம் இப்படி இருக்கும் போது காம அதிபதி சுக்ரன்,,, சந்திரன் வீட்டுக்கு நற்பலன் எப்படி செய்வார்,,, செய்ய மாட்டார்,,,, சிம்ம ராசி இல் முதல் நட்சத்திரம் மகம் இந்த மகதிது 12 ஆம் வீடு மிக அருகில்,,, உள்ளது, அதனை அடுத்து பூரம், உத்திரம் வரும்,, இந்த பூரம் உத்திரம் மக நட்சத்திரத விட ஓரளவு பிரச்சினையை சந்திக்க மாட்டார்கள்,, அதே போல கடக லக்ன காரர்களுக்கு திருமணம் தாமதம் செய்வார் இந்த களதிற காரகன்,,,, ஆக மகம் நட்சத்திர காரர்கள் உம் கணவன் மனைவி என்ற உறவை அருகருகே வைத்து இருக்க கூடாது,,, சுப பிரிவு ஏற்படுத்தி கொண்டு வாழ நலம்,, அந்த மண வாழ்க்கை நிலைக்கும்,, இல்லை எனில் விவாகரத்து அல்லது தனி கட்டயாக இருக்க நேரிடும்,,,
12 இல் ராகு அல்லது கேது இருக்கும் ஜாதகர்கள் மற்றும் மகம் நட்சத்திர காரர்களும், வாழ்க்கை துணையை வேலை நிமித்தமாக சுபமாக பிரிந்து இருப்பதே பரிகாரம்,, அதாவது அருகருகே இருந்தால் சுக்ரணின் காரகமான 12 எனும் அயன சயன தாம்பத்யம் சுகம் கிடைக்காது,, பிரச்சினை தலை தூக்கும், பிள்ளை பேரு பிரச்சினை குடுக்கும்,, விவாகரத்து வரை கொண்டு வந்து விடும்,,, அல்லது தனிமை சிறை,, போன்ற இருட்டுவாழ்க்கை,அமையும்,கொஞ்சமாது மண வாழ்க்கை குடும்பம் நடத்த வேண்டுமென்றால் இதை செய்தே ஆக வேண்டும்,,
#சுக்கிரன்#கேது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக