திங்கள், 19 ஜூலை, 2021

Numerology view

 #மீந்த சோறு....


ஒரு ஜோதிட நியூமராலஜி பதிவு....


எண்களை இயக்குவதும் கிரகங்களே தவிர எண்கள் அல்ல... கிரகத்திற்குள் எண்கள் அடக்கம்... அதனால் தான் கிரகங்களின் அடிப்படையில் நான் எண்ணியலை பார்க்கின்றேன்... தவிர எண்ணியல் முழுவதாக மாற்றம் தரும்  என்பது எனது கருத்து அல்ல அதை நான் ஏற்பதும் அல்ல... மாறாக நம்மை திசாபுத்தியுடன் ஏற்றத்தை தரும் எண்ணை நம் ஜாதகத்தில் இருக்கும் அதை கண்டறியலாம்... நன்றாக கவனிக்கவும் #திசா_புத்தியுடன் நமக்கு ஏற்றம் தரும் எண்...  


உங்களுக்கு பொருளாதாரம் வேண்டினால் அதற்கும் உங்கள் ஜாதகத்தில் சில கிரக எண்கள் வேலை செய்யும்... கெடுப்பதற்கும் சில கிரக எண்கள் வேலை செய்யும்... இது #உயிர்/பொருள் என்கிற அடிப்படையில் பிரித்து பார்த்து அதிர்ஸ்ட எண்களை தேர்வு செய்ய வேண்டும்.... இங்கு யோகாதிபதி / யோகி / புஷ்கராம்சம்/ பாக்கியாதிபதி என எண்களை எடுத்தால் வேலைக்காகாது...


அதே நேரம் மேற்கூறியவைகள் அதி்ர்ஸ்ட எண்ணாக வந்தால் மிகச்சிறப்பு.... 


சில நேரங்களில் அவயோகி 8 / 12க்குடயவனின் எண் கூட உங்கள் அதிர்ஷ்ட எண்ணாக வரலாம்... தவறில்லை....


ஆதிபத்தியங்கள் வேறுபட்டாலும் அதிலும் அதிர்ஸ்டங்கள் உண்டு....


சரி அதிர்ஷ்டங்கள் என்பது எது பொருளான காசு பணம் அசையும அசையா சொத்துக்கள் இவைமட்டுமா?


அல்லது உயிரான பதவி பட்டம் படிப்பு தாய் தந்தை மனைவி உடல் சுகம் உடன் பிறப்பு குழந்தைகள் இவையுமா?


கூர்ந்து கவனித்தால் ஒன்று அறியலாம் ஏதேனும் ஒன்று கூடியும் ஒன்று குறைந்து அல்லது இல்லாமலும் இருக்கும்... 

இவை அனைத்தையூம் ஒரு எண் வழங்கிடுமா? வழங்கிடும் என்றால் அனைவருக்கும் ஒரே எண் அல்லது சில எண்களையே பெயராக வைத்திரூக்கலாமே?...


எனவே அதுவல்ல என்பது தெளிவாக புரிகிறது... எனக்கு மட்டும் அல்ல உங்களுக்கும்...


ஆக ஒரு எண் அனைத்தையும் கொடுத்து விடாது மாறாக ஏதேனும் ஒன்றை கொடுக்கும் அது உண்மை... அது உயிர் அல்லது பொருள்... இவையிரண்டில் ஒன்று எனவே எது வேண்டுமோ அதற்கு ஏற்ற ஒரு எண் தேர்வூ செய்யப்படவேண்டும்...


இன்றைக்கு பலருக்கும் தேவை பொருள் மட்டுமே எனவே பொருளாதார எண் எது தங்கள் ஜாதகத்தில் உள்ளது என அறிந்து அதற்கு ஏற்றவாறு எண் எடூத்து திசாபுத்தியில் அவை வரூம் போது மிகப்பெரிய மாற்றம்்நிச்சயம் உண்டாகும்.... அதை உயிர் பொருள் பிரிக்க #பேலன்ஸ்தியரி ரூல் தெரியவேண்டும்... ஒரு எண் உயிராக வேலை செய்கிறதா பொருளாக வேலை செய்கிறாதா என அறிய... மாறாக 2ம் அதிபதி நட்சத்திரம்னு சொல்லிட்டு நம்பர் எடுத்தாலும் அதிர்ஷ்டபாகை எண் எடுத்தாலும் சரியாக வராது....


எதற்கு எல்லாம் எண்களை தேர்வு செய்யலாம்?

குழந்தைக்கு பெயர்வைக்க

வீட்டிற்கு பெயர்வைக்க

அலுவலகத்திற்கு பெயர்வைக்க

செல்போன் நம்பர் எடுக்க

வண்டிக்கு எண் எடுக்க

முக்கியமான விசயங்களை முடிவுசெய்யும் தேதியாக இப்படி பல விசயங்களுக்கு எடுக்கலாம்....


அதற்கு முன்பு அடிப்படையான சில விசயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.... இந்த அடிப்படையான  விசயங்கள் அடிப்படைகிடையாது அஸ்திவாரம் ஆகும்....


இதில் தான் ஏதோ ஒரு எண் உங்களுடய ஆளுமையில் இருக்கும்.... அதாவது உங்கள் பெயரின் வீட்டின் செல்போனின் வண்டியின் ஆதாரின் பாஸ்போர்டின் கூட்டு எண்ணாக வரும்....


சரி இதில் வரும எண் பொருளாதாரத்தை கொடுத்தால் வெளிஉலகில்  வெற்றியும்.... உயிரை கொடுத்தால் வெளி உலகில் தோல்வியும் உண்டு... இது நிச்சயம் நடைபெறும்.... அதை மாற்றிக்கொள்வது சிறப்பு....


அந்த எண் தொடர்புகள் மிகப்பெரிய வெற்றி அல்லது தோல்விக்கு காரணமாக இருக்கும்... இதை நீங்கள் கடந்து செல்லமுடியாது....


அதற்கு கீழே உள்ள பதிவுகளை படிக்கவும்... இந்த பதிவில் வரும் எண்கள் உங்களுடய உடலில் ஒரு அங்கமாக இருக்கும் வண்டி எண்ணாக வீட்டு எண்ணாக மனைவியின் பிறந்த தேதியாக குழந்தையின் பிறந்த தேதியாக தாய் தந்தை உடன் பிறப்பு அலுவலக எண் இப்படி....


பிறந்த தேதிக்கு்உரிய எண் தொடர்புகள்.... (கூட்டு எண்ணாகவும் எடுக்கவும்... அனைத்தையும் கூட்டி 9க்குள் அடக்கவும்)


1 க்கு 4/5 எண் உடன் பயணிக்கும்


2 க்கு 7/3 எண் உடன் பயணிக்கும்


3 க்கு 7/2 எண் உடன் பயணிக்கும்


4க்கு 5/1 எண் உடன் பயணிக்கும்


5க்கு 4/1 எண் உடன் பயணிக்கும்


6க்கு 8/9 எண் உடன் பயணிக்கும்


7க்கு 3/2 எண் உடன் பயணிக்கும்


8க்கு 9/6 எண் உடன் பயணிக்கும்


9க்கு 8/6 எண் உடன் பயணிக்கும்


இதை தாண்டி உங்களுக்கு எந்த எண்ணும் அதிர்ஷ்டத்தை தூக்கி கொடுத்து விடாது என்பதை அறியவும்... ஒரு எண்ணுக்கு உடன் இரண்டு எண்கள் பயணிக்கும் இதில் எது பொருளாதாராத்தை தரூகிறதோ அது உங்களுக்கு வெளிஉலகில் வெற்றி தரும் இன்னொரு எண் தோல்வி தரூம்... 


அந்த இன்னொரூ எண்ணை வீட்டிற்கும் உறவுகளுக்கும் பயன்படுத்த வேண்டும் நட்பூ காதல் நீடிக்கும்.... அது அறிய #பேலன்ஸ்தியரி ரூல் மிக முக்கியம்.... அதாவது இரண்டில் எது பொருள் எது உயிர் என அறிந்து அதற்கு ஏற்றவாறு பெயருக்குரிய எண் அலுவலக எண் வண்டி எண் செல்போன் எண் இப்படி பயன்படுத்தலாம்... 


உதாரணம் வீட்டிற்கு வண்டி வாங்கும் போது உயிராகவும் அதே அலுவலகத்திற்கு வாங்கும் போது பொருளாகவும் எடுக்கவேண்டும்... மாற்றி எடுத்து உறவுகளை கெடுத்து கொள்ளகூடாது... 


உயிர் எண்ணாக இருந்தால் வண்டி சும்மாவே இருக்கும் வேலை பெரிதாக வராது... இது வாடகை வண்டிக்கும் பொருந்தும்.....இது போலவே வாடகைக்கு விடும் குடோன் மற்றும் வீடுகளும் அடங்கும்.... செல்போன் எண்களும் இப்படியே... உயிராக இருந்தால் வெட்டி பேச்சுகளும் பொருளாக இருந்தால் தேவைக்கான பேச்சாகவும் அதனால் வரவாகவும் இருக்கும்....


இன்னும் சொல்லபோனால் அந்த எண்களின் திசை உங்களின் மிகப்பெரிய வெற்றி அல்லது தோல்விக்கு வித்திடும்... அதனால் சிந்தித்து தேர்ந்தெடுங்கள்...


அதைவிடுத்து நட்பு எண் பகை உச்ச எண் நீச எண் சமஎண் என்பது என் அனுபவத்தில் சரியாக வரவில்லை.... உயிர் பொருள் என்பது மட்டூமே சரியாக உள்ளது எனது அனுபவத்தில்....


உங்கள் பிறந்த தேதிக்கு ஏதேனும் ஒன்று பொருள் குடுக்கும் எண்களாக வரும் அல்லது மொத்த கூட்டு எண்ணுக்கு (அதாவது தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி வருவது) ஏதேனும் ஒன்று பொருள் கொடுக்கும் எண்களாக வரும் அதை தேர்ந்தெடூத்து வைத்தால் திசாபுத்தியில் அதுவும் வைபரேசன் அடிப்படையில்  உயர்தரும்... மாறாக வேறு எந்த எண்களும் உயர்என்பது கேள்வி குறி தான்.... காரணம் குடுப்பினை என்பது நீங்கள் பிறக்கும் போதே எண்களாக உங்கள் பிறந்ததேதியில் உள்ளது தவிர வேறு தேடும் இடத்தில் இல்லை என்பதை அறிக... இதை வைத்தே நம்முடய மரண தேதிகளும் நம்முடன் பயணிக்கிறது.... இத்துடன் இதை முடிக்கிறேன் இதற்கு மேல் இன்னும்மொரு பதிவில் வேறு சில விசயங்களை பதிகிறேன்....


இங்கே உங்களுக்காக ஒரு பதிவு இதை எடுத்து ஆய்வு செய்து கொள்ளுங்கள் எவ்வளவு பெரிய ஆட்களுக்கும் இது உபயோகப்படும்...


செக் பன்னுங்க சரியாக வரும்

உங்களுடய பிறந்த தேதி மாதம் வருடம் இதை கூட்டினால் ஒரு எண் வரும்... அந்த எண் 1ஆனால் உங்கள் வீட்டில் 5/14/23 அல்லது 4/13/22ம் தேதியில்  பிறந்த நபர்கள் இருப்பார்கள்... (இதை கூட்டினாலும 5/4 என்று தான் வரும் இப்படியே மற்றவைக்கும்)....

 

கூட்டு எண் இரண்டானால்

3/12/21 அல்லது 7/16/25ம் தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்...


கூட்டு எண் மூன்று ஆனால்

7/16/25 அல்லது 2/11/20 ம் தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்....


கூட்டு எண் நான்கானால் 

5/12/21 அல்லது 1/10/19 தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்...


கூட்டு எண் ஐந்தானால்

1/10/19 அல்லது 4/13/22 ம் தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்....


கூட்டு எண் ஆறானால்

9/18/27 அல்லது 8/17/26 ம் தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்....


கூட்டு எண் ஏழானால்

3/12/21 அல்லது 2/12/21ம் தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்....


கூட்டு எண் எட்டானால்

6/15/24 அல்லது 9/18/27ம் தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்....


கூட்டு எண் ஒன்பதானால்

6/15/24 அல்லது 8/17/26ம் தேதியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்....


இந்த கூட்டு எண்ணுக்குரிய கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவ உறவுகள் மேற்சொன்ன தேதியி்ல் பிறந்திருப்பார்கள் உதாரணம் 5ம் பாவம் எனில் தாத்தா தாய்மாமன் குழுந்தைகள் காதலி... 7ம் பாவம் எனில் களத்திரம்.... 9ம் பாவம் எனில் தந்தை.... 4ம் பாவம் எனில் தாய் இப்படியா.... மற்றும் இந்த கூட்டு எண் எந்த கிரகமாக வருகிறதோ அந்த கிரக உறவு முறைகளும் அடங்கும்....


எந்த உறவுமுறை இந்ததொடர்பு எண்ணில் பிறந்து உள்ளாரோ அந்த உறவுகள் தொடர்பு ஜாதகருக்கு கடைசிவரை உண்டு இல்லையெனில் பாதியில் தொடர்புகள் நீங்கிவிடும....


உதாரணம் செவ்வாய் எண்ணில் வந்தால் உடன்பிறப்பு மச்சினன் இப்படி.... சிலருக்கு உடன் பிறப்பு மூன்று நான்கு கூட இருக்கலாம் அதனால் குழப்பம் வரும்.... இதில் எந்த உடன்பிறப்புக்கு இந்த தொடர்பு எண் உள்ளதோ அந்த உறவு உடன்பிறப்பு தொடர்பு கடைசிவரை உண்டு...


இப்போது குழந்தை ஸ்தானத்தில் இருந்தால் குழந்தைகளுக்கும் இப்படியாக எடுக்கவும்....


பொதுவாக எனது அனுபவத்தில் செவ்வாய் கூட்டுஎண்ணாக வரும் போது சனி என்கிற 8/17/26 என்கிற எண்களும்....


சனி கூட்டு எண்ணாக வரும் போது 6/15/24 என்கிற சுக்ரன் எண்களும்...


சுக்ரன் கூட்டு எண்ணாக வரும் போது 9/18/27 என்கிற செவ்வாய் எண்களும்.... குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன....


கேது கூட்டு எண்ணாக வரும் போது 2/11/20 என்கிற சந்திரன் எண்களும்....


சந்திரன் கூட்டு எண்ணாக வரும் போது 7/16/25 என்கிற கேது எண்களும் மற்றும் 3/12/21 என்கிற குரு எண்களும்...


குரு கூட்டு எண்ணாக வரும் போது 2/11/20 என்கிற சந்திரன் எண்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன...


ராகு கூ்ட்டு எண்ணாக வரும் போது சூரியன் என்கிற 1/10/19 எண்களும் புதன் என்கிற 5/14/23 எண்களும்....


சூரியன் கூட்டு எண்ணாக வரும் போது 4/13/22 என்கிற ராகு எண்களும் மற்றும் 5/14/23 என்கிற புதன் எண்களும் ஆதிக்கம் செலுத்துகிறது...


ராகு சூரியன் சந்திரன் கேதுவுக்கு மட்டும் இரண்டு கிரகங்களின் ஆதிக்கம் உள்ளது காரணம் நைசர்க்கிய பலம் அடிப்படையில்... எப்படி என்பது உங்களது அனுபவத்தில் எடுத்து கொள்ளவும்...


மற்றும் ஒரு சிறு பொறி உங்கள் ஜாதகத்தில் 5ம் அதிபதி இருக்கும் மண்டல எண் தான் குழந்தையின் பிறந்த தேதி அல்லது கூட்டு எண்... 7ம் அதிபதி இருக்கும் மண்டல எண் தான் களத்திரத்தின் பிறந்த எண் அல்லது கூட்டு எண் செக் செய்யவும்.... நைசர்க்கிய பலம் தெரியனும் இதை எடுக்கனும்னா...


#பின் குறிப்பு கேள்விகள் கேட்க வேண்டாம்.... பதில் தருவதற்கு நேரமின்மையே காரணம்....

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...