ஜோதிடத்தில் பரிகாரமுறைகளின் basic சூத்திரம்..
காலச்சக்கர தத்துவத்தின் அடிப்படையில் தோஷம் பெற்ற ஒரு கிரகத்தின் தசை or புக்தி நடைபெறும் போது அதிலிருந்து மீண்டு வருவதற்காக சில பரிகாரங்களை சொல்கிறோம்...
ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை கொண்டது..அதனால் தான் ஒவ்வொரு பரிகாரமும் சில வேறுபாடுகளை தம்முள் கொண்டே இருக்கின்றன.
Basic formula எனும் அடிப்படை சூத்திரம் தெரிந்து கொண்டால், நீங்களே நடக்கும் தசா புக்திக்கு ஏற்ற பரிகார முறைகளை தேர்வு செய்து கொள்ளலாம்..
எதோ ஒரு கிரகம் உங்கள் ஜாதகத்தில் தசை நடத்துகிறது..தசாநாதன் எந்த ராசி யில் நிற்கின்றார் என்பதை பொறுத்து அந்த ராசிக்கு ஏற்ற பொருட்களை தானம் செய்வதை தேர்வு செய்யுங்கள்.
1. தாது ராசிகள்
மேஷம், கடகம், துலாம்,மகரம்.
பூமியில் இயற்கையாக கிடைக்கின்ற தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள், மற்றும் இதர தாது பொருட்களை தானம் செய்ய , தோஷம் பெற்ற கிரகத்தின் தசை, சற்று விடுதலை தருகிறது..
உதாரணம்..
சூரியன்..மாணிக்க கல்
சந்திரன்.. முத்து
செவ்வாய்..பவளம்
புதன்..மரகதம்
குரு..புஷ்பராகம்
சுக்கிரன்..வைரம்
சனி..நீலக்கல்
இராகு..கோமேதகம்
கேது..வைடூரியம்
2. மூல ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.
நாம் உயிர் வாழ இயற்கை தருகின்ற காய், கனி, மலர்கள், நவதானியங்கள் போன்றவற்றை தானம் செய்ய, தோஷம் பெற்ற கிரகத்தின் தசை ,சற்று விடுதலை தருகிறது.
உதாரணம்..
சூரியன்..கோதுமை
சந்திரன்..அரிசி
செவ்வாய்..துவரை
புதன்..பச்சை பயிறு
குரு..கொண்டை கடலை
சுக்கிரன்..வெண் மொச்சை
சனி.. எள்ளு
இராகு..கருப்பு உளுந்து
கேது..கொள்ளு
3. ஜீவ ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
பூமியில் உள்ள உயிரினங்களை தானம் செய்யும் யுக்தி. உதாரணமாக கோதானம் எருமை , காளை, சேவல், கோழி, குதிரை, ஆடு போன்ற ஜீவராசிகளை தானம் செய்ய, தோஷம் பெற்ற கிரகத்தின் தசை சற்று விடுதலை தருகிறது.
உதாரணம்..
சூரியன்.. காளை மாடு
சந்திரன்..வாத்து.
செவ்வாய்..வெள்ளாடு, குதிரை, சேவல்
புதன்..காடை, பசு
குரு..யானை, பசு
சுக்கிரன்..love birds, வெண் குதிரை
சனி..எருமை
இராகு... கருங்கோழி, எருமை
கேது..புறா , செம்மறி ஆடு
4. நெருப்பு ராசிகள்
நவகிரகங்களுக்குரிய உலோகங்களை தானம் செய்யலாம்.
உதாரணம் -
சூரியன் ..தாமிர பாத்திரம்
சந்திரன்..ஈய பாத்திரம்
செவ்வாய்..செம்பு பாத்திரம்
புதன்..பித்தளை பாத்திரம்
குரு..தங்க ஆபரணம்
சுக்கிரன்..வெள்ளி பாத்திரம்
சனி..இரும்பு பாத்திரம்
இராகு..இரும்பு பாத்திரம்
கேது...வெண்கல பாத்திரம்
சில உதாரணங்களை பார்ப்போம்..
1. தசாநாதன் சூரியன் மேஷத்தில் நின்று தசை நடத்துகிறார்..
இது தாது ராசி..எனவே சூரியனுக்கு உரிய உலோக தாதுவை தானமாக தர வேண்டும்..அதாவது தாமிர பாத்திரம்..
2. குரு, துலாத்தில் நின்று தசை நடத்துகிறார்..
இது காற்று ராசி..எனவே குருவின் காரக கல்வி, ( tuition ) , உபதேசம் போன்றவை ஏழை குழந்தைகளுக்கு ( குழந்தைகள் .
குருவின் காரகத்துவம் ) தருகின்ற போது கிரக நிவர்த்தி என்பது நிச்சயம்..
3. சந்திரன் மீனத்தில் இருந்து தசை நடத்துகிறார்..
இது நீர் ராசி..சந்திரன் வெண்மை, சந்திரன் நீர், சந்திரன் அரிசி ..இவற்றை இணைத்து மீன்களுக்கு அரிசி சாதம் உணவாக போடலாம்...
மீனத்தில் செவ்வாய் என்றால் , மீனம்... நீர், மீனகளுக்கு துவரம் பருப்பு சாதம் போடலாம்..கட்டாயம் தோஷ நிவர்த்தி உண்டு..
Sambho Mahadev 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக