"மகாளய பட்ச அமாவாசை 2022"
09-09-2022 முதல் 24-09-2022, ஆவணி மாதம் 24 தேதி, முதல் புரட்டாசி மாதம் 07 ஆம் தேதி வரை உள்ள 15 நாட்கள் வருகின்ற #மகாளய பட்ச அமாவாசை நாளாகும்.
முதலில் மகாளய பட்சம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்:-
#பட்சம் என்றால் 15 என பொருள், #மகாளயம் மிகப் பெரிய பாக்யம் எனப்படுவது, இந்த 15 தினங்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் மிக சிறப்பு வாய்ந்த அமாவாசை என்று நமக்கு சொல்லி சென்றுள்ளார்கள்.
பித்ரு உலகம் என்று ஒன்று உள்ளது. அதில் தான் நமது பித்ருக்கள் (இறந்தவர்கள்) வாழுமிடம். இந்த மகாளய அமாவாசை தினத்திற்கு மட்டும் தான் நம் இறந்த முன்னோர்கள், நம்மை எல்லாம் காண வருகை தந்து நாம் கொடுக்கும் தர்பண (எள்) த்தைப் பெற்று மகிழ்ந்து நமக்கு ஆசீர்வாதம் வழங்கி செல்வார்கள் என்பது ஐதீகமான உண்மையாக புராண வரலாறு கூறுகிறது.
அவ்வாறு அவர்கள் நம் இல்லம் தேடி வந்தவர்களை நாம் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு எள்தர்பணம் கொடுக்காமல் இருந்தோமேயானல் முன்னோர்கள் நம்மீது கோபம் கொண்டு, நமக்கு சாபமிட்டு, மீண்டும் வருத்தத்துடன் பித்ரு உலகைச் சென்று அடைவார்கள். நாம் அவர்களுக்கு எள் தர்பணம் செய்தோமேயனால் அதனை பெற்று மகிச்சியுடன் நம்மை ஆசீர்வதித்து வாழ்த்தி பித்ரு உலகிற்கு சந்தோஷமாக செல்வார்கள். இதுதான் ஐதிகமான உண்மையாகும்.
இந்த மகாளய அமாவாசை 15 நாளும் நாம் நம்முன்னோர்களுக்கும் தாய், தந்தை உறவுகளை இறந்தவர்களுக்கு அவசியம் திதி கொடுக்க வேண்டும். இந்த 15 நாளும் நாம் கொடுக்கும் திதிக்கு உண்டான பலா பலன்களை காண்போம்.
1.#பிரதமை திதி - தன லாபம் கிடைக்கும்.
2.#துவிதியை திதி - குழந்தை பேறு இல்லாதோர்க்கு சந்தான பாக்யம் கிட்டும்.
3.#திருதியை திதி - மனதிற்கு இனங்கிய திருமண வாழ்வு கிடைக்கும்.
4.#சதுர்த்தி திதி - நமக்கு எதிரிகளே இல்லாமல் போய்விடக் கூடும்.
5.#பஞ்சமி திதி - சகல விதமான சம்பத்துக்களும் கிட்டும்.
6.#சஷ்டி திதி - உலகப்புகழ் பெறுவதற்கான வளர்ச்சி உண்டாகும்.
7.#சப்தமி திதி - ஒரு தலைமை பதவி கிட்டும்.
8.#அஷ்டமி திதி - நல்லபுத்தி, ஞானம், அறிவு எல்லாம் தரும்.
9.#நவமி திதி - வாழ்க்கை நல்ல துணை அமையும்.
10.#தசமி திதி - நீண்ட நாள் தடை பட்ட காரியம் நடக்கும்.
11.#ஏகாதசி திதி - கல்வி, கேள்வி, வேத நலம் கிட்டும்.
12.#துவாதசி திதி - நீண்ட நாள் கணவான நகை ஆபரணங்கள் பலன் கிட்டும்.
13.#திரியோதசி திதி - அதீத சக்தி, ஆயுள், ஆரோக்ய மேன்மை தரும். (ஐஸ்வரியம்)
14.#சதுர்த்தசி திதி - துர்மரணங்களால் தொல்லை, பாவம் போன்ற நீங்கும்.
15.#அமாவாசை திதி மேலே சொன்ன அனைத்தும் ஒருங்கே கிடைக்கும்.
15 நாளும் காலையில் நாம் செய்தோமேயானல் விஷேச பலன்கள் நம்மை வந்து சேரும்.
இதனை நாம் எளிமையாக வீட்டிலே செய்யலாம்.
தாய், தந்தை இழந்தவர்களின் மகன். கருப்பு எள், தாம்பாளம், ஆசனபலகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து சுத்த நீர் கொண்டு பித்ருக்கள் நோக்கி வேண்டி எள் தண்ணீர் இரைத்து சூரிய பகவானை நோக்கி சூரிய காயத்திரி மந்திரம் சொல்லி வணங்கி அந்த எள் தண்ணீரை கால் படாமல் ஊற்றிவிட்டு, பூஜை அறையில் நீங்கள் வழிபாடு செய்து உங்கள் வழக்கமான பணிகளை செய்யலாம். இவ்வாறு 15 நாளும் செய்வதில் எவ்வித சிரமமும் இருக்காது.
இது செய்யும் போது பூஜை அறையில் 7 பொருள்கள் தேவை, அது பால், கங்கைதீர்த்தம், தேன், நெய், வெண்பட்டு கருப்பு எள், காலம் (நேரம்) 11 முதல் 11.30 இதற்கு உண்டான நேரம்.
மகன் இல்லை, மகள் உள்ளார் என்றால் எள் நீர் இரைக்க கூடாது. முன்னோர்களை நினைவு கூர்ந்து, பூஜை அறையில் நெய் வேத்யமாக இனிப்பு, பழம், போன்றவை வைத்து அவர்களை நினைத்து வழிபடலாம். கணவரை இழந்த பெண்கள் எள் நீர் இரைக்களாம்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவு, திருமண தடை, திருமண முறிவு, துர் மரணங்கள், குழந்தை இன்மை, கடன் தொல்லை, சந்தோசம் இல்லாமை, போன்றவைகள் வருவதற்கு முக்கிய காரணமே. பித்ருக்களின் தோஷமும், சாபமும் தான் இதிலிருந்து விடுபெற வருகின்ற மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருக்களுக்கு எள் தர்பணங்கள் செய்து, ஒருவருக்கு அன்னதானம் செய்து, காகத்திற்கு எள் சாதம் வைத்து பித்ருக்களை வணங்க எல்லாம் வளங்களும் பெற்று சந்தோசமாக வாழலாம்
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக