செவ்வாய், 18 மே, 2021

2021 year DA Percentage increase -cgepa

 

மத்திய அரசு என்ன சொல்லுகிறது-அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 




அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணைக்கும் அவர்களின் ஊதியத்தின் அளவில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் DA உயர்த்தப்படும். கடைசியாக 2019 ஜூலை நிலவரப்படி 17% அளவிலான DA தொகை வழங்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பரவல் நாட்டில் உள்ளதால், அதற்கான செலவினங்களை ஈடுசெய்வதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர் எதிர்பார்ப்பு???

தற்போது 2021 ஜனவரி மாதம் வரையிலான 3 தவணை DA தொகை நிலுவையில் உள்ளது. அதாவது, 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1, 2021 ஜனவரி 1 வரையிலான காலகட்டம். இது தவிர ஓய்வூதியம் பெறுபவர்களின் DR தொகையும் இந்த காலங்களில் நிலுவையில் உள்ளது. 2021 மார்ச் மாத பாராளுமன்ற கூட்டத்தொடரில் DA தொடர்பான கேள்விகள் எழுந்தது. அதற்கு மத்திய நிதி அமைச்சர் அனுராக் தாக்கூர், நிலுவை தொகை ஜூலை 1ல் வழங்கப்பட உள்ளதாகவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிறுவைக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு கிடைத்த லாபத்தின் மதிப்பையும்  

தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால், ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட வேண்டிய DA உயர்வு அறிவிப்பு மே மாதமாகியும் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், ஜூன் மாதத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Chennai maruthi car CSD price list 

ஜே.சி.எம் – பணியாளர்கள் பக்கத்தின் தேசிய கவுன்சிலானது வரவிருக்கும் டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் கொரோனாவின் மூன்றாம் அலையும் எழும் என்ற பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA தொகையானது மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...