ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜனவரி, 2021

சுக்கிரன் சனி இணைவு

 சுக்கிரன் சனி இணைவு, பார்வை ,பரிவர்த்தனை ..


அன்பு சொந்தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

சுக்கிரன் களத்திரகாரகன். சனி ஆயுள்காரகன் கர்ம கிரகம். இவ்விரண்டின் பார்வை சேர்க்கை பரிவர்த்தனை. மனித வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது.


1.இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு சிறப்பு மிக்கது அல்ல. சேர்க்கைப் பெற்ற இடமானது சுக்கிரனின் வீடாகவோ அல்லது சனியின் வீடாக இருக்குமாயின் ..சுபர் தொடர்பு பெரும் பொழுது அல்லது நட்பு வலுவுடன் இருக்கும் பொழுது பொருளாதார விஷயத்தில் நல்ல நிலையை வைக்கும் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டக் களமாக அமையும்.


2.ஆட்சி அல்லது உச்சம் பெற்ற சனியுடன் சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில், இருக்கும் பொழுது குறிப்பிட்ட தசா காலத்தில் சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகளை ஜாதகர் சந்திப்பார் என்பதை உணர்க. சுக்கிரன் என்பது பெண்கள் உறவுகள், சுக்கிரன் தொடர்பான உறவுகளில் அதிக ஈடுபாடு கொடுத்து பிறகு தசா முடிவதற்குள் அவமானப்பட வைக்கிறார்.

3.சுக்கிர தசையில் இந்த சுக்கிரன் சனி இணைவு, பார்வை பெற்ற சுக்கிரதசை, பெண் உறவுகள் குறிப்பாக அத்தை மாமியார் போன்ற உறவுகளில் விரிசல் ஏற்பட வைத்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது ..

4.இந்த சேர்க்கையை குரு பார்வையிடும் பொழுது, இவர்கள் செய்யும் தவறுகளுக்காக இவர்கள் மனம் வருந்துவார்கள், பிரிந்த உறவுகளை நினைத்து மீண்டும் சேர்வதற்கான வழியை தேடுவார்கள், இதே குரு பார்வை அல்லது சுபர் தொடர்பு இல்லாத இந்த சேர்க்கை, எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும் அடுத்த நிமிடமே மனதை மாற்றிக்கொள்வார்கள்.


5.இன்னும் சில ஜாதகங்களில், பாபத்துவமான அமைப்பில் ,இந்த சேர்க்கை ஏற்படும்பொழுது, குறிப்பிட்ட தசா காலத்தில், (Extra marital affairs) முறையற்ற உறவுகளை உருவாக்குகிறது. காரணம் இங்கே சுக்கிரன் களத்திர காரகன் என்பதால், அவர் பாவத்துவமான அமைப்பில் இத்தகைய உறவுகளை ஜாதகருக்கு உருவாக்குகிறார் .


6.சனி சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில், ஆட்சி உச்சம் பெற்ற அமைப்பில் பரிவர்த்தனை ஏற்படும் பொழுது, சம்பந்தப்பட்ட தசா காலங்களில் ஜாதகரின் பொருளாதார நிலைமை மிக நன்றாகவே இருக்கும். அதேநேரத்தில் சுக்கிரன் சார்ந்த நோய்களும் ஜாதகருக்கு உருவாக்கும். 


சிறுநீரகம், சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பிறப்புறுப்பு சார்ந்த நோய்களையும் ஜாதகருக்கு உருவாக்கும்.


7.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எந்த லக்னத்திலும், இந்த இணைவு சேர்க்கை பார்வை பெற்றவர்கள்,  சுப்பர் தொடர்பற்ற சம்பந்தப்பட்ட தசா காலத்தில், அங்கீகரிக்கப்படாத அல்லது முறையற்ற உறவுகளினால் அவமானப்பட நேரிடுகிறது, இவர்கள் குடும்பத்தில் முறையாக திதி தர்ப்பணம் செய்தல், பெண் சாபம் அல்லது குலதெய்வ சாபம் இவர்கள் குடும்பத்தில் இருக்குமாயின் ,முறைப்படி வருடத்திற்கு மூன்று அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களில் ஆவது சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வழங்குதல் போன்றவை இந்த சேர்க்கையினால், பார்வையினால் ஏற்படக்கூடிய தீய காரகத்துவத்தை சற்று கட்டுப்படுத்தும்.


நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் தொடர்புக்கு 9840290714

புதன், 26 ஆகஸ்ட், 2020

Avathar-jothida vilakkam

மகம் அதிபதி-கேது எண் 7

அவரின் மரம் ஆல மரம் உலகிலேயே பெரிய மரம் ஆல மரம்

அந்த மரம் kolkata வில் உள்ளது (7letter)

மன்னர் அலெக்சாண்டர் இந்தியாவில் மகத நாட்டை அதாவது மௌரிய பேரரசை எதிரத்து ப டை திரட்டி வந்தார் பகலில் போர் இரவுவில் அந்த ஆல மர அடியில் 7000 படை வீரர்கள் (கூட்டு தொகை 7) உறங்கினார்கள் என்பது வரலாற்று ஆதாரம்,,

இந்த மரத்தை கருவாக வைத்து அவதார் என்று படம் எடுத்து கோடி பணம் எடுத்த
 படத்தின் இயக்குனர்  ஜேம்ஸ் கேமரூன் 16/8/1954 இல் பிறந்தார்,, பிறந்த நாள் கூட்டு தொகை 7

அவதார் என்ற சொல்லும் இந்தியாவில் பயன்படுத்தும் சொல் ஆகும்,,,,

கேது விலங்கு சிங்கம் சிம்மம்,,
சூரியன் உச்சம் ஆகும் முதல் நட்சத்திரம் அஸ்வினி,,,

Avatar திரைப்பட வசூல் இன்றளவும் முதல் இடம்,,

ஜேம்ஸ் கேமரூன் இதை தான் கருவாக எடுத்தார் என்பதற்கு சான்று ராகு துணையுடன்,, மொகஞ்சதாரோ ராகு 2 என்ற பதிவில் பதி வேன்,,

வாழ்க்கை ஒரு நாடக மேடை ,, இந்த நாடக மேடையை இந்த ராகு கேது தான் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்
,, மற்ற கிரகங்கள எல்லாம் டம்மி என்றே உணரும் வகையில் அந்த பதிவு இருக்கும்,,

ஓம் ருத்ராய நமகhttps://cgepa.blogspot.com/2020/08/Avathar.html?m=1

வியாழன், 25 ஏப்ரல், 2019

பஞ்சபூத இராசிகளும் பரிகாரங்களும்

பரிகாரம் 

யார் யார் எப்படி
செய்ய பலன் தரும்
எல்லோருக்கும் ஒரே
முறை கை தராது

யார் யார் விளக்கு
ஏற்ற வேண்டும்

யார் யார் ஹோமங்கள்
வளர்க்க வேண்டும்

யார் யார் அபிஷேகம்
 செய்ய
வேண்டும்

மந்திரங்கள் யார்
சொல்ல வேண்டும்

ராசிகளை பஞ்ச பூத
அடிப்படையில் பார்த்து
அதன் வழியில் பரிகாரம்
செய்ய உதவும்

மேசம் சிம்மம் தனுசு
இவை நெருப்பு 🔥 இராசிகள்

ரிசபம் கன்னி மகரம்
இவை நில இராசிகள்

மிதுனம் துலாம் கும்பம்
காற்று இராசிகள்

கடகம் விருச்சிகம் மீனம்
நீர் இராசிகள்

எனவே இவ்வாறு பகுத்து
பார்த்து எந்த ராசியில் எந்த
கிரகம் நின்று என்ன தடைகள்
பிரச்சினைகள் தருகிறது என்று
ஆராய்ந்து உணர்ந்து பரிகாரம்
செய்ய உதவும் பலன் தரும்

நெருப்பு 🔥
ராசிகளுக்கு
ஹோமங்கள் வளர்த்தல்
விளக்கு போடுதல்
தீபாராதனை செய்தல்
கற்பூரம் ஏற்றல்

நிலம் இராசிகளுக்கு
தானம் கொடுத்தல்
கிரகங்களை பொருத்து

காற்று இராசிகளுக்கு
மந்திரங்கள் ஜெபித்தல்

நீர் இராசிகளுக்கு
அபிஷேகம் செய்தல்

இப்படி ஆராய்ந்து
பார்த்து செய்து பலன்
பெற வேண்டும்
எல்லாவற்றிற்கும்
எல்லோருக்கும்
ஒரே பரிகாரம் பலன்
தராது

ஆவடி சித்தரே சரணம்
சற்குருவே சரணம்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

Tamil names in Tamil New Year

தமிழ் ஆண்டுகளுக்கு எதுக்குங்க மொழிபெயர்ப்பு

1.(பிரபவ) நற்றோன்றல்
2.(விபவ) உயர்தோன்றல்
3.(சுக்ல) வெள்ளொளி
04.(பிரமோதூத) பேருவகை
05.(பிரசோற்பத்தி) மக்கட்செல்வம்
06.(ஆங்கீரச) அயல்முனி
07.(ஸ்ரீமுக) திருமுகம்
08.(பவ) தோற்றம்
09.(யுவ) இளமை
10.(தாது) மாழை
11.(ஈஸ்வர) ஈச்சுரம்
12.(வெகுதானிய) கூலவளம்
13.(பிரமாதி) முன்மை
14.(விக்கிரம) நேர்நிரல்
15.(விஷு) விளைபயன்
16.(சித்திரபானு) ஓவியக்கதிர்
17.(சுபானு) நற்கதிர்
18.(தாரண) தாங்கெழில்
19.(பார்த்திப) நிலவரையன்
20.(விய) விரிமாண்பு
21.(சர்வசித்து) முற்றறிவு / யாவுந்திறல்
22.(சர்வதாரி) முழுநிறைவு
23.(விரோதி) தீர்பகை
24.(விக்ருதி) வளமாற்றம்
25.(கர) செய்நேர்த்தி
26.(நந்தன) நற்குழவி
27.(விஜய) உயர்வாகை
28.(ஜய) வாகை
29.(மன்மத) காதன்மை
30.(துன்முகி) வெம்முகம்
31.(ஹேவிளம்பி) பொற்றடை
32.(விளம்பி) அட்டி
33.(விகாரி) எழில்மாறல்
34.(சார்வரி) வீறியெழல்
35.(பிலவ) கீழறை
36.(சுபகிருது) நற்செய்கை
37.(சோபகிருது) மங்கலம்
38.(குரோதி) பகைக்கேடு
39.(விசுவாசுவ) உலகநிறைவு
40.(பரபாவ) அருட்டோற்றம்
41.(பிலவங்க) நச்சுப்புழை
42.(கீலக) பிணைவிரகு
43.(சௌமிய) அழகு
44.(சாதாரண) பொதுநிலை
45.(விரோதகிருது) இகல்வீறு
46.(பரிதாபி) கழிவிரக்கம்
47.(பிரமாதீச) நற்றலைமை
48.(ஆனந்த) பெருமகிழ்ச்சி
49.(ராட்சச) பெருமறம்
50.(நள) தாமரை
51.(பிங்கள) பொன்மை
52.(காளயுக்தி) கருமைவீச்சு
53.(சித்தார்த்தி) முன்னியமுடிதல்
54.(ரௌத்திரி) அழலி
55.(துன்மதி) கொடுமதி
56.(துந்துபி) பேரிகை
57.(ருத்ரோத்காரி) ஒடுங்கி
58.(ரக்தாட்சி) செம்மை
59.(குரோதன) எதிரேற்றம்
60.(அட்சய) வளங்கலன்

விகாரி வருடம்

🕉
*ஓம் ஸ்ரீ பச்சைவாழியம்மன் துணை*🕉

ஜோதிட அன்பர்கள்,மித்திரர்கள்,சகோதர/சகோதரிகள்
அனைவருக்கும்
சித்திரை 1  ஆம்தேதி
(14.04.2019) நாளில்
இனிய ஸ்ரீ விகாரி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐🤝🙏

💐 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு சூரியன் ☀️ நுழையும் காலம் வருஷ ஸ்ங்கராந்தி ஆகும்.சித்திரையில் சூரியன் ☀️ நுழையும் காலமாக சொல்லப்படுகிறது (சித்திரை 1 ஆம் தேதி).
மேஷத்தில் சூரியன் ☀️ நுழையும் காலம் விஷூ புண்யகாலம்.
இன் நாளில் அனைவரும் ஐயப்ப வழிபாடு செய்வது சூரியன் ☀️ உச்ச ராசியான சிவ வழிபாடு,சிவவீர ஆஞ்சினேயர், ஸ்ரீராமனை வழிபாடு செய்வதும் சிறப்பினை தரும்🌹

👏இந்த வருட துவக்கம்
முதல் முடிவு வரை அனைவருக்கும்,
அனைத்து
ராசியினருக்கும் நல்லது நடக்கும்
என்பதை இந்த வருட
பலன்முலம் காணலாம்👏👍🌹

😍தமிழ் வருடப்பிறப்பின்  ராஜா - சனிஸ்வரன் ஆகிறார்.
( *Service to man is service to God.Service to man is service to God is a great purpose. A human being, those give the service to man, so it is service to God*.)
வருட வருட வரும் யுகாதி தினம் தான் தெலுங்கு வருடப்பிறப்பு எந்த நாள் வருகிறதோ அந்த நாளில்(06.04.2019) அதிபதியே இந்த ஆண்டின் ராஜா. சனிக்கிழமையில் வந்தமையால் இந்த ஆண்டிற்கான ராஜா - நீதி, நேர்மைக்கும் காரக கிரகமான தர்மத்தின் தலைவன் நம்ம ராசி சக்கரத்தின் மகர,கும்ப வீட்டின அதிபதி உண்டானவர், காலப்புருஷனுக்கு 10க்கும் 11 க்கும் அதிபதியான *சனிஸ்வரன்* தான் இந்த ஆண்டின் ராஜா 🤴 ஆகிறார்🤩

ராஜாவுக்கு மந்திரி எப்படி இந்த ஆண்டின் பக்க பலமாக செயல் பட போகிறார் என்பதையும் பார்ப்போம்🤝🌹

🌹அதே போல்  இந்த ஸ்ரீவிகாரி ஆண்டின்  மந்திரி யார்?

🌞சித்திரை 1 ஆம்(14.04.2019) தேதியின் கிழமையின்  அதிபதி யாரோ அவரே இந்த ஆண்டின் மந்திரி.

அப்போ - சித்திரை 1 தேதி ஞாயிறு கிழமை. இந்த ஆண்டு மந்திரி ஞாயிறு ஒளியில் *சூரியன்*☀️ பிரகாசிக்க இருக்கிறார்.

இந்த ஆண்டின் மந்திரி - *சூரியன்*☀️ஆவார் 👑.

கிரகங்களில் சூரியனுக்கு சனி பகை என்றாலும் இந்த ஆண்டு அப்படி ஆகாது.

எப்படி....
இதோ இப்படி👇

இந்த ஆண்டில் சனி  தனுசு வீடான் நெருப்பு 🔥 வீட்டில் இருக்கிறார்.
காலப்புருஷனுக்கு 1 ல் சித்திரையில் சூரியன் நெருப்பு 🔥 வீட்டில்  இருந்தும் காலப்புருஷனுக்கு 5 ஆம் அதிபதியான சூரியனை  நெருப்பு 🔥 வீட்டில் இயக்குகிறார்(1,5,9🔼).

🎯இந்த ஆண்டுல் ராஜாவான சனி பார்வை மந்திரியான சூரியனுக்கு திரிகோண பார்வை தொடர்பு இருப்பதால் அரசியல்  மாற்றம் தர்மத்தின் வழியாக இருக்கும்.
மக்கள் பணம் 💰 வாங்கினாலும் வாங்காத போனாலும் நீதி தர்மம் வெல்லும் நிச்சயம் இந்த ஆண்டில்.


🏹சனி ஒரு குளிர்ந்த கிரகம். இந்த ஆண்டின் ராஜா சனி நெருப்பு வீட்டில் இருந்து இயங்குவதால் இந்த ஆண்டு பொது மக்களுக்கு அதிக வெட்பம்  இல்லாத நிலையில் பாதுகாத்து கொள்வார்.
நாட்டிற்கு தேவையான அளவிற்கு  மழையினை தருவார் ராஜா சனி.

அரசு உதவி பல ஏழை மக்களுக்கு கிடைத்து நன்மை அடைவார்கள்.

🇮🇳 இந்தியா வேற லெவல்லுக்கு செல்லும் என்பது இந்த ஆண்டின் வீதி.

💪வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகும் நிலை ஏற்படும்.
தொழிலாளர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள்🤝

👍வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை போல பல இளைஞர்கள் செய்யும் ஆபார செயல்களை கண்டு வியப்பாக பார்க்க முடியும்👍
இதை பார்த்து ரசிக்க ஆவல் கொண்டவர் நம்முடன் இல்லை என்றாலும் இன்னும் பல இளைஞர்கள் நெஞ்சில் குடியிருக்கும் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கு உரிய டாக்டர் திரு.அப்துல் கலாம் ஐயா கனவை நினைவாக்க 2020 டார்கட் aim achieve ராசி என்பது தனுசு.
 தனுசுல் தானே இந்த ஆண்டு ராஜா சனி உள்ளார்.
அவர் மெதுவாக நடத்தி காட்டுவார் நிச்சயம்.
கோ.ராகு துணை புரிவார்.
ராகு முன்னோர்கள்,திரு கலாம் ஐயா முஸ்லிம் என்பதாலும் அவர் கண்ட கனவு நடக்கும் எனலாம்.

ஆன்மீக பலம் கூடும்.
யோக நெறியில் பலர் ஈடுபடுத்தி கொள்வார்கள்.
தனுசில் சனி+குரு+கேது இனையும்
பல போலி குருமார்கள் அழிவது உறுதி.

இது வரை திருமணம் ஆகாத ஆண்/பெண்களுக்கு திருமணம் நிகழும் நிச்சயம்👍🌹

நெருப்பினால் இந்த ஆண்டு பல சேதமும்,
அதே சமயத்தில் மின் துறை பல சாதனைகள் முன்னேற்றம்  நிகழும்.

ஏழை மக்கள் செய்தொழில்  முன்னேற்றம்  கிடைக்கும் நீதி,நேர்மை நாணயம், நம்பிக்கை இருந்தால் மட்டும்.

இளைஞர்களின்  நுண்ணிய சிந்தனை 💭 தொழில்நுட்ப மேன்மை பெரும் மிதுனத்தில் ராகு இருப்பதால்.

லக்னாதிபதி சந்திரன் ஆட்சி பலம் பெற்று இருப்பதாலும் சந்திரன் என்றாலே மாற்றம் என்பதால் நமக்கு நல்மாற்றம் தரும் ஆண்டு.

லக்ன சாராதிபதி சனி அவர் தான் இந்த ஆண்டின் ராஜாவும் கூட அவர் 6 ல் அமர்ந்து சுபகிரகம் அதிபதி குரு வீடான நட்பு வீடான குருவுடனே சேர்ந்து இருப்பதால் கூடுதல் நன்மை விளையும்.

சனியின் 3 ஆம் பார்வையாக தன் வீட்டை 3 ஆம் பார்வையாக பார்ப்பதாலும் அதில் நண்பரான  சுக்ரன் இருப்பதாலும் அது காலப்புருஷனுக்கு 11 ஆம் இடத்தில் இருப்பதாலும் எந்த முயற்சியும் லாபம் தரும்.சனி 7 ஆம் பார்வையாக அதில் அமர்ந்து இருக்கும் ராகு வை பார்த்து சனிக்கு மற்றொரு நண்பனான இரு புதன் வீட்டை 7 பார்வையாகவும் 10 ஆம் பார்வையாக பார்ப்பதால் நினைத்து எல்லாமே நடக்கும் நல்லது நிலைக்கும்.

குரு வக்ரம் என்பதால் நற்பலனை லேட்டா செஞ்சாலும்  சனி பகவான் லேட்டஸ்டா தான் பலன்களை அள்ளி தருவது உறுதி.

*நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்*

🙏நன்றி🌹


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...