பணப் பெட்டகம்
💰💰💰💰💰💰💰
வணக்கம் நண்பர்களே அனேக அன்பர்கள் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் இந்த பதிவு செய்கிறேன்.
ஐயா எவ்வளவு காசு சம்பாதித்து கொண்டு வந்தாலும், வீட்டில் வைத்தாலும் தங்குவதில்லை.
ஐயா கஷ்டப்பட்டு உழைத்தாலும், எங்களுக்கு வருமானம் குறைவாக வருகிறது, சேமிப்பும் இல்லை. எங்கள் வீட்டில் பணப்பெட்டியை எங்கு வைக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளை , அன்பர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் இந்த பதிவு.
தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் ONLINE BANKING / DIGITAL MONEY TRANSACTION என பல்வேறு வசதிகள் இருந்தாலும் அன்றாடம் அவசர தேவைக்காக வீட்டில் பணம் வைக்க வேண்டியுள்ளது.
அந்த பண பெட்டகத்தை சரியான இடத்தில் வைத்தால் , வீண் செலவுகள் உண்டாகாமல் தவிர்க்கப்படும். அதனால் பணம் சேமிப்பு உண்டாகும்.
1 . எந்த திசையில் பண பெட்டகமும் வைக்க வேண்டும்?
2. என்ன பொருட்களை அதில் வைக்க வேண்டும்?
3. எந்த பொருட்களை அதில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்?
என்பதை பற்றி பார்ப்போம்.
பண பெட்டகமும் வைக்க சரியான திசை, தென்மேற்கு எனப்படும் நைருதி திசையாகும். இந்த தென்மேற்கு திசை பிரித்திவி எனப்படும் மண்தத்துவம் உடையது. மண் என்பது ஒன்றை நிலையாக வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. இந்த தசையில் பண பெட்டகத்தில் பணத்தை வைக்கும் பொழுது, அது நிலைத்து நிற்கிறது.
தென்மேற்கு திசையில் வைக்க முடியாத பட்சத்தில், இரண்டாம்பட்சமாக தெற்கு அல்லது மேற்கு திசையில் வைத்துக்கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், மேற்கண்ட மூன்று திசையும் மூடிய திசையாகும். கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு வடகிழக்கு போன்ற பகுதிகள் திறந்த பகுதிகளாகும்.
பணப் பெட்டகத்தை கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எப்பொழுதும் வைக்கவேண்டும். தேவையின் போது திறக்க வேண்டும், தேவை இல்லாத பொழுது எப்பொழுதும் மூடியே இருக்க வேண்டும்.
தென்கிழக்கு, தெற்கு, மேற்கு , வடமேற்கு பார்த்து வைக்கக் கூடாது. இது பண வரவை தடைசெய்யும் , வீண் செலவு உண்டாகும். அதனால் சேமிப்பும் உண்டாகாது. அப்படியே சேமித்தால் அது தங்காது.
தென்மேற்கு, தெற்கு, மேற்கில் பண பெட்டகம் வைக்க முடியாவிட்டால், செல்வத்தின் அதிபதியான குபேர திசையான வடக்கில் வைக்கலாம். வடக்கு திசையில் வைக்கும்பொழுது, கிழக்கு , வடக்கு , வட கிழக்கு பார்த்து திறக்கும் படியான அமைப்பு இருக்க வேண்டும்.
பணபெட்டகம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமான இடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்வார்.
பணப் பெட்டகத்தில் சிவப்புநிற துணி விரித்து அதன்மீது பணம், நகை போன்றவற்றை வைக்க வேண்டும்.
பணம், நகை, டாக்குமெண்ட் தனித் தனியாக வைக்க வேண்டும். ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைக்க கூடாது.ஒவ்வொன்றுக்கும் இடம் ஒதுக்கி ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும்.
பணப்பெட்டியில் நறுமணம் கமழும், பச்சைகற்பூரம், ஏலம், கிராம்பு, லவங்கப்பட்டை, தூயசந்தனம் போன்ற பொருட்களை, பச்சை துணியில் முடிந்து உள்ளே வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதில் உள்ள பொருட்களை மாற்றி புதிதாக வைக்க வேண்டும்.
வெள்ளியினால் செய்யப்பட்ட மகாலட்சுமி நாணயம் ஒன்று வைப்பது செல்வ வளம் உண்டாகும்.
தெற்கு மேற்கு தென்மேற்கு திசையில் வைக்கும் பண பெட்டகம் மஞ்சள் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். பச்சை, கருப்பு நிறங்கள் ஆகாது. இளம் நிறமுடைய வர்ணங்கள் ஏற்புடையது. பண பெட்டகத்தில் வெளிப்புறத்திலும், உட்புறத்தில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் குறியீடு வரைந்து வைப்பது நேர்மறை சக்திகளை ஈர்க்கும்.
பல வீடுகளில் பண பெட்டகத்துக்கு அடர்பச்சை (Dark Green) நிறம் பூசி தென்மேற்கு மூலையில் வைத்திருப்பார்கள், அது தவறானது.
பணப் பெட்டகத்தை எப்பொழுதும் துடைத்தார் போல் காலியாக வைக்க கூடாது. ஓரிரு நாணயங்கள் ஆவது அங்கு இருக்க வேண்டும்.
பணப் பெட்டகத்தை அடியில், சரியான சப்போர்ட் கொடுத்து ஆடாத படி வைக்க வேண்டும்.
பணப் பெட்டகத்தின் எதிரில் குளியல் அறை , கழிவறை, சமையல் அறை வரக்கூடாது.
பணப் பெட்டகத்தை பிரம்மஸ்தானம் என்னும் வீட்டின் மையப் பகுதியிலும், பீம் எனப்படும் உத்திரத்தின் அடியிலும் வைக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது வீட்டிலும் தொழிலிலும் தேவையில்லாத பண சம்பந்தபட்ட பாரத்தையும், பதட்டத்தையும் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக