சனி, 24 ஜூலை, 2021

Neesam


 எப்போது நீசம் பெற்ற கிரகங்கள் கூட வலிமை பெறுகின்றன?


ஷட்பலம் எனும் ஆறு வகையான பலங்களில் ஸ்தான பலம் தான் அதிக வலிமை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக திக்பலம் என பெயர் பெற்ற இந்த பலம் ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறுபட்ட ஸ்தானங்களில் அமைந்துள்ளது.


1. மகரத்தில் குரு நீசம் என்றாலும் , லக்னம் மகரமாக இருக்கும் பட்சத்தில் அங்கே குரு நீசத்தை இழந்து பலம் பெறுகிறார். அது போலவே மீன லகனமாக இருந்து , லக்னத்தில் புதன் அமரும் நிலையில் , புதன் நீசத்தை இழந்து பலம் பெறுகிறார்.


இன்னும் சொல்லப்போனால் 12 இல் மறைந்து போன குருவும், அல்லது 12 இல் மறைந்து போன புதனும் வலிமை இழந்து விட்டதாக நாம் போடுகின்ற கணக்கும் தவறாக போகலாம்..ஏனென்றால் 12 இல் உள்ள குருவோ அல்லது புதனோ லக்னத்தை அடையும் நிலைக்கு அருகில் நெருங்கி வர, வர அவை பூரணமான திக் பலம் பெறும் நிலையில் உள்ளன...அதாவது 12 ஆம் இடத்தில் இறுதி 8 degree அளவில் நெருங்கும் போதே , இந்த இரு கிரகங்களும் வலு பெற துவங்கி விடுகின்றன.


2. இது போன்றே ஒவ்வொரு கிரகங்களும் நீசம் பெற்ற நிலையிலும், நீசத்தை இழந்து திக்பலம் பெற்ற நிலையில் மட்டுமல்ல, அதை நோக்கி நெருங்கும் நிலையிலும் வலு பெறுகின்ற அமைப்பில் இருக்கும்..எததனை பலம் என்றால் அவை உள்ள பாகை அடிப்படையில் அந்த பலம் அமையும்.


3. செவ்வாய் , சனி போன்ற பாபகிரகங்கள் நேர்வலு இல்லாமல், திக் பலம் எனும் மறைமுக வலு பெறும்போது கெடுபலன்கள் குறைத்து, நல்ல பலன்களை செய்யும்.


4. லக்னாதிபதி யாக செவ்வாய் இருந்து 10 இல் ஆட்சி அல்லது உச்சம் பெறுகின்ற நிலையை விட, திக்பலம் பெறுகின்ற செவ்வாய் கெடுபலன்களை குறைக்கும் நிலையிலேயே இருப்பார்..அதை விட செவ்வாய் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும் கூட, திக் பலம் பெற்ற நிலையிலோ, அல்லது அதனை நெருங்கும் degree range இல் இருந்தால் கூட , நன்மைகளை தரும் நிலை பெறுவார்..


அதே சமயத்தில் திக்பலம் பெறுகின்ற கிரகத்தின் 180 degree + or - 8 degree இல் உள்ள கிரகங்கள் தங்கள் பலத்தை இழக்கின்றன என்பதையும் நாம் மறந்து விட கூடாது...ஒரு கிரகம் வலிமை பெறுகின்ற அதே சமயத்தில் வேறொரு பக்கம் வலிமை இழப்பது எது என கணக்கிட வேண்டியது ஜோதிடர்களாகிய நமது கடமை...


சர்வம் சிவார்ப்பணம். 🙏

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...