remdesivir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
remdesivir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

Black-White- YellowFungus now spread

 

புதிதாக பரவும் மஞ்சள் பூஞ்சை நோய்-<>கருப்பு, வெள்ளை பங்கஸை விட ஆபத்தானது--><அறிகுறிகள் என்ன?



திருச்சி : நாடு முழுக்க கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மஞ்சள் பூஞ்சை என்ற ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரத்தில் நோயாளி ஒருவர் மஞ்சள் பூஞ்சை அதாவது YellowFungus நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.



மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவு நிபுணர் பிரிஜ் பால் தியாகி தலைமையிலான மருத்துவர் குழு அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருகிறது

.ஆபத்தானது
கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை ஆகியவற்றை விட மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். ஏனெனில், உடலில் ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டால் அது சரியாகி குணம் அடைவதற்கு மிகவும் காலம் பிடிக்கும் என்ற மோசமான நிலைக்கு மஞ்சள் பூஞ்சை, நோயாளிகளை தள்ளி விடும் என்கிறார்கள்..



சிகிச்சைகள்  என்ன? 

உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது. எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பூஞ்சைக்கும் அம்போட்டெரிசின் பி, ஊசி செலுத்தி கொள்வது மட்டும்தான் தற்போதைய சிகிச்சை முறையாக இருக்கிறது. பிற பூஞ்சை நோய்களுக்கும் இந்த மருந்து ஊசியைதான் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.


மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்

மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகளாக, சோம்பல், பசி குறைவது அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு, நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்

காரணம் என்ன?

மோசமான சுகாதார சூழ்நிலை இருந்தால்தான் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர். உங்களது வீடு மற்றும் நீங்கள் புழங்கக்கூடிய பகுதிகளை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்வது, இந்த பூஞ்சை நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும்.

கவனம் மக்களே....

வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கழிவறை உரிய வகையில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மலம் கழிவறையில் தேங்கி இருக்கக்கூடாது. சாப்பிடும் பொருட்களிலும், கழிவு பொருட்களிலும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்

புதன், 5 மே, 2021

Remdesivir drug in tamilnadu

 Remdesivir An Alternative Antiviral Drug to Fight against COVID-19

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை, 

கொரோனா தொற்றை குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது



தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை நிலவுகிறது. 

இதனிடையே தென்மாவட்ட சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்காக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...