சுக்கிரன் சனி இணைவு, பார்வை ,பரிவர்த்தனை ..
அன்பு சொந்தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
சுக்கிரன் களத்திரகாரகன். சனி ஆயுள்காரகன் கர்ம கிரகம். இவ்விரண்டின் பார்வை சேர்க்கை பரிவர்த்தனை. மனித வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது.
1.இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு சிறப்பு மிக்கது அல்ல. சேர்க்கைப் பெற்ற இடமானது சுக்கிரனின் வீடாகவோ அல்லது சனியின் வீடாக இருக்குமாயின் ..சுபர் தொடர்பு பெரும் பொழுது அல்லது நட்பு வலுவுடன் இருக்கும் பொழுது பொருளாதார விஷயத்தில் நல்ல நிலையை வைக்கும் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டக் களமாக அமையும்.
2.ஆட்சி அல்லது உச்சம் பெற்ற சனியுடன் சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில், இருக்கும் பொழுது குறிப்பிட்ட தசா காலத்தில் சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகளை ஜாதகர் சந்திப்பார் என்பதை உணர்க. சுக்கிரன் என்பது பெண்கள் உறவுகள், சுக்கிரன் தொடர்பான உறவுகளில் அதிக ஈடுபாடு கொடுத்து பிறகு தசா முடிவதற்குள் அவமானப்பட வைக்கிறார்.
3.சுக்கிர தசையில் இந்த சுக்கிரன் சனி இணைவு, பார்வை பெற்ற சுக்கிரதசை, பெண் உறவுகள் குறிப்பாக அத்தை மாமியார் போன்ற உறவுகளில் விரிசல் ஏற்பட வைத்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது ..
4.இந்த சேர்க்கையை குரு பார்வையிடும் பொழுது, இவர்கள் செய்யும் தவறுகளுக்காக இவர்கள் மனம் வருந்துவார்கள், பிரிந்த உறவுகளை நினைத்து மீண்டும் சேர்வதற்கான வழியை தேடுவார்கள், இதே குரு பார்வை அல்லது சுபர் தொடர்பு இல்லாத இந்த சேர்க்கை, எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும் அடுத்த நிமிடமே மனதை மாற்றிக்கொள்வார்கள்.
5.இன்னும் சில ஜாதகங்களில், பாபத்துவமான அமைப்பில் ,இந்த சேர்க்கை ஏற்படும்பொழுது, குறிப்பிட்ட தசா காலத்தில், (Extra marital affairs) முறையற்ற உறவுகளை உருவாக்குகிறது. காரணம் இங்கே சுக்கிரன் களத்திர காரகன் என்பதால், அவர் பாவத்துவமான அமைப்பில் இத்தகைய உறவுகளை ஜாதகருக்கு உருவாக்குகிறார் .
6.சனி சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில், ஆட்சி உச்சம் பெற்ற அமைப்பில் பரிவர்த்தனை ஏற்படும் பொழுது, சம்பந்தப்பட்ட தசா காலங்களில் ஜாதகரின் பொருளாதார நிலைமை மிக நன்றாகவே இருக்கும். அதேநேரத்தில் சுக்கிரன் சார்ந்த நோய்களும் ஜாதகருக்கு உருவாக்கும்.
சிறுநீரகம், சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பிறப்புறுப்பு சார்ந்த நோய்களையும் ஜாதகருக்கு உருவாக்கும்.
7.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எந்த லக்னத்திலும், இந்த இணைவு சேர்க்கை பார்வை பெற்றவர்கள், சுப்பர் தொடர்பற்ற சம்பந்தப்பட்ட தசா காலத்தில், அங்கீகரிக்கப்படாத அல்லது முறையற்ற உறவுகளினால் அவமானப்பட நேரிடுகிறது, இவர்கள் குடும்பத்தில் முறையாக திதி தர்ப்பணம் செய்தல், பெண் சாபம் அல்லது குலதெய்வ சாபம் இவர்கள் குடும்பத்தில் இருக்குமாயின் ,முறைப்படி வருடத்திற்கு மூன்று அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களில் ஆவது சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வழங்குதல் போன்றவை இந்த சேர்க்கையினால், பார்வையினால் ஏற்படக்கூடிய தீய காரகத்துவத்தை சற்று கட்டுப்படுத்தும்.
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் தொடர்புக்கு 9840290714