🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 12 Aura Fruit Diet (Vedha):*
🍒 *காலை:*
*சிவப்பு அரிசி கஞ்சி:*
மண் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சமைக்கவும். (மண்பாத்திரம் சிறப்பு)
குக்கர் மற்றும் அலுமினியம் பாத்திரத்தில் கஞ்சி செய்வதை தவிர்க்கவும்.
கஞ்சி தயாரானதும் அதில் உள்ள நீரை வடிக்காமல் இந்துப்பு அல்லது கடல் உப்பு (ஐயோடின் சேர்க்காதது) கலந்து உண்ணவும்.
தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். இதனை உண்டால் நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
*குறிப்பு:*
சிகப்பரிசீ கஞ்சி செய்வதற்கு, அரிசியை தண்ணீர் விட்டு கழுவி உடனே வடித்து Mixie ல் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து, உலை கொதித்தபின் சேர்க்கவும். முதலில் சிறிது பொங்கிவரும். பின்னர் தணலை குறைத்து வேகவிடவும். சீக்கிரம் வெந்துவிடும்.
🍒 *மதியம்:*
*தேங்காய் சாதம்.*
இதனை கைக்குத்தல் அரிசி (அ) ஆர்கானிக் அரிசி (அ) ஒருமுறை மட்டும் பட்டை தீட்டப்பட்ட அரிசி பயன்படுத்தி சமைக்கவும்
You can eat with Pudhina Chutney
🍒 *இரவு:*
பழங்கள் எடுத்துகொள்ளலாம்
*பிறகு பசித்தால்:*
இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,
புட்டு, இடியாப்பம்
இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்
❗❗ Note: ❗❗
மாப்பிள்ளை சம்பா அரிசியில் சாதம் மதியம் அல்லது இரவில் செய்து அதில் நீர் ஊற்றி வைக்கவும். 13வது நாள் உண்ணுவதற்கு இதை தயாரித்து வைக்க வேண்டும்.
*நன்றி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக