சனி, 20 ஆகஸ்ட், 2022

ஜோதிடத்தில் பரிகாரமுறைகளின் basic சூத்திரம்..

 ஜோதிடத்தில் பரிகாரமுறைகளின் basic சூத்திரம்..


காலச்சக்கர தத்துவத்தின் அடிப்படையில் தோஷம் பெற்ற ஒரு கிரகத்தின் தசை or புக்தி நடைபெறும் போது அதிலிருந்து மீண்டு வருவதற்காக சில பரிகாரங்களை சொல்கிறோம்...


ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை கொண்டது..அதனால் தான்  ஒவ்வொரு பரிகாரமும் சில வேறுபாடுகளை தம்முள் கொண்டே இருக்கின்றன.


Basic formula எனும் அடிப்படை சூத்திரம் தெரிந்து கொண்டால், நீங்களே நடக்கும் தசா புக்திக்கு ஏற்ற பரிகார முறைகளை தேர்வு செய்து கொள்ளலாம்..


எதோ ஒரு கிரகம் உங்கள் ஜாதகத்தில் தசை நடத்துகிறது..தசாநாதன் எந்த ராசி யில் நிற்கின்றார் என்பதை பொறுத்து அந்த ராசிக்கு ஏற்ற பொருட்களை தானம் செய்வதை தேர்வு செய்யுங்கள்.


1. தாது ராசிகள்


மேஷம், கடகம், துலாம்,மகரம்.


பூமியில் இயற்கையாக கிடைக்கின்ற தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள், மற்றும்  இதர தாது பொருட்களை தானம் செய்ய , தோஷம் பெற்ற கிரகத்தின் தசை, சற்று விடுதலை தருகிறது..


உதாரணம்..


சூரியன்..மாணிக்க கல்

சந்திரன்.. முத்து

செவ்வாய்..பவளம்

புதன்..மரகதம்

குரு..புஷ்பராகம்

சுக்கிரன்..வைரம்

சனி..நீலக்கல்

இராகு..கோமேதகம்

கேது..வைடூரியம்


2. மூல ராசிகள்


ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.


நாம் உயிர் வாழ இயற்கை தருகின்ற காய், கனி, மலர்கள், நவதானியங்கள் போன்றவற்றை தானம் செய்ய,  தோஷம் பெற்ற கிரகத்தின் தசை ,சற்று விடுதலை தருகிறது.


உதாரணம்..


சூரியன்..கோதுமை

சந்திரன்..அரிசி

செவ்வாய்..துவரை

புதன்..பச்சை பயிறு

குரு..கொண்டை கடலை

சுக்கிரன்..வெண் மொச்சை

சனி.. எள்ளு

இராகு..கருப்பு உளுந்து

கேது..கொள்ளு


3. ஜீவ ராசிகள்


மிதுனம், கன்னி, தனுசு, மீனம்


பூமியில் உள்ள உயிரினங்களை தானம் செய்யும் யுக்தி. உதாரணமாக கோதானம் எருமை , காளை, சேவல், கோழி, குதிரை, ஆடு போன்ற ஜீவராசிகளை தானம் செய்ய, தோஷம் பெற்ற கிரகத்தின் தசை சற்று விடுதலை தருகிறது.


உதாரணம்..


சூரியன்.. காளை மாடு

சந்திரன்..வாத்து.

செவ்வாய்..வெள்ளாடு, குதிரை, சேவல்

புதன்..காடை, பசு

குரு..யானை, பசு

சுக்கிரன்..love birds, வெண் குதிரை

சனி..எருமை

இராகு... கருங்கோழி, எருமை

கேது..புறா , செம்மறி ஆடு


4. நெருப்பு ராசிகள்


நவகிரகங்களுக்குரிய உலோகங்களை தானம் செய்யலாம்.


உதாரணம் - 

சூரியன் ..தாமிர பாத்திரம் 

சந்திரன்..ஈய பாத்திரம்

செவ்வாய்..செம்பு பாத்திரம்

புதன்..பித்தளை பாத்திரம்

குரு..தங்க ஆபரணம்

சுக்கிரன்..வெள்ளி பாத்திரம்

சனி..இரும்பு பாத்திரம்

இராகு..இரும்பு பாத்திரம்

கேது...வெண்கல பாத்திரம்


சில உதாரணங்களை பார்ப்போம்..


1. தசாநாதன் சூரியன் மேஷத்தில் நின்று தசை நடத்துகிறார்..


இது தாது ராசி..எனவே சூரியனுக்கு உரிய உலோக தாதுவை தானமாக தர வேண்டும்..அதாவது தாமிர பாத்திரம்..


2. குரு, துலாத்தில் நின்று தசை நடத்துகிறார்..


இது காற்று ராசி..எனவே குருவின் காரக கல்வி, ( tuition ) , உபதேசம் போன்றவை ஏழை குழந்தைகளுக்கு ( குழந்தைகள் .

குருவின் காரகத்துவம் ) தருகின்ற போது கிரக நிவர்த்தி என்பது நிச்சயம்..


3. சந்திரன் மீனத்தில் இருந்து தசை நடத்துகிறார்..


இது நீர் ராசி..சந்திரன் வெண்மை, சந்திரன் நீர், சந்திரன் அரிசி ..இவற்றை இணைத்து மீன்களுக்கு அரிசி சாதம் உணவாக போடலாம்...


மீனத்தில் செவ்வாய் என்றால் , மீனம்... நீர், மீனகளுக்கு துவரம் பருப்பு சாதம் போடலாம்..கட்டாயம் தோஷ நிவர்த்தி உண்டு..


Sambho Mahadev 🙏



 "மகாளய பட்ச அமாவாசை 2022"


09-09-2022 முதல் 24-09-2022, ஆவணி மாதம் 24 தேதி, முதல் புரட்டாசி மாதம் 07 ஆம் தேதி வரை உள்ள 15 நாட்கள் வருகின்ற #மகாளய பட்ச அமாவாசை நாளாகும்.


முதலில் மகாளய பட்சம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்:-


#பட்சம் என்றால் 15 என பொருள், #மகாளயம் மிகப் பெரிய பாக்யம் எனப்படுவது, இந்த 15 தினங்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் மிக சிறப்பு வாய்ந்த அமாவாசை என்று நமக்கு சொல்லி சென்றுள்ளார்கள்.


பித்ரு உலகம் என்று ஒன்று உள்ளது. அதில் தான் நமது பித்ருக்கள் (இறந்தவர்கள்) வாழுமிடம். இந்த மகாளய அமாவாசை தினத்திற்கு மட்டும் தான் நம் இறந்த முன்னோர்கள், நம்மை எல்லாம் காண வருகை தந்து நாம் கொடுக்கும் தர்பண (எள்) த்தைப் பெற்று மகிழ்ந்து நமக்கு ஆசீர்வாதம் வழங்கி செல்வார்கள் என்பது ஐதீகமான உண்மையாக புராண வரலாறு கூறுகிறது.


அவ்வாறு அவர்கள் நம் இல்லம் தேடி வந்தவர்களை நாம் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு எள்தர்பணம் கொடுக்காமல் இருந்தோமேயானல் முன்னோர்கள் நம்மீது கோபம் கொண்டு, நமக்கு சாபமிட்டு, மீண்டும் வருத்தத்துடன் பித்ரு உலகைச் சென்று அடைவார்கள். நாம் அவர்களுக்கு எள் தர்பணம் செய்தோமேயனால் அதனை பெற்று மகிச்சியுடன் நம்மை ஆசீர்வதித்து வாழ்த்தி பித்ரு உலகிற்கு சந்தோஷமாக செல்வார்கள். இதுதான் ஐதிகமான உண்மையாகும்.


இந்த மகாளய அமாவாசை 15 நாளும் நாம் நம்முன்னோர்களுக்கும் தாய், தந்தை உறவுகளை இறந்தவர்களுக்கு அவசியம் திதி கொடுக்க வேண்டும். இந்த 15 நாளும் நாம் கொடுக்கும் திதிக்கு உண்டான பலா பலன்களை காண்போம்.


1.#பிரதமை திதி - தன லாபம் கிடைக்கும்.


2.#துவிதியை திதி - குழந்தை பேறு இல்லாதோர்க்கு சந்தான பாக்யம் கிட்டும்.


3.#திருதியை திதி - மனதிற்கு இனங்கிய திருமண வாழ்வு கிடைக்கும்.


4.#சதுர்த்தி திதி - நமக்கு எதிரிகளே இல்லாமல் போய்விடக் கூடும்.


5.#பஞ்சமி திதி - சகல விதமான சம்பத்துக்களும் கிட்டும்.


6.#சஷ்டி திதி - உலகப்புகழ் பெறுவதற்கான வளர்ச்சி உண்டாகும்.


7.#சப்தமி திதி - ஒரு தலைமை பதவி கிட்டும்.


8.#அஷ்டமி திதி - நல்லபுத்தி, ஞானம், அறிவு எல்லாம் தரும்.


9.#நவமி திதி - வாழ்க்கை நல்ல துணை அமையும்.


10.#தசமி திதி - நீண்ட நாள் தடை பட்ட காரியம் நடக்கும்.


11.#ஏகாதசி திதி - கல்வி, கேள்வி, வேத நலம் கிட்டும்.


12.#துவாதசி திதி - நீண்ட நாள் கணவான நகை ஆபரணங்கள் பலன் கிட்டும்.


13.#திரியோதசி திதி - அதீத சக்தி, ஆயுள், ஆரோக்ய மேன்மை தரும். (ஐஸ்வரியம்)


14.#சதுர்த்தசி திதி - துர்மரணங்களால் தொல்லை, பாவம் போன்ற நீங்கும்.


15.#அமாவாசை திதி மேலே சொன்ன அனைத்தும் ஒருங்கே கிடைக்கும்.

 

15 நாளும் காலையில் நாம் செய்தோமேயானல் விஷேச பலன்கள் நம்மை வந்து சேரும்.


இதனை நாம் எளிமையாக வீட்டிலே செய்யலாம்.


தாய், தந்தை இழந்தவர்களின் மகன். கருப்பு எள், தாம்பாளம், ஆசனபலகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து சுத்த நீர் கொண்டு பித்ருக்கள் நோக்கி வேண்டி எள் தண்ணீர் இரைத்து சூரிய பகவானை நோக்கி சூரிய காயத்திரி மந்திரம் சொல்லி வணங்கி அந்த எள் தண்ணீரை கால் படாமல் ஊற்றிவிட்டு, பூஜை அறையில் நீங்கள் வழிபாடு செய்து உங்கள் வழக்கமான பணிகளை செய்யலாம். இவ்வாறு 15 நாளும் செய்வதில் எவ்வித சிரமமும் இருக்காது.


இது செய்யும் போது பூஜை அறையில் 7 பொருள்கள் தேவை, அது பால், கங்கைதீர்த்தம், தேன், நெய், வெண்பட்டு கருப்பு எள், காலம் (நேரம்) 11 முதல் 11.30 இதற்கு உண்டான நேரம்.


மகன் இல்லை, மகள் உள்ளார் என்றால் எள் நீர் இரைக்க கூடாது. முன்னோர்களை நினைவு கூர்ந்து, பூஜை அறையில் நெய் வேத்யமாக இனிப்பு, பழம், போன்றவை வைத்து அவர்களை நினைத்து வழிபடலாம். கணவரை இழந்த பெண்கள் எள் நீர் இரைக்களாம்.


குடும்பத்தில் சண்டை, சச்சரவு, திருமண தடை, திருமண முறிவு, துர் மரணங்கள், குழந்தை இன்மை, கடன் தொல்லை, சந்தோசம் இல்லாமை, போன்றவைகள் வருவதற்கு முக்கிய காரணமே. பித்ருக்களின் தோஷமும், சாபமும் தான் இதிலிருந்து விடுபெற வருகின்ற மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருக்களுக்கு எள் தர்பணங்கள் செய்து, ஒருவருக்கு அன்னதானம் செய்து, காகத்திற்கு எள் சாதம் வைத்து பித்ருக்களை வணங்க எல்லாம் வளங்களும் பெற்று சந்தோசமாக வாழலாம் 


நன்றி!

 பரிகாரத்தின் வேர் எங்கே இருக்கின்றது?


உங்கள் ஜாதகத்தில் நடக்கின்ற தசா புக்தி அடிப்படையில், ( அவயோக தசை அல்லது பாதக தசை அல்லது அட்டமாதி பதி தசை etc ) பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் எதோ ஒரு தானம் அல்லது பரிகாரம் எனும் மன சமாதானத்திற்காக செய்து கொள்கின்ற நிலையில் இன்று மக்கள் இருக்கின்ற நிலையில் , இந்த பரிகாரம் செய்வதின் logic அல்லது formula என்னவென்று  நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த பதிவு..


1. பரிகாரம் தேர்வு செய்யும் முன்பாக என்னென்ன காரணிகளை கணக்கில் கொள்ள வேண்டும்? ( The Factors to be considered )


1. ஜாதகத்தில் நடப்பு தசா நாதன் எந்த இராசியில் நிற்கின்றார்?


2. தசாநாதன் நிற்பது 


தாது ராசியா?

மூல ராசியா?

ஜீவ ராசியா?


தாது ராசி என்றால் தங்கம் , வெள்ளி , பித்தளை, ஈயம், இரும்பு என்று தெரியும்?


அப்படியென்றால் அதில் நிற்கும் கிரகம் அடிப்படையில் அது தங்கமா ( குரு எனில் தங்கம், சனி என்றால் இரும்பு ) அல்லது இரும்பா என முடிவு செய்யும் திறன்.


மூல ராசி என்றால் தானியங்கள் என்று தெரியும்...


அப்படியென்றால் அதில் நிற்கின்ற தசா நாதன் குரு என்றால், கொண்டைக் கடலை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..


ஜீவ ராசி என்றால் உயிருள்ள பறவை, விலங்குகள் என்று அர்த்தம்.


அப்படி என்றால் தனுசில் குரு என்றால் பசு என்றும் பகுத்து உணர நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்..


மீனத்தில் குரு என்றால் மீன்களுக்கு ( ஜீவ ராசி ) , கொண்டைகடலை கலந்த சாதம் என்று புரிந்து கொள்ளுங்கள்..


3. தசா நாதன் நிற்பது


நெருப்பு ராசியா?

நில ராசியா?

காற்று ராசியா?

நீர் ராசியா?


4. கால தேச வர்த்தமானம்..


குருவின் காரகத்துவதிற்கு ஏற்ப, வசதி படைத்தவர் என்றால் கோவிலுக்கு யானையை தானமாக வழங்குமாறு  சொல்லலாம்..


அதே சமயத்தில் வந்தவன் ஏழை என்றால் , கோவில் யானைக்கு மஞ்சள் நிற வாழைப் பழம் வழங்க அறிவுரை வழங்கலாம்..


5. இத்துடன் தசாநாதன் நின்ற நட்சத்திர, நாள், ஹோரை,போன்றவற்றிற்கு ஏற்றது போன்று இதனை இன்னும் சற்று அதிக துல்லியமாக நீங்களே கணக்கிட்டு கொள்ள இயலும்..


மொத்தத்தில் கிரக காரகத்துவங்களை அதிகமாக படியுங்கள்..பாவக காரகத்துவ ங்களை இன்னும் அதிகமாக படியுங்கள்..


சர்வேஸ்வரன் நிச்சயம் அருள் புரிவாராக



Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...