7th Pay Commission முக்கிய செய்தி.... டி.ஏ. அரியர் தொகை கிடைக்குமா கிடைக்காதா?? எதிர்பார்ப்புடன் மத்திய அரசு ஊழியர்கள் .....
ஒன்றரை வருடங்கள் முடக்கப்பட்ட அகவிலைப்படி (Dearness Allowance) நிலுவைத் தொகை பற்றி எதுவும் பேசப்படவில்லை. ஜூன் 2021 வரை அகவிலைப்படி முடக்கப்பட்டதால், அதன் அரியர் தொகையை அளிப்பது பற்றி பேச எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜேசிஎம் செயலாளர் (பணியாளர் பக்கம்) தேசிய கவுன்சில் ஷிவ் கோபால் மிஸ்ரா, அகவிலைப்படியை அதிகரித்ததற்கு (DA Hike) அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆனால், நிலுவைத் தொகையைப் பற்றி பேசப்படாதது குறித்து அவர் சிறிது வருத்தப்பட்டார். மிஸ்ரா கூறுகையில், ‘ஒன்றரை வருட நிலுவைத் தொகை (18 மாதங்கள் டிஏ அரியர்) இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலை மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்கம் நிச்சயமாக பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் ஊழியர்கள் என இவருக்கும் நன்மை பயக்கும் ஒரு வழி காணப்படும்.’ என்றார்.
28% % மொத்தமாக அளிக்கப்படும்
ஜூலை 14 ஆம் தேதி, அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த (DA Hike) அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த அதிகரித்த அகவிலைப்படி ஊழியர்களின் செப்டம்பர் சம்பளத்தில் கிடைக்கும்.
இதனுடன், 2021 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். கடைசி மூன்று தவணைகள் மொத்தமாக அளிக்கப்பட உள்ளன. கொரோனா காரணமாக ஜனவரி 2020, ஜூன் 2020, ஜனவரி 2021 ன் அகவிலைப்படி முடக்கப்பட்டது. இப்போது இந்த முடக்கம் நீக்கப்பட்டுள்ளது.
28% க்கு பிறகு அகவிலைப்படி 3% அதிகரிக்கும்
AICPI இன் சமீபத்திய தரவுகளிலிருந்து, அகவிலைப்படி ஜூன் 2021 இல் 3% அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. அதாவது, 28 சதவீதமாக அதிகரித்த மொத்த அகவிலைப்படி, இப்போது மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்கும். இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி - அகவிலை நிவாரணம் 31% ஆக அதிகரிக்கும்.
ஜூன் 2021 க்கான தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ தரவைப் பார்த்தால், குறியீடு 1.1 புள்ளிகள் அதிகரித்து 121.7 ஆக உள்ளது. இப்போது 2021 ஜூன் மாதத்தில் உதவித்தொகை 3 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். எனினும், இது பற்றி எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை.
பிற கொடுப்பனவுகளிலும் பலன் கிடைக்கும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) செப்டம்பரில் அகவிலைப்படி அதிகரிப்பைத் தவிர பிற நன்மைகளும் கிடைக்கும், கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இதில் பயணக் கொடுப்பனவு மற்றும் நகரக் கொடுப்பனவு ஆகியவை அடங்கும்.
ஓய்வூதியத்திற்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜூட்டி ஆகியவற்றிலும் பெரிய அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அகவிலைப்படி அதிகரிப்பின் தாக்கம் இந்த அனைத்து கொடுப்பனவுகளிலும் இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக