பரிகாரத்தின் வேர் எங்கே இருக்கின்றது?
உங்கள் ஜாதகத்தில் நடக்கின்ற தசா புக்தி அடிப்படையில், ( அவயோக தசை அல்லது பாதக தசை அல்லது அட்டமாதி பதி தசை etc ) பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் எதோ ஒரு தானம் அல்லது பரிகாரம் எனும் மன சமாதானத்திற்காக செய்து கொள்கின்ற நிலையில் இன்று மக்கள் இருக்கின்ற நிலையில் , இந்த பரிகாரம் செய்வதின் logic அல்லது formula என்னவென்று நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த பதிவு..
1. பரிகாரம் தேர்வு செய்யும் முன்பாக என்னென்ன காரணிகளை கணக்கில் கொள்ள வேண்டும்? ( The Factors to be considered )
1. ஜாதகத்தில் நடப்பு தசா நாதன் எந்த இராசியில் நிற்கின்றார்?
2. தசாநாதன் நிற்பது
தாது ராசியா?
மூல ராசியா?
ஜீவ ராசியா?
தாது ராசி என்றால் தங்கம் , வெள்ளி , பித்தளை, ஈயம், இரும்பு என்று தெரியும்?
அப்படியென்றால் அதில் நிற்கும் கிரகம் அடிப்படையில் அது தங்கமா ( குரு எனில் தங்கம், சனி என்றால் இரும்பு ) அல்லது இரும்பா என முடிவு செய்யும் திறன்.
மூல ராசி என்றால் தானியங்கள் என்று தெரியும்...
அப்படியென்றால் அதில் நிற்கின்ற தசா நாதன் குரு என்றால், கொண்டைக் கடலை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
ஜீவ ராசி என்றால் உயிருள்ள பறவை, விலங்குகள் என்று அர்த்தம்.
அப்படி என்றால் தனுசில் குரு என்றால் பசு என்றும் பகுத்து உணர நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்..
மீனத்தில் குரு என்றால் மீன்களுக்கு ( ஜீவ ராசி ) , கொண்டைகடலை கலந்த சாதம் என்று புரிந்து கொள்ளுங்கள்..
3. தசா நாதன் நிற்பது
நெருப்பு ராசியா?
நில ராசியா?
காற்று ராசியா?
நீர் ராசியா?
4. கால தேச வர்த்தமானம்..
குருவின் காரகத்துவதிற்கு ஏற்ப, வசதி படைத்தவர் என்றால் கோவிலுக்கு யானையை தானமாக வழங்குமாறு சொல்லலாம்..
அதே சமயத்தில் வந்தவன் ஏழை என்றால் , கோவில் யானைக்கு மஞ்சள் நிற வாழைப் பழம் வழங்க அறிவுரை வழங்கலாம்..
5. இத்துடன் தசாநாதன் நின்ற நட்சத்திர, நாள், ஹோரை,போன்றவற்றிற்கு ஏற்றது போன்று இதனை இன்னும் சற்று அதிக துல்லியமாக நீங்களே கணக்கிட்டு கொள்ள இயலும்..
மொத்தத்தில் கிரக காரகத்துவங்களை அதிகமாக படியுங்கள்..பாவக காரகத்துவ ங்களை இன்னும் அதிகமாக படியுங்கள்..
சர்வேஸ்வரன் நிச்சயம் அருள் புரிவாராக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக